மேலும் அறிய

கோயிலுக்கு போகாதீங்க; சினிமாக்கு போங்க - இயக்குநர் மிஷ்கின் சொன்னதுக்கு காரணம் இதுதான்!

கோயிலுக்குப் போகாதீங்க என்றும் சினிமாக்கு போங்க என்றும் இயக்குநர் மிஸ்கின் தெரிவித்துள்ளார்.

"வாடிவாசல் திரைப்படம் இந்தியாவின் மிகப்பெரிய படைப்பாக இருக்கும்.” என இயக்குநர் மிஷ்கின் தெரிவித்துள்ளார். 

சென்னையில் நடைபெற்ற ‘The Proof’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில்  இயக்குநர் மிஷ்கின், இளையராஜா வாழ்க்கை வரலாறு படம், வாடிவாசல் படம் உள்ளிட்ட பல விசயங்கள் குறித்து பேசியிருக்கிறார். அதன் விவரத்தை காணலாம். 

சினிமா சிறப்பாக இருக்கனும்னா

சினிமாவில் நீண்ட கால அனுபவம் உள்ளவர்கள் பற்றி பேசிய மிஷ்கின்,”சினிமா என்பது நாம் நினைப்பது அல்ல. அது குறித்து Asipre செய்து கொண்டிருக்க வேண்டும். 30 -40 ஆண்டுகாலம் சினிமாவில் இருப்பவர்கள் ஜீனியஸ்.  அவர்கள் முன் தான் நான் பேசிக்கொண்டிருக்கிறேன். யூகி சேது  சாருடன் 80 நாட்கள் இருந்திருக்கிறேன். நிறைய விசயங்களை கத்துக்கிட்டேன். ஒவ்வொரு ஷாட் முடிந்தபிறகும் அது குறித்து விவாதிப்பார். அவ்வளவு தெளிவாக பேசக் கூடியவர். சினிமாவுக்காகவே சிலர் வாழ்வார்கள்; அவர்களாலேயே சினிமா வாழும். அப்படிப்பட்டவர் யூகி சேது. சினிமா லிவ்ஸ் பிகாஸ் ஆஃப் தெம்” என்று யூகி சேது குறித்து பேசியிருக்கிறார்.

இசையமைப்பது குறித்து The Proof படத்தில் பணியாற்றியிருந்த ஒவருக்கு அறிவுரை சொல்கையில், “ காலை, மாலை, இரவு சாப்பிடுவதற்கு முன்பு மூன்று முறை இளையராஜா பாட்டு கேளுங்க. மியூசிக் வந்துரும்.

“இளையராஜா மிகப்பெரிய லெஜெண்ட். அவர் பற்றிய பயோபிக் வருகிறது. பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறேன். தனுஷ் இளையராஜாவாக நடிக்கவிருக்கிறார். அவர் சிறந்த நடிகர். இந்த வாய்ப்பு தனுஷுக்குக் கிடைத்த மிகப்பெரிய பரிசு. ராஜாவாக வேடம் போடுகிறார். அது யாருக்கும் கிடைக்காது. இது அவருக்கு கிடைத்த வாழ்க்கையின் உன்னதமான நேரம். அவர் சிறப்பாக அவரது பணியை செய்வார். “என்று தெரிவித்துள்ளார்.

விஜய் சேதுபதி அற்புதமான நடிகர்

”ஷாருக்கானை வைத்து படம் இயக்குகிறீர்களா? விஜய் சேதுபதியை வைத்து இயக்குகிறீர்களா? என கேட்டால் நான் விஜய் சேதுபதி என்று தான் சொல்வேன். அற்புதமான நடிகர் அவர். அவர் மகா கலைஞன். ” என்று விஜய் சேதுபதி பற்றி நெகிழ்ச்சியுடன் தெரிவித்திருக்கிறார். 

சினிமாதான் சாமி

சினிமா குறித்து பேசுகையில், ”எங்களுக்கெல்லாம் சாமி சினிமாதான். சினிமாக்காரனுக்கு யாரும் வீடு  வாடகைக்கு கூட தர மாட்டாங்க. சினிமாக்காரனைப் பார்த்து மோசமாக பேசுவாங்க. ஆனால், சினிமாக்கரான் வீட்டில் இருந்தால் சிவனையும் பார்வதியையும் உங்கள் வீட்டில் வைத்திருப்பது மாதிரி என்பதை புரிந்துகொள்ள வேண்டும். ஒரு சாமியை வைத்திருப்பதுபோல. எல்லாருமே நாம் வாழ்வதற்கு மட்டுமே இருப்போம். ஆனால், சினிமாக்கரான் மற்றவர்கள் சிரிக்க வேண்டும், சந்தோஷ பட வேண்டும் என்பதற்காக மெழுகுவர்த்திப் போல எரிச்சுப்பான்.” என்று சினிமா குறித்து பேசியிருக்கிறார். 

குடும்பத்துடன் சினிமா பாருங்க

பெரும்பாலானோர் தியேட்டருக்கு சென்று சினிமா பார்ப்பதேயில்லை என்று பேசியிருக்கும் மிஷ்கின்,அது தொடர்பாக பேசுகையில். ”நிறைய பேர் தியேட்டருக்குப் போவதேயில்லை. என்ன பிரச்சனையானது என்பது தெரியவில்லை. வீட்டிலேயே ரொம்ப நேரம் புருஷனோடு உட்காரப்போகிறீங்களா? ரொம்ப நேரம் பொண்ண்டாட்டிய பார்த்துட்டு இருக்க போறீங்களா? உங்களுக்கு போர் அடிக்கலையா. வாங்க உங்களுக்கு அவ்வளவு பெரிய ஸ்பேஸ் இருக்கிறது. அதில் எவ்வளவு பெரிய மனிதர்கள் நடிக்கிறார்கள். ஆயிரம் பேர் வேலை செய்திருக்கிறார்கள். உங்களுக்குகாக கதை சொல்லியிருக்காங்க. நாம் Gossip -ல் மாட்டிட்டோம். சினிமா பார்ப்பாதை நாம் மிஸ் செய்துட்டோம். 

சினிமாவை தேர்ந்தெடுத்து பாருங்க. சினிமா நீங்க போடும் தானம். தானத்தை நிறுத்திவிடாதீர்கள். நிறைய பேர் வீட்டிலேயே சினிமா பார்க்கிறார்கள். வீட்டில் உட்காந்து எப்படி படம் பார்க்க முடியும்?வெங்காய்ம் வெட்டிடே பார்ப்பீங்களா? புருஷனை திட்டிட்டே படம் பார்ப்பீங்களா? மனைவியை திட்டிட்டே பார்ப்பீங்களா? 

சினிமா என்பது வீட்டிலிருந்து அழகாக உடையணிந்து, பர்ஃப்யூம் அடித்துட்டு காரில் சென்று குழந்தைகள் குடும்பத்துடன், பாப்கார்ன் உடன் சினிமா பார்க்க வேண்டும். அண்ணாந்து பார்க்க கூடிய விஷயம் கடவுளுக்குப் பிறகு சினிமாதான். ஒரு குடும்பத்தில் மாதம் ஒரு படத்திற்கு பட்ஜெட் ஒதுக்கிடுங்க. சினிமா போய் பார்க்கவில்லையென்றால் அது குடும்பமே இல்லை என்று சொல்வேன். கோயிலுக்கு போகாதீங்க. படத்துக்கு போங்க. கோயிலுக்கு போனால் ஈசியாக சொல்லிவிடலாம் ‘நான் பாவம் செய்ய போகிறேன். மன்னிச்சிக்கோங்க.’ அப்டினுக்கு சொல்றோம். சினிமாவிற்கு போனால் சிரிக்க போறீங்க. அலாதிய ரசிக்கபோறீங்க. அழப் போறீங்க. மனம்விட்டு சிரிக்கனும். தியேட்டரில் அருகில் யார் உட்கார்ந்திருக்கிறார் என்பது தெரியாமல் அவருடன் சேர்ந்து சிரிப்பீங்க. நீங்க விசிலடித்து அவரை கட்டிப்பிடிப்பீங்க.” என்று சினிமாவுக்குப் போகும் அனுபவம் குறித்து பேசியிருக்கிறார்.

வாடிவாசல் திரைப்படம் மிகப்பெரிய படைப்பு

“நானும் வெற்றியும் பேசினோம். வாடிவாசல் நாவலில் திரைப்படமாகும் அந்தப் பகுதியை மட்டும் வெற்றிமாறன் எனக்குச் சொன்னார். இந்தியாவின் மிகப்பெரியப் படைப்பாக ‘வாடிவாசல்’ திரைப்படம் இருக்கும். அது ஹிட் ஆகும்.  சூர்யா மிகச் சிறந்த நடிகர். இப்படத்துக்குப் பிறகு அவர் ஒரு லெஜெண்டாகிவிடுவார். வெற்றிமாறன் அப்படியான ஒரு படத்தை எடுக்கப் போகிறார். அவ்வளவு அழகான படத்தை வெற்றிமாறன் எடுக்கிறார்.” என இயக்குநர் மிஷ்கின் தெரிவித்துள்ளார்.

”சினிமா அலாதியானது. அதை தேர்ந்தெடுத்துப் பாருங்க.  கடவுளுக்கு அடுத்து, அண்ணாந்து பார்க்க கூடிய விசயம் சினிமா கோயிலுக்குப் போகாதீங்க; குடும்பத்துடன் தியேட்டருக்கு சென்று சினிமா பாருங்க.” என்று மிஷ்கின் தெரிவித்திருப்பது சமூக வலைதளத்தில் பேசுபொருளாகியிருக்கிறது. பலரும் இது குறித்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

CM Stalin: அடுத்த தேர்தல் அல்ல, தலைமுறையை சிந்திக்கும் அரசு; 75 ஆயிரம் காலியிடங்கள் நிரப்பப்படும்- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
CM Stalin: அடுத்த தேர்தல் அல்ல, தலைமுறையை சிந்திக்கும் அரசு; 75 ஆயிரம் காலியிடங்கள் நிரப்பப்படும்- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
Ayodhya: முதல் மழைக்கே அயோத்தி கோயில் மேற்கூரையில் கசிவு, வடிகால் வசதி இல்லை -  தலைமை அர்ச்சகர்
Ayodhya: முதல் மழைக்கே அயோத்தி கோயில் மேற்கூரையில் கசிவு, வடிகால் வசதி இல்லை - தலைமை அர்ச்சகர்
AFG Vs BAN, T20 Worldcup: வங்கதேச புலிகளை வேட்டையாடிய ஆஃப்கானிஸ்தான் அரையிறுதிக்கு தகுதி - ஆஸ்திரேலியா வெளியேற்றம்
AFG Vs BAN, T20 Worldcup: வங்கதேச புலிகளை வேட்டையாடிய ஆஃப்கானிஸ்தான் அரையிறுதிக்கு தகுதி - ஆஸ்திரேலியா வெளியேற்றம்
TN Assembly Session LIVE: அடுத்த தேர்தலை அல்ல.. அடுத்த தலைமுறையை பற்றி சிந்திக்கிறோம் - முதலமைச்சர் ஸ்டாலின்
TN Assembly Session LIVE: அடுத்த தேர்தலை அல்ல.. அடுத்த தலைமுறையை பற்றி சிந்திக்கிறோம் - முதலமைச்சர் ஸ்டாலின்
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Accident News :  BIKE-ல் மோதிய பேருந்து..தூக்கி வீசப்பட்ட இளைஞர் பதற வைக்கும் CCTV காட்சிNEET Exam  : நீட் மறு தேர்வு..எழுத வராத மாணவர்கள்! நடந்தது என்ன?Amudha IAS Transfer? : இப்படி பண்ணிட்டிங்களே. அமுதா IAS Transfer? அப்செட்டில் ஸ்டாலின்!Trichy Surya |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Stalin: அடுத்த தேர்தல் அல்ல, தலைமுறையை சிந்திக்கும் அரசு; 75 ஆயிரம் காலியிடங்கள் நிரப்பப்படும்- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
CM Stalin: அடுத்த தேர்தல் அல்ல, தலைமுறையை சிந்திக்கும் அரசு; 75 ஆயிரம் காலியிடங்கள் நிரப்பப்படும்- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
Ayodhya: முதல் மழைக்கே அயோத்தி கோயில் மேற்கூரையில் கசிவு, வடிகால் வசதி இல்லை -  தலைமை அர்ச்சகர்
Ayodhya: முதல் மழைக்கே அயோத்தி கோயில் மேற்கூரையில் கசிவு, வடிகால் வசதி இல்லை - தலைமை அர்ச்சகர்
AFG Vs BAN, T20 Worldcup: வங்கதேச புலிகளை வேட்டையாடிய ஆஃப்கானிஸ்தான் அரையிறுதிக்கு தகுதி - ஆஸ்திரேலியா வெளியேற்றம்
AFG Vs BAN, T20 Worldcup: வங்கதேச புலிகளை வேட்டையாடிய ஆஃப்கானிஸ்தான் அரையிறுதிக்கு தகுதி - ஆஸ்திரேலியா வெளியேற்றம்
TN Assembly Session LIVE: அடுத்த தேர்தலை அல்ல.. அடுத்த தலைமுறையை பற்றி சிந்திக்கிறோம் - முதலமைச்சர் ஸ்டாலின்
TN Assembly Session LIVE: அடுத்த தேர்தலை அல்ல.. அடுத்த தலைமுறையை பற்றி சிந்திக்கிறோம் - முதலமைச்சர் ஸ்டாலின்
Breaking News LIVE: தங்க விலை குறைவு.. இன்றைய நிலவரம் என்ன?
Breaking News LIVE: தங்க விலை குறைவு.. இன்றைய நிலவரம் என்ன?
Russia jobs scam : “இளைஞர்களே உஷார் !!! ரஷ்யாவில் வேலை, நல்ல சம்பளம் என வலைவிரிக்கும் கும்பல்” நம்பினால் கெட்டீர்கள்..!
Russia jobs scam : “இளைஞர்களே உஷார் !!! ரஷ்யாவில் வேலை, நல்ல சம்பளம் என வலைவிரிக்கும் கும்பல்” நம்பினால் கெட்டீர்கள்..!
Julian Assange Is Free: விக்கி லீக்ஸ் நிறுவனர் ஜுலியன் அசாஞ்சே விடுதலை - 1901 நாள் சிறைவாசம் முடிவடைந்தது எப்படி?
Julian Assange Is Free: விக்கி லீக்ஸ் நிறுவனர் ஜுலியன் அசாஞ்சே விடுதலை - 1901 நாள் சிறைவாசம் முடிவடைந்தது எப்படி?
ஐடி ஊழியர் மாயம்.. போதையில் உளறிக்கொட்டிய நண்பர்கள்.. தகராறில் நண்பனை கொன்ற கொடூரம்
ஐடி ஊழியர் மாயம்.. போதையில் உளறிக்கொட்டிய நண்பர்கள்.. தகராறில் நண்பனை கொன்ற கொடூரம்
Embed widget