Leo : மாறி மாறி அடித்துக்கொண்ட மிஸ்கின், விஜய்.. லியோ படப்பிடிப்பு தளத்தில் நடந்த சம்பவம்..
லியோ படப்பிடிப்புத் தளத்தில் நடிகர் விஜய் மற்றும் மிஸ்கின் இடையில் நிகழ்ந்த சண்டை எதற்காக தெரியுமா?
இயக்குநர் மிஸ்கின் தொடர்ச்சியாக படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் வெளியான மாவீரன் படத்தில் காமெடியான சீரியஸ் வில்லனாக அவர் நடித்திருந்தது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. மிஸ்கின் நடித்திருக்கும் மற்றொரு படம் கோகேஷ் கனகராஜ் இயக்கியிருக்கும் லியோ. தான் நடித்து வரும் படங்களில் தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை தொடர்ந்து பகிர்ந்து வருகிறார் மிஸ்கின். அப்படியான லியோ படத்தில் தனக்கும் விஜக்கும் ஏற்பட்ட ஒரு சின்ன விபத்தை பற்றி கூறியுள்ளார்.
விஜயுடன் சண்டை
லியோ படத்தில் அநேகமாக மிஸ்கின் வில்லன் கதாபாத்திரத்தின் தோன்றலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படத்தில் தனக்கும் விஜய்க்கும் ஒரு சின்ன சண்டைக் காட்சியும் இருப்பதாக கூறியுள்ளார் இயக்குநர் மிஸ்கின். இதுவரை பெரிதாக சண்டைக் காட்சியில் நடித்து பழக்கமில்லாததால் இந்த காட்சியின்போது தனக்கும் விஜய்க்கும் ஒரு சின்ன விபத்து ஏற்பட்டதாக கூறினார். எதிர்பாராதவிதமாக தான் விஜயை அடித்துவிட்டதாகவும் உடனே சென்று அவரிடம் மன்னிப்புக் கேட்டதாகவும் தெரிவித்துள்ளார் மிஸ்கின். சிறிது நேரம் நன்றாக பயிற்சி எடுத்துவருமாறு விஜய் தனக்கு ஆலோசனைக் கூறியதாக தெரிவித்தார்.
விஜய் கொடுத்த பதிலடி
View this post on Instagram
இந்த காட்சியை மீண்டும் ஒரு முறை எடுத்தபோது அதே தவறு நடந்திருக்கிறது. ஆனால் இந்த முறை அடி வாங்கியது மிஸ்கின். உடனே விஜய் வந்து மிஸ்கினிடம் மன்னிப்பு கேட்டிருக்கிறார். இப்படியாக இரண்டு பேரும் செட்டில் மாற்றி மாற்றி அடித்துக்கொண்டு இருந்திருக்கிறார்கள்.
லியோ கூட்டணி
மாஸ்டர் படத்திற்கு பிறகு இயக்குநர் லோகேஷ் கனகராஜ் - நடிகர் விஜய் கூட்டணி 2-வது முறையாக ‘லியோ’ படத்தில் இணைந்துள்ளனர். இந்த படத்தில் ஹீரோயினாக த்ரிஷா நடித்துள்ளார். இதன் மூலம் விஜய் - த்ரிஷா ஜோடி 15 ஆண்டுகளுக்குப் பின் இணைந்துள்ளனர். மேலும் சஞ்ஜய் தத், சாண்டி மாஸ்டர், இயக்குநர்கள் கெளதம் மேனம், மிஷ்கின், பிரியா ஆனந்த், அர்ஜுன், மன்சூர் அலிகான்,மேத்தியு தாமஸ்,ஜோஜூ ஜார்ஜ், மடோனா செபாஸ்டியன், அனுராஜ் காஷ்யப் என ஏகப்பட்ட நட்சத்திரங்கள் இந்த படத்தில் நடித்துள்ளனர். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். வருகின்ற அக்டோபர் 19-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது லியோ திரைப்படம்.