மேலும் அறிய

தற்கொலை பண்ணிகலாம்னு யோசிச்சேன்...மேடையில் உணர்ச்சிவசப்பட்ட பா ரஞ்சித்

தான் பள்ளியில் படிக்கும் போது தனது அம்மா படும் கஷ்டத்தைப் பார்த்து தற்கொலை செய்துகொள்ள யோசித்ததாக இயக்குநர் பா ரஞ்சித் தெரிவித்துள்ளார்

பாட்டில் ராதா

பா ரஞ்சித் தயாரிப்பில் தினகரன் சிவலிங்கம் இயக்கியுள்ள படம் பாட்டில் ராதா. குரு சோமசுந்தரம், சஞ்சனா நடராஜன், ஜான் விஜய், மாறன், ஆண்டனி, பரி இளவழகன், ஆறுமுகவேல், அபி ராமையா, ஜே.பி.குமார், கே.எஸ். கருணா பிரசாத், மாலதி அசோக் நவின், சுஹாசினி சஞ்சீவ், சிரஞ்சீவி, ஓவியர் சௌ. செந்தில், நவீன் ஜார்ஜ் தாமஸ், அனீஷா, மாதவி ராஜ், கலா குமார் (ஜெய பெருமாள்), அன்பரசி, சேகர் நாராயணா உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். குடிப்பழக்கத்தை மையமாக வைத்து காமெடி டிராவாக உருவாகியிருக்கும் இப்படம் வரும் ஜனவரி 24 ஆம் தேதி திரையரங்கில் வெளியாக இருக்கும் நிலையில் இப்பத்தின் டிரைலர் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. இயக்குநர் மிஸ்கின் , வெற்றிமாறன் , லிங்குசாமி , பா ரஞ்சித் உள்ளிட்ட இயக்குநர்கள் இப்படத்தில் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டார்கள். நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் ரஞ்சித் தான் பள்ளி படிக்கும்போது தற்கொலை செய்துகொள்வது பற்றி யோசித்ததாக பா ரஞ்சித் தெரிவித்தார்

தற்கொலை செய்துகொள்ள நினைத்தேன்

" என் வீட்டில் என் அம்மா ரொம்ப கஷ்டப்பட்டிருக்கிறார். என் அப்பா எங்களுக்கு எல்லாமே செய்திருக்கிறார். எங்கள் கல்வி , சாப்பாடு , டிரஸ் எல்லா விஷயங்கள் பற்றியும் அவர் யோசிப்பார். ஆனால் குடி என்று வரும் போது அவர் தன்னை இழந்துவிடுவார். என் அம்மா அதனால் நிறைய கஷ்டப்பட்டார்கள். ஒரு நாள் நான் 12 ஆவது படிக்கும்போது என் அம்மா படும் கஷ்டத்தைப் பார்த்து தற்கொலை செய்துகொள்ளலாமா என்று எனக்கு ஒரு நொடி தோன்றியது. இது என் வீட்டில் யாருக்கும் தெரியாது என் அண்ணன் இங்கே இருக்கிறார். குடி என்பது ஒரு நொய் என்பது என்பது அப்போது எனக்கு தெரியவில்லை. குடிப்பவர்களை பார்த்து அவர்கள் மேல் கோபம் தான் வரும் ஆனால் அவர்கள் அந்த நோயால் தன்னை இழந்து நிற்கிறார்கள் என்பது தாமதமாக தான் எனக்கு புரிந்தது. அன்று ஒரு நொடி எனக்கு அப்படி ஒரு எண்ணம் வந்தது. எப்படியோ அதில் இருந்து நான் வெளியே வந்துவிட்டேன். என் அப்பா இறப்பதற்கு முன் எப்படியாவது வாழ வேண்டும் என்று ஆசைப்பட்டார். ஆனால் அவரது லிவர் செயலிழந்துவிட்டதால் அவர் இறந்துவிட்டார்" என பா ரஞ்சித் உணர்ச்சிவசமாக பேசினார்

 

 

தலைப்பு செய்திகள்

Suriya 48 : சூர்யா 48 பட பூஜை ஆல்பம்
Suriya 48 : சூர்யா 48 பட பூஜை ஆல்பம்
கண்மூடித்தனமாக ஆதரிக்கும் தொண்டர்கள்..இது எப்போ மாறும்..நடிகர் ஜாவா சுந்தரேசன் பேச்சு
கண்மூடித்தனமாக ஆதரிக்கும் தொண்டர்கள்..இது எப்போ மாறும்..நடிகர் ஜாவா சுந்தரேசன் பேச்சு
மணிரத்னம் விஜய் சேதுபதி படத்தை 20 கோடிக்கு வாங்கிய நெட்ஃப்ளிக்ஸ்...இன்னும் ஷூட்டிங் கூட தொடங்கலயே பாஸ்!
மணிரத்னம் விஜய் சேதுபதி படத்தை 20 கோடிக்கு வாங்கிய நெட்ஃப்ளிக்ஸ்...இன்னும் ஷூட்டிங் கூட தொடங்கலயே பாஸ்!
திரைத்துறை கடந்து நிஜ வாழ்க்கையில் கைக்கோர்க்கும் ஆனந்த் ராம் - பிரிகிடா
திரைத்துறை கடந்து நிஜ வாழ்க்கையில் கைக்கோர்க்கும் ஆனந்த் ராம் - பிரிகிடா

வீடியோ

Transgender vs Student | திருநங்கை vs மாணவி! பேருந்தில் சரமாரி தாக்குதல்.. வைரல் சிசிடிவி வீடியோ
TVK Reels Atrocity | அறிவில்லாமல் ரீல்ஸ் போடும் தவெகவினர்!அமைச்சர் பேச்சுக்கே மரியாதை இல்லை
நிர்மலா Out சக்திகாந்த தாஸ் IN 5 மத்திய அமைச்சர்கள் நீக்கம்? மோடியின் புதிய அமைச்சரவை
TVK Reels Viral Video : எம்.எல்.ஏ CHAIR-ல் தவெகவினர்! தொடரும் ரீல்ஸ் அட்டூழியம்.. வைரல் வீடியோ
CV Shanmugam Next Move | பதவி கொடுக்காத EPS அப்செட்டில் சி.வி.சண்முகம் அடுத்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay: தவெக வாஷிங் மெஷின்..! சொன்னதெல்லாம் கட்டுக்கதையா அண்ணா? CM விஜய்க்கு சரமாரி கேள்விகள்
தவெக வாஷிங் மெஷின்..! சொன்னதெல்லாம் கட்டுக்கதையா அண்ணா? CM விஜய்க்கு சரமாரி கேள்விகள்
TN CM VIJAY : அப்போ NO.. இப்போ OK.. தவெகவின் இரட்டை வேடம்.? ஆதாரத்தோடு அடித்து நொறுக்கும் சமூக ஆர்வலர்கள்
அப்போ NO.. இப்போ OK.. தவெகவின் இரட்டை வேடம்.? ஆதாரத்தோடு அடித்து நொறுக்கும் சமூக ஆர்வலர்கள்
Commercial Cooking Gas Price: காலையிலேயே குஷி.! அதிரடியாக குறைந்தது சிலிண்டர் விலை- எவ்வளவு தெரியுமா.?
காலையிலேயே குஷி.! அதிரடியாக குறைந்தது சிலிண்டர் விலை- எவ்வளவு தெரியுமா.?
TN Weather Update: எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை, தமிழக வானிலை அறிக்கை
எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை, தமிழக வானிலை அறிக்கை
Sierra EV Price List: சியாரா மின்சார எடிஷனின் வேரியண்ட், விலை, கலர்..! பேட்டரிக்கு லைஃப் டைம் வாரண்டி உண்மையா?
சியாரா மின்சார எடிஷனின் வேரியண்ட், விலை, கலர்..! பேட்டரிக்கு லைஃப் டைம் வாரண்டி உண்மையா?
Anbumani Pmk: மேகதாது அணை கட்டக்கூடாது.! பிலிகுண்டுலு முதல் பூம்புகார் வரை விழிப்புணர்வு பயணம்- அன்புமணி அதிரடி
மேகதாது அணை கட்டக்கூடாது.! பிலிகுண்டுலு முதல் பூம்புகார் வரை விழிப்புணர்வு பயணம்- அன்புமணி அதிரடி
EV Velu Case: மாஜி அமைச்சர் எ.வ. வேலுவுக்கு ஸ்கெட்ச் போட்ட விஜய்.! லஞ்ச ஒழிப்புத்துறை சம்மன் - அலறும் திமுக
மாஜி அமைச்சர் எ.வ. வேலுவுக்கு ஸ்கெட்ச் போட்ட விஜய்.! லஞ்ச ஒழிப்புத்துறை சம்மன் - அலறும் திமுக
C Vijayabaskar Join Tvk: நாளை தவெகவில் இணைகிறேன்.! அதிகாரப்பூர்வமாக அறிவித்த சி.விஜயபாஸ்கர்
நாளை தவெகவில் இணைகிறேன்.! அதிகாரப்பூர்வமாக அறிவித்த சி.விஜயபாஸ்கர்
Embed widget