மேலும் அறிய

Chiyaan 61 : சீயான் விக்ரம்.. இப்போ ஆண்டவர் கமல்.. இயக்குநர் பா.ரஞ்சித்தின் அதிரடிகள்..

Chiyaan 61 : இயக்குநர் பா.ரஞ்சித், சியான்61-வது படத்திற்கு பிறகு நடிகர் கமல்ஹாசனை வைத்து படம் இயக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Chiyaan 61  : இன்று காலை நடந்த சீயான் 61 படத்திற்கான பூஜையில் பல சுவாரஸ்ய தகவல் வெளியாகிவுள்ளது. இயக்குநர் பா.ரஞ்சித், சியான்61- ஆவது படத்திற்கு பிறகு நடிகர் கமல்ஹாசனை (Kamalhaasan) வைத்து படம் இயக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

நடிகர் விக்ரம் நடிப்பில் கடைசியாக வெளிவந்த படம் மகான். இந்தப்படம் ஓடிடியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதனிடையே விக்ரம் இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்தப்படத்தை ஸ்டுடியோ க்ரின் நிறுவனத்தின் (Studio Green) சார்பில் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார்.

இந்தநிலையில், பா. ரஞ்சித்தின் (Pa.Ranjith) இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடிக்கும் சீயான் 61 படத்திற்கான பூஜை இன்று நடைபெற்றது. இந்த படத்தின் பூஜை நடக்கும் நிகழ்ச்சியை படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஸ்டுடியோ க்ரீன் தனது ட்விட்டர் பக்கத்தில் நேரலை செய்தனர். மேலும் பா. ரஞ்சித்தின் முதல் திரைப்படத்தில் இருந்து இசையமைத்து வந்த சந்தோஷ் நாராயணன் பதிலாக இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார்.

மேலும், சீயான் 61 படத்தின் பூஜை நிகழ்வு நடந்துவரும் வேளையில் நடிகர் விக்ரமின் ரசிகர்கள் ட்விட்டர் பக்கத்தில் Chiyaan61 என்ற ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்து வருகின்றனர். அதேபோல், மறுபுறம் பா. ரஞ்சித்தின் ரசிகர்களும் PaRanjith என்ற ஹேஸ்டேக்கை தன் பங்குக்கு இந்தியளவில் ட்ரெண்டாகி வருகின்றனர். 

சீயான் 61 -வது படத்தின் கதை களம் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் இடம் பெறுவதாகவும்,  கே.ஜி.எஃப் தங்க சுரங்கத்தில் இருந்த இந்திய
மக்களின் வாழ்வை அடிப்படையாக வைத்து உருவாகப்போகிறது எனவும் தகவல் வெளியாகிவுள்ளது. இப்படத்தை கர்நாடக மாநிலத்தில் உள்ள உண்மையான கே.ஜி.எஃப்பில் ஷுட் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். சீயான் 61, 2023-ஆம் ஆண்டின் முதல் பாகத்தில் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், இது ஸ்டுடியோ க்ரீன் தயாரிப்பு நிறுவனத்தின் பெரிய பட்ஜெட் படம் என்பது குறிப்பிடதக்கது. இப்படமானது முப்பரிமாணமத்தில் வெளியாகும் என தகவல் வெளியான நிலையில் சினிமா ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்தில் உள்ளனர்.

இயக்குநர் பா.ரஞ்சித், சீயான் 61- ஆவது படத்திற்கு பிறகு நடிகர் கமல்ஹாசனை வைத்து படம் இயக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார். கமலுக்கான பட கதை  தயாராக உள்ளதாகவும், மேலும் அக்கதையை விரிவுபடுத்தவுள்ளதாகவும் பா.ரஞ்சித் குறிப்பிட்டுள்ளார்.

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

சுப்ரியா சாஹூ, ககன்தீப் சிங் பேடி அதிரடி பணியிட மாற்றம் - தமிழக அரசு உத்தரவு
சுப்ரியா சாஹூ, ககன்தீப் சிங் பேடி அதிரடி பணியிட மாற்றம் - தமிழக அரசு உத்தரவு
முதல்வர், துணை முதல்வர் இடையே மோதல்! நீயா, நானா போட்டியில் கர்நாடக காங்கிரஸ்!
முதல்வர், துணை முதல்வர் இடையே மோதல்! நீயா, நானா போட்டியில் கர்நாடக காங்கிரஸ்!
State Education Policy: பிளஸ் 1 மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை; முதல்வரிடம் மாநில கல்விக் கொள்கை சமர்ப்பிப்பு; என்ன பரிந்துரைகள்?
State Education Policy: பிளஸ் 1 மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை; முதல்வரிடம் மாநில கல்விக் கொள்கை சமர்ப்பிப்பு; என்ன பரிந்துரைகள்?
Breaking News LIVE: சுப்ரியா சாஹு மருத்துவத்துறை செயலாளராக மாற்றம் - தமிழக அரசு
Breaking News LIVE: சுப்ரியா சாஹு மருத்துவத்துறை செயலாளராக மாற்றம் - தமிழக அரசு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Jagan Mohan Reddy  vs Chandra Babu Naidu | ஜெகனுக்கு END CARD!அதிரடி காட்டும் சந்திரபாபு..Puducherry Police Exam | ’’வாழ்க்கையே போச்சு’’கண்ணீர் விட்டு அழுத பெண்கள்..தேர்வுக்கு அனுமதி மறுப்புDhoni wish to indian Team | தட்டி தூக்கிய இந்தியா தோனி கொடுத்த SURPRISE Virat & Rohit Retirement |இடியை இறக்கிய KING - HITMAN.. உச்சக்கட்ட சோகத்தில் ரசிகர்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
சுப்ரியா சாஹூ, ககன்தீப் சிங் பேடி அதிரடி பணியிட மாற்றம் - தமிழக அரசு உத்தரவு
சுப்ரியா சாஹூ, ககன்தீப் சிங் பேடி அதிரடி பணியிட மாற்றம் - தமிழக அரசு உத்தரவு
முதல்வர், துணை முதல்வர் இடையே மோதல்! நீயா, நானா போட்டியில் கர்நாடக காங்கிரஸ்!
முதல்வர், துணை முதல்வர் இடையே மோதல்! நீயா, நானா போட்டியில் கர்நாடக காங்கிரஸ்!
State Education Policy: பிளஸ் 1 மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை; முதல்வரிடம் மாநில கல்விக் கொள்கை சமர்ப்பிப்பு; என்ன பரிந்துரைகள்?
State Education Policy: பிளஸ் 1 மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை; முதல்வரிடம் மாநில கல்விக் கொள்கை சமர்ப்பிப்பு; என்ன பரிந்துரைகள்?
Breaking News LIVE: சுப்ரியா சாஹு மருத்துவத்துறை செயலாளராக மாற்றம் - தமிழக அரசு
Breaking News LIVE: சுப்ரியா சாஹு மருத்துவத்துறை செயலாளராக மாற்றம் - தமிழக அரசு
Vidamuyarchi Update : திரிஷாவின் கணவராக நடிக்கவிருக்கும் அஜித் குமார்.. விடாமுயற்சி படத்தின் புது புது அப்டேட்!
Vidamuyarchi Update : திரிஷாவின் கணவராக நடிக்கவிருக்கும் அஜித் குமார்.. விடாமுயற்சி படத்தின் புது புது அப்டேட்!
Dinesh Karthik RCB: அடிதூள் - ஆர்சிபி அணியின் பேட்டிங் பயிற்சியாளராக தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் நியமனம்
Dinesh Karthik RCB: அடிதூள் - ஆர்சிபி அணியின் பேட்டிங் பயிற்சியாளராக தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் நியமனம்
ITR Filing: ஜுலை 31 கடைசி, வருமான வரி தாக்கலில் திருத்தம் செய்வது எப்படி? படிப்படியான வழிமுறைகள் இதோ..!
ITR Filing: ஜுலை 31 கடைசி, வருமான வரி தாக்கலில் திருத்தம் செய்வது எப்படி? படிப்படியான வழிமுறைகள் இதோ..!
Amala Paul: மனிதாபிமானம் இல்லாமல் நடந்து கொண்டாரா அமலாபால்? பெண் மேக்கப் கலைஞர் குற்றச்சாட்டு
Amala Paul: மனிதாபிமானம் இல்லாமல் நடந்து கொண்டாரா அமலாபால்? பெண் மேக்கப் கலைஞர் குற்றச்சாட்டு
Embed widget