மேலும் அறிய

Mari Selvaraj: ‘ தீவிர விஜய் ரசிகன் நான்.. அவரின் படம் பார்க்க சென்று குழிக்குள் விழுந்தேன்‘ .. நினைவுகளை பகிர்ந்த மாரி செல்வராஜ்..!

விஜய் படம் பார்க்கப் போய் குழிக்குள் விழுந்த கதையை நேர்காணல் ஒன்றில் இயக்குநர் மாரி செல்வராஜ் கூறியுள்ளார். 

விஜய் படம் பார்க்கப் போய் குழிக்குள் விழுந்த கதையை நேர்காணல் ஒன்றில் இயக்குநர் மாரி செல்வராஜ் கூறியுள்ளார். 

இயக்குநர் ராமிடம் உதவி இயக்குநராக இருந்து பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் ‘மாரி செல்வராஜ்’. அந்த படம் மிகப்பெரிய அளவில் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. இதனைத் தொடர்ந்து தனுஷை வைத்து ‘கர்ணன்’ படம் எடுத்து வெற்றி கண்டார் மாரி செல்வராஜ். அதேசமயம் அவரின் படங்கள் சாதிய ஒடுக்குமுறையை மையமாக வைத்து, பிற சமுதாயத்தினரை விமர்சிக்கும் வகையில் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. 

இந்த நிலையில் தனது 3வது படமான மாமன்னனை இயக்கியுள்ளார். இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலின், ஃபஹத் ஃபாசில், கீர்த்தி சுரேஷ், வடிவேலு, லால் என பலரும் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்த படம் இன்று தியேட்டரில் வெளியாகியுள்ளது. மாமன்னன் படம் தொடர்பான பல தகவல் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டிங்கில் உள்ளது.

தீவிர விஜய் ரசிகர்

இதனிடையே இயக்குநர் மாரி செல்வராஜ் பங்கேற்ற நேர்காணலில் அவரின் அண்ணன் ஒருவர் பேசும் வீடியோ காண்பிக்கப்பட்டது. அதில் அந்த அண்ணன், ‘மாரிக்கு என்று ஒரு விஜய் பாட்டு ஒதுக்கி வச்சிடுவோம்’ என கூறினார். இதுகுறித்து பேசிய மாரி செல்வராஜ்,  “நாங்க எல்லோரும் விஜய் ரசிகர்கள். அண்ணனும் சீரியஸான விஜய் ரசிகர்களில் ஒருவர். நான் விஜய்யோட எல்லா பாட்டுக்கும் ஆடிடுவேன். விஜய் என்பது ஒரு எமோஷனில் கலந்த ஒன்று. நான் இப்போதும் அவரின் படங்களை பார்ப்பேன். அந்த நேரம் மட்டும் விஜய்யின் ரசிகராக மாறிவிடுவேன். இப்பதான் முதல் நாள் முதல் காட்சி பார்க்கிறது எல்லாம் குறைஞ்சு போச்சு. 

கடைசியா நான் முதல் நாள் முதல் காட்சி பார்த்த விஜய் படம் ‘மதுர’. நான் சட்டக்கல்லூரி நுழைவுத்தேர்வுக்கு சென்னை வந்து விட்டு திருநெல்வேலிக்கு போகிறேன். காலையில ஒரு 10 அல்லது 11 மணி இருக்கும். ஏற்கனவே டிக்கெட் எடுத்து வச்சிட்டு பசங்க காத்துகிட்டு இருக்காங்க. நான் பஸ்ல ஏறி வேகமா போறேன். திருநெல்வேலில ராம் தியேட்டர் தான் பெரிய தியேட்டர். வாசல்ல குழி தோண்டி போட்டு இருந்தாங்க. நான் போற பஸ் கொஞ்ச தூரம் தள்ளி தான் நிற்கும். படம் வேற ஆரம்பிச்சிட்டாங்க. தியேட்டர் வெளியில யாருமே இல்ல. நான் ஆர்வத்துல பஸ்ல இருந்து குதிச்சிட்டேன். நேரா கேபிள்காக தோண்டப்பட்ட குழில போய் விழுந்துட்டேன். என்னோட உயரத்துக்கு இருக்குற குழியில் இருந்து கஷ்டப்பட்டு ஏறி படம் பார்த்தது தனிக்கதை” என தெரிவித்திருந்தார். இதனை விஜய் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக்கி வருகின்றனர். 

தலைப்பு செய்திகள்

Karthigai Deepam: கடத்தப்பட்ட சதீஷ்... தேடிவந்த கார்த்திக்.. ஷாக்கான மாயா! கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: கடத்தப்பட்ட சதீஷ்... தேடிவந்த கார்த்திக்.. ஷாக்கான மாயா! கார்த்திகை தீபத்தில் இன்று
பார்ட் 2 என்றாலே சரக்கு தீர்ந்துப்போச்சுனு சொல்லுவாங்க..ஜெயிலர் 2 படம் ஏன்..விளக்கம் கொடுத்த ரஜினி
பார்ட் 2 என்றாலே சரக்கு தீர்ந்துப்போச்சுனு சொல்லுவாங்க..ஜெயிலர் 2 படம் ஏன்..விளக்கம் கொடுத்த ரஜினி
Jailer 2 Booking : ஜெயிலர் 2 முன்பதிவுகள் தொடக்கம்!
Jailer 2 Booking : ஜெயிலர் 2 முன்பதிவுகள் தொடக்கம்!
“நான் எப்போ தப்பா நடந்தேன்?” – முத்துக்குமரன் கேள்வி.. வஹிதா வெளியிட்ட ஆடியோவால் பரபரப்பு!
“நான் எப்போ தப்பா நடந்தேன்?” – முத்துக்குமரன் கேள்வி.. வஹிதா வெளியிட்ட ஆடியோவால் பரபரப்பு!

வீடியோ

Samantha ZOY Launch: பெண்கள் ஆரோக்கியத்தில் புதிய புரட்சி! நடிகை சமந்தாவின் ZOY லான்ச்
Navanethem pillay : மண்டேலாவுக்காக வாதாடிய தமிழச்சி! ஈழத்தமிழர்களுக்காக குரல் அமைதிக்கான நோபல் பரிசு யார் இந்த நவநீதம் பிள்ளை?
Elon musk Rahul Gandhi : ”நிஜ பாஸ் யார்?இன்னொருத்தர் இருக்காரு”கொளுத்தி போட்ட மஸ்க்-ராகுல்
Thoothukudi Police Issue :
Elon musk on Ambani : இந்தியாவின் BOSS அம்பானியா? மோடி மீது எலான் மஸ்க் அட்டாக்! ஸ்டார்லிங்க்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அப்பா கூலி தொழிலாளி.. உணர்ச்சி பொங்க பேசிய அனிதா அண்ணன்.. கலங்கிய ராகுல்.!
அப்பா கூலி தொழிலாளி.. உணர்ச்சி பொங்க பேசிய அனிதா அண்ணன்.. கலங்கிய ராகுல்.!
"நான் வரேன் வடசென்னைக்கு.. தமிழ்நாட்டை தொட விட மாட்டேன்".. கர்ஜித்த ராகுல் காந்தி!
MK Stalin: இது எவ்வளவு பெரிய அவமானம் தெரியுமா? போற போக்கில் தவெகவை சீண்டிய ஸ்டாலின்!
MK Stalin: இது எவ்வளவு பெரிய அவமானம் தெரியுமா? போற போக்கில் தவெகவை சீண்டிய ஸ்டாலின்!
காங்கிரஸ் எம்.பி. பாலியல் புகார்: ராகுல் காந்தி பெண்களிடம் மன்னிப்பு கேட்க பாஜக வலியுறுத்தல்
காங்கிரஸ் எம்.பி. பாலியல் புகார்: ராகுல் காந்தி பெண்களிடம் மன்னிப்பு கேட்க பாஜக வலியுறுத்தல்
தவெக அரசை மக்கள் எப்படி பயன்படுத்த வேண்டும்? ஜே.சி.டி. பிரபாகர் ஓபன் டாக்!
தவெக அரசை மக்கள் எப்படி பயன்படுத்த வேண்டும்? ஜே.சி.டி. பிரபாகர் ஓபன் டாக்!
டிராஃபிக் பிரச்னைக்கு குட்பை! நாளை முதல் பூந்தமல்லி To வடபழனி இனி நிமிடங்களில் போகலாம்!
டிராஃபிக் பிரச்னைக்கு குட்பை! நாளை முதல் பூந்தமல்லி To வடபழனி இனி நிமிடங்களில் போகலாம்!
மக்களே உஷார்! தமிழகத்தில் எகிறப்போகும் வெயில்... எந்தெந்த மாவட்டங்களில் மழை? - வானிலை வார்னிங்
மக்களே உஷார்! தமிழகத்தில் எகிறப்போகும் வெயில்... எந்தெந்த மாவட்டங்களில் மழை? - வானிலை வார்னிங்
பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ சேவை நாளை தொடக்கம்! சென்னை வருகிறார் PM மோடி! வரவேற்கும் விஜய்!
பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ சேவை நாளை தொடக்கம்! சென்னை வருகிறார் PM மோடி! வரவேற்கும் விஜய்!
Embed widget