மேலும் அறிய

Director Bala: தனது பெயரில் போலி கணக்கு தொடங்கி பெண்களிடம் மோசடி.. எச்சரித்த பாலா..

குறிப்பாக திரைப்படங்களில் நடிக்கும் ஆர்வமுள்ள பெண்களிடம் தனிப்பட்ட முறையில் குறுஞ்செய்திகள் அனுப்பி மோசடி செய்வதாக இயக்குநர் பாலா புகார்

Director Bala: தனது பெயரில் போலி இன்ஸ்டாகிராம் கணக்கு தொடங்கி பெண்களை ஏமாற்றுவதாக இயக்குநர் பாலா தரப்பில் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

தமிழ் சினிமாவில் இதுவரை இல்லாத அளவுக்கு வித்தியாசமான கதை சொல்லியாக பார்க்கப்படுபவர் இயக்குநர் பாலா. கதைக்கு ஏற்ப திரை நடிகர்களை செதுக்கி படம் எடுக்கும் பாலா கலைக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கும் இயக்குநர். தான் இயக்கிய பிதாமகன் படத்தின் மூலம் விக்ரமுக்கு தேசிய விருது வாங்கி கொடுத்த இயக்குநர் பாலா. 

10 படங்களை மட்டுமே இயக்கி இருக்கும் பாலா இதுவரை 4 சர்வதேச விருதுகள், 2 தேசிய விருதுகள், 5 மாநில விருதுகள், 11 பிலிம்பேர் விருதுகளை வாங்கி குவித்துள்ளார். தற்போது அருண் விஜய், ரோஷிணி பிரகாஷ், மிஷ்கின் உள்ளிட்டோர் நடித்திருக்கும் வணங்கான் படத்தை இயக்கி வருகிறார். இந்த நிலையில் தனது பெயரில் போலி இன்ஸ்டாகிராம் கணக்கு தொடங்கி மோசடி செய்வதாக பாலா போலீஸில் புகார் அளித்துள்ளார். 

இது தொடர்பாக பாலா தரப்பில் வெளியிட்டுள்ள தகவலில், ”தனக்கு எந்த ஒரு இன்ஸ்டாகிராம் கணக்கும் இல்லை என்றும், மோசடி செய்யும் நபர்களிடம் யாரும் ஏமாற வேண்டாம்” என பாலா எச்சரிக்கை விடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

இயக்குநர் பாலாவின் பெயரில் யாரோ ஒருவர் பாலசுப்பிரமணியன் பழனிச்சாமி என்ற பெயரில் இன்ஸ்டாகிராம் கணக்கு தொடங்கி முறையற்ற செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும், குறிப்பாக திரைப்படங்களில் நடிக்கும் ஆர்வமுள்ள பெண்களிடம் தனிப்பட்ட முறையில் குறுஞ்செய்திகள் அனுப்பி, அவர்களுக்கு திரைப்பட வாய்ப்பு இருப்பதாக கூறி புகைப்படங்களை கேட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதுமட்டுமில்லாமல் தவறான நோக்கத்தில் பெண்களின் புகைப்படங்களை பயன்படுத்துவது குறித்த தகவல் பாலாவின் கவனத்திற்கு சென்றதாகவும் கூறப்படுகிறது. 

இதை தொடர்ந்து தனது பெயரில் போலி இன்ஸ்டகிராம் கணக்கு தொடங்கிய நபர் மீது நடவடிக்கை எடுக்கும்படி இயக்குநர் பாலா சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.  பொதுவாக தனது திரைப்படங்களில் நடிப்பவர்களுக்கான தேர்வை அவரின் உதவி இயக்குநர்கள் மற்றும் மேலாளர்கள் மட்டுமே நேரடியாக தொடர்புகொண்டு வருகிறார்கள். அதனால் சினிமா ஆர்வம் உள்ளவர்கள், குறிப்பாக தனது திரைப்படங்களில் நடிக்க விரும்புபவர்கள் இது போன்ற போலியான நபர்களை நம்பி ஏமாற வேண்டாம் என்றும்,  விழிப்புணர்வுடன் இருங்கள் என்றும் பாலா தரப்பில் கூறப்பட்டுள்ளது.  

மேலும் படிக்க: Vijay Antony: அன்று அப்பா.. இன்று மகள்.. சோகங்கள் நிறைந்த விஜய் ஆண்டனியின் வாழ்க்கை.. வைரலாகும் வீடியோ..

Vijay Antony Daughter: "என் தங்கக்கட்டி, செல்லக்குட்டி..." மனதை ரணமாக்கும் விஜய் ஆண்டனி மனைவியின் போஸ்ட்..!

 

தலைப்பு செய்திகள்

மார்வெல் ரசிகர்களுக்கு ட்ரீட்.. நாளை ரிலீசாகிறது SPIDER-MAN: BRAND NEW DAY - எதிர்பார்ப்பில் ரசிகர்கள்
மார்வெல் ரசிகர்களுக்கு ட்ரீட்.. நாளை ரிலீசாகிறது SPIDER-MAN: BRAND NEW DAY - எதிர்பார்ப்பில் ரசிகர்கள்
முதல்வர் விஜயை பார்க்க விரும்பல.. வெளிப்படையாக பேசிய சசிகுமார்.. இதுதான் காரணமா?
முதல்வர் விஜயை பார்க்க விரும்பல.. வெளிப்படையாக பேசிய சசிகுமார்.. இதுதான் காரணமா?
ராம் சரணுக்கு கோவையில் நடந்த அறுவை சிகிச்சை... கங்கா மருத்துவமனையை தேர்வு செய்தது ஏன்?
ராம் சரணுக்கு கோவையில் நடந்த அறுவை சிகிச்சை... கங்கா மருத்துவமனையை தேர்வு செய்தது ஏன்?
"யூடியூப்பில் இருந்து இயக்குநராக வருவது எளிதல்ல"... பாரி இளவழகனை பாராட்டிய பரிதாபங்கள் கோபி!

வீடியோ

Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?
SHIFT ஆகும் CM விஜய் அலுவலகம்.. BEACH VIEW உடன் புதிய OFFICE

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Minister Arunraj:
Minister Arunraj: "வரலாற்று துரோகத்தை மறைக்க வெற்று அறிக்கை.." மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் அருண்ராஜ் பதில்!
MK Stalin: திமுக சீரமைப்பை தள்ளிப்போட்ட மு.க.ஸ்டாலின்! என்ன காரணம் தெரியுமா?
MK Stalin: திமுக சீரமைப்பை தள்ளிப்போட்ட மு.க.ஸ்டாலின்! என்ன காரணம் தெரியுமா?
Cauvery Water: தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர முடியாது; கர்நாடக முதல்வர் அதிரடி, என்ன காரணம்?
Cauvery Water: தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர முடியாது; கர்நாடக முதல்வர் அதிரடி, என்ன காரணம்?
US Iran Tensions: ட்ரம்ப்பின் அறிவிப்பால் கொந்தளித்த ஈரான்.! ஹார்முஸில் 3 கப்பல்கள் வழிமறிப்பு; எகிறும் பதற்றம்
ட்ரம்ப்பின் அறிவிப்பால் கொந்தளித்த ஈரான்.! ஹார்முஸில் 3 கப்பல்கள் வழிமறிப்பு; எகிறும் பதற்றம்
CM Vijay: முதலில் Ex.அமைச்சர்கள்..! அடுத்து அதிகாரிகள், கட்டம் கட்டும் TVK அரசு? பட்ஜெட் முடிந்ததும் ஆக்‌ஷன்?
முதலில் Ex.அமைச்சர்கள்..! அடுத்து அதிகாரிகள், கட்டம் கட்டும் TVK அரசு? பட்ஜெட் முடிந்ததும் ஆக்‌ஷன்?
Tata Punch EV 5 star Rating: ‘உங்க பாதுகாப்புக்கு நாங்க கேரண்டி.!‘ மோதல் சோதனையில் 5 ஸ்டார் ரேட்டிங்கை அள்ளிய டாடா பஞ்ச் EV
‘உங்க பாதுகாப்புக்கு நாங்க கேரண்டி.!‘ மோதல் சோதனையில் 5 ஸ்டார் ரேட்டிங்கை அள்ளிய டாடா பஞ்ச் EV
ஒரே சார்ஜில் 260 கி.மீட்டர் மைலேஜ்.. பட்டைய கிளப்பும் Avore EX2S இ பைக் - விலை எவ்ளோ?
ஒரே சார்ஜில் 260 கி.மீட்டர் மைலேஜ்.. பட்டைய கிளப்பும் Avore EX2S இ பைக் - விலை எவ்ளோ?
TVS Raider 125: ஒரு லிட்டருக்கு 60 கிமீ மைலேஜ்.! நீங்க ஆஃபீஸ் போறதுக்கு இது தான் பெஸ்ட் பைக்; TVS ரைடர் 125 விலை என்ன.?
ஒரு லிட்டருக்கு 60 கிமீ மைலேஜ்.! நீங்க ஆஃபீஸ் போறதுக்கு இது தான் பெஸ்ட் பைக்; TVS ரைடர் 125 விலை என்ன.?
Embed widget