‛தன் மகள் நடிக்க வருவதை ஷங்கர் சார் விரும்பல... நானும் என் மகளை போட்டோ எடுக்க அனுமதிக்க மாட்டேன்’ -இயக்குநர் முத்தையா பகீர் பேட்டி
‛‛என் மகளை பொதுவெளியில் ஒரு போட்டோ எடுக்கக் கூட அனுமதிக்க மாட்டேன்.அப்படி அவள் போட்டோ எடுத்தால் அதை ஆண்கள் சிலர் போட்டோ எடுக்க வாய்ப்புள்ளது,’’
நடிகர் கார்த்தி மற்றும் நடிகர் அதிதி ஷங்கர் நடிப்பில் உருவாகி வரும் விருமன் படத்தின் பர்ஸ்ட் லுக் பொங்கலையொட்டி வெளியானது. இதற்கிடையே படத்தை இயக்கியுள்ள இயக்குநர் முத்தையா இந்தப் படத்தை இயக்கிய தனது அனுபவத்தைப் இணையத்தில் பகிர்ந்துகொண்டுள்ளார். இதோ அவரது பேட்டி:
‛‛இந்திய சினிமாவின் மிகப்பெரிய இயக்குநர் மகள் என் படத்தில் நடிக்கிறார்.அவர் மகள் என் மகள் மாதிரி. என் மகளை பொதுவெளியில் ஒரு போட்டோ எடுக்கக் கூட அனுமதிக்க மாட்டேன்.அப்படி அவள் போட்டோ எடுத்தால் அதை ஆண்கள் சிலர் போட்டோ எடுக்க வாய்ப்புள்ளது. காலம் அப்படி இருக்கிறது.அதனால் அவளை நான் பொதுவெளியில் போட்டோ எடுக்க அனுமதிக்க மாட்டேன். நான் பழமைவாதியாக உங்களுக்குத் தெரியலாம். நான் பழமைவாதிதான்.நான் என் பொண்ணை பொண்ணாகத்தான் வளர்க்க ஆசைப்படறேன். அதே அக்கறைதான் என் சூப்பர் சீனியருடைய மகள் மீதும் எனக்கு இருக்கும்.
நான் அவர் மகளை பாப்பா என்றுதான் அழைப்பேன். ‘எப்படி பாப்பா அப்பா படத்துல நடிக்க ஒத்துக்கிட்டாங்க?’ என்று கேட்டேன். ‘அப்பாகிட்ட ரொம்ப நாளா கேட்டுட்டு இருந்தேன் சார்.வேண்டாம்னு சொல்லிட்டு இருந்தாரு.ஒருவழியா ஒத்துக்கிட்டாரு' என்று சொன்னார். முதலில் ஷங்கர் சாருக்குமே தன் மகள் சினிமாவில் நடிப்பது விருப்பமில்லை.ஆனால் அவ்வளவு பெரிய இயக்குநர் நம்மை நம்பி தன் பொண்ணை படத்தில் நடிக்க அனுப்புகிறார்.நாளை பின்ன அவர் பொண்ணை திரையில் பார்க்கும்போது அவருக்கு பெருமையா இருக்கனும் இல்லையா?. போட்டோ ஷூட்டில் எடுத்த புகைப்படங்களை பார்த்திருக்காரு. பார்த்துட்டு ரொம்ப பிடிச்சிருக்குனு பாராட்டியிருக்காரு. அப்புறம்தான் எனக்கு ஒரு நம்பிக்கை வந்தது. அதிதியும் முதல் சீன் ஒரே டேக்கில் நடிச்சு கொடுத்தாங்க’ இவ்வாறு முத்தையா பேசியிருக்கிறார்.
View this post on Instagram