மேலும் அறிய

Jailer 2: "இன்னும் ஒரு மாசம்தான்" மீண்டும் வருகிறார் ஜெயிலர்! இயக்குனர் நெல்சன் திலீப்குமார் செம அப்டேட்!

ஜெயிலர் இரண்டாம் பாகத்திற்கான அப்டேட் அதிகாரப்பூர்வமாக இன்னும் ஒரு மாதத்தில் வெளியாகும் என்று இயக்குனர் நெல்சன் திலீப்குமார் அறிவித்துள்ளார்.

தமிழ் திரையுலகின் சூப்பர்ஸ்டராக உலா வருபவர் ரஜினிகாந்த். இவருக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இவரது நடிப்பில் வேட்டையன் படம் அக்டோபர் 10ம் தேதி ரிலீசாகிறது. அவரது நடிப்பில்  கூலி படமும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

ஒரு மாதத்தில் ஜெயிலர் 2 அப்டேட்:

ரஜினிகாந்த் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் ஜெயிலர். கடந்த சில வருடங்களாக பெரியளவு வெற்றியைத் தராமல் இருந்த ரஜினிகாந்திற்கு ஜெயிலர் படம் மிகப்பெரிய ப்ளாக்பஸ்டர் வெற்றியாக அமைந்தது. இதையடுத்து, இந்த படத்தின் இரண்டாம்  பாகம் வெளியாக உள்ளதாக தகவல் வெளியானது.

இந்த சூழலில், தனியார்  நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ஜெயிலர் படத்தின் இயக்குனர் நெல்சன் திலீப்குமாரிடம் ஜெயிலர் 2ம் பாகம் பற்றி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், ஜெயிலர் இரண்டாம் பாகத்தின் அப்டேட் இன்னும் ஒரு மாதத்திற்குள் வரும். அதிகாரப்பூர்வமாக தயாரிப்பு நிறுவனம் கூறுவார்கள் என்று பதிலளித்தார். அவரது பதில் ரஜினி ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜெயிலர் படத்தை இயக்கிய நெல்சன் திலீப்குமாரே இந்த படத்தையும் இயக்க உள்ளார். முதல் பாகத்தை தயாரித்த சன் பிக்சர்ஸ்  நிறுவனமே இந்த படத்தையும் தயாரிக்க உள்ளனர். ஜெயிலர் படத்தின் முதல் பாகத்தின் கிளைமேக்சில் அடுத்த பாகத்திற்கான தொடக்கத்துடன் முடிக்கப்பட்டிருக்கும்.

ரஜினி ரசிகர்கள் உற்சாகம்:

படத்திற்கு கிடைத்த மிகப்பெரிய வரவேற்பைத் தொடர்ந்து ஜெயிலர் 2ம் பாகம் உருவாகுகிறது. அந்த படத்தில் நடித்த கதாபாத்திரங்கள் இதே படத்திலும் தொடர்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜெயிலர் படத்தை போலவே ஜெயிலர் 2ம் பாகமும் பான் இந்தியா அளவில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

ரஜினிகாந்த் தற்போது லோகேஷ் கனகராஜ் படத்தின் கூலி படப்பிடிப்பில் பங்கேற்று வருகிறார். அந்த படத்தில் ரஜினிகாந்துடன் சத்யராஜ், மலையாள நடிகர் சோபின், கன்னட நடிகர் உபேந்திரா உள்ளிட்ட பல பிரபலங்கள்  நடிக்கின்றனர். ஞானவேல் இயக்கியுள்ள வேட்டையன் படத்தில் ரஜினிகாந்துடன் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன், ஃபகத் பாசில் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். வேட்டையன், கூலி, ஜெயிலர் 2 என அடுத்தடுத்து ரஜினிகாந்த் படங்கள் வர இருப்பது ரஜினி ரசிகர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தலைப்பு செய்திகள்

Jailer 2: ரஜினியின் ஜெயிலர் 2 படத்தில் பிரபல நடிகரின் காட்சிகள் திடீர் நீக்கம்! என்ன காரணம்?
Jailer 2: ரஜினியின் ஜெயிலர் 2 படத்தில் பிரபல நடிகரின் காட்சிகள் திடீர் நீக்கம்! என்ன காரணம்?
விஜய் நல்லது பண்ணாரு.. புகழ்ந்தது ஒரு தப்பா.. தற்குறிகள்ன்னு திட்டுறாங்க.. அனிதா குப்புசாமி வேதனை!
விஜய் நல்லது பண்ணாரு.. புகழ்ந்தது ஒரு தப்பா.. தற்குறிகள்ன்னு திட்டுறாங்க.. அனிதா குப்புசாமி வேதனை!
Karthigai Deepam: கடத்தப்பட்ட சதீஷ்... தேடிவந்த கார்த்திக்.. ஷாக்கான மாயா! கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: கடத்தப்பட்ட சதீஷ்... தேடிவந்த கார்த்திக்.. ஷாக்கான மாயா! கார்த்திகை தீபத்தில் இன்று
பார்ட் 2 என்றாலே சரக்கு தீர்ந்துப்போச்சுனு சொல்லுவாங்க..ஜெயிலர் 2 படம் ஏன்..விளக்கம் கொடுத்த ரஜினி
பார்ட் 2 என்றாலே சரக்கு தீர்ந்துப்போச்சுனு சொல்லுவாங்க..ஜெயிலர் 2 படம் ஏன்..விளக்கம் கொடுத்த ரஜினி

வீடியோ

Samantha ZOY Launch: பெண்கள் ஆரோக்கியத்தில் புதிய புரட்சி! நடிகை சமந்தாவின் ZOY லான்ச்
Navanethem pillay : மண்டேலாவுக்காக வாதாடிய தமிழச்சி! ஈழத்தமிழர்களுக்காக குரல் அமைதிக்கான நோபல் பரிசு யார் இந்த நவநீதம் பிள்ளை?
Elon musk Rahul Gandhi : ”நிஜ பாஸ் யார்?இன்னொருத்தர் இருக்காரு”கொளுத்தி போட்ட மஸ்க்-ராகுல்
Thoothukudi Police Issue :
Elon musk on Ambani : இந்தியாவின் BOSS அம்பானியா? மோடி மீது எலான் மஸ்க் அட்டாக்! ஸ்டார்லிங்க்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vs EPS: ”உங்களுக்கா ஏமாற்ற தெரியாது” லிஸ்ட் போட்டு எடப்படியை சரமாரியாக தாக்கி விமர்சித்த தவெக
”உங்களுக்கா ஏமாற்ற தெரியாது” லிஸ்ட் போட்டு எடப்படியை சரமாரியாக தாக்கி விமர்சித்த தவெக
Chennai Airport: 20 வருடங்களுக்கு தாங்கும்..! விமான நிலைய அப்க்ரேடிற்கு பக்கா ப்ளான் - ட்ராஃபிக்கை குறைக்க கூடுதல் வசதி
20 வருடங்களுக்கு தாங்கும்..! விமான நிலைய அப்க்ரேடிற்கு பக்கா ப்ளான் - ட்ராஃபிக்கை குறைக்க கூடுதல் வசதி
TN Weather News: இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு..! 11 மாவட்டங்களுக்கு வார்னிங், சென்னை? தமிழக வானிலை அறிக்கை
இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு..! 11 மாவட்டங்களுக்கு வார்னிங், சென்னை? தமிழக வானிலை அறிக்கை
Rice Price: எகிறும் அரிசி விலை.. வியாபாரிகளின் பதுக்கல்தான் காரணமா? உடனடி ஆக்ஷனில் இறங்குவாரா விஜய்?
Rice Price: எகிறும் அரிசி விலை.. வியாபாரிகளின் பதுக்கல்தான் காரணமா? உடனடி ஆக்ஷனில் இறங்குவாரா விஜய்?
DMK: நிதி கொடுக்காத மோடி.. இன்று போட்டோவுக்கு போஸ்.. விஜய்யை சாடிய ராஜீவ் காந்தி!
DMK: நிதி கொடுக்காத மோடி.. இன்று போட்டோவுக்கு போஸ்.. விஜய்யை சாடிய ராஜீவ் காந்தி!
VS Babu Health Condition: வி.எஸ்.பாபுவின் தற்போதைய நிலை என்ன? சொல்லுங்க.. தமிழக அரசுக்கு அதிமுக கேள்வி!
VS Babu Health Condition: வி.எஸ்.பாபுவின் தற்போதைய நிலை என்ன? சொல்லுங்க.. தமிழக அரசுக்கு அதிமுக கேள்வி!
தமிழ்நாடு நெக்ஸ்ட் லெவல்! ரூ.13,000 கோடியில் திட்டங்கள், வேலைவாய்ப்பு.. முதல்வர் விஜய் குறித்து பிரதமர் மோடி பேசியது என்ன? முழு விவரம்
தமிழ்நாடு நெக்ஸ்ட் லெவல்! ரூ.13,000 கோடியில் திட்டங்கள், வேலைவாய்ப்பு.. முதல்வர் விஜய் குறித்து பிரதமர் மோடி பேசியது என்ன? முழு விவரம்
IND vs WI: 224 ரன்கள் டார்கெட்.. அபிஷேக், இஷான் அபாரம்! இந்த முறையும் எட்டிப்பிடிக்குமா வெஸ்ட் இண்டீஸ்?
IND vs WI: 224 ரன்கள் டார்கெட்.. அபிஷேக், இஷான் அபாரம்! இந்த முறையும் எட்டிப்பிடிக்குமா வெஸ்ட் இண்டீஸ்?
Embed widget