ஊர் வாயை அடைக்க முடியாது.. விஜய்க்கு ஆதரவாக களமிறங்கிய அட்லீ.. விஜய் சேதுபதிக்கு பதிலடி?
நான் ராஜா ராணி படம் எடுத்து பிரபலமாகி விட்டேன். ஆனால் எனக்கு விஜய் தொடர்ந்து வாழ்க்கை கொடுத்துக் கொண்டே இருந்தார். தெறி, மெர்சல், பிகில் என அடுத்தடுத்து படம் பண்ணினேன் என இயக்குநர் அட்லீ தெரிவித்துள்ளார்.

அடுத்த தலைமுறையினர் அரசியலில் இருக்க காரணம் என் அண்ணன் முதலமைச்சர் விஜய் தான் என இயக்குநர் அட்லீ தெரிவித்துள்ளார்.
நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம், சீதக்காதி படத்தை தொடர்ந்து இயக்குநர் பாலாஜி தரணீதரன் 3வது முறையாக விஜய் சேதுபதியுடன் இணைந்துள்ள படம் “பத்தா”. லிஜிமோல் ஜோஸ் ஹீரோயினாக நடித்துள்ள இப்படம் அக்டோபர் 1ம் தேதி வெளியாகிறது. இந்த படத்தை இயக்குநர் அட்லீ தயாரிக்க, சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது.
இதில் பேசிய இயக்குநர் அட்லீ, “நான் போட்டிருக்கும் சட்டை, வாட்ச் எல்லாம் என்னுடைய உழைப்பில் கிடைத்திருக்கும் என நினைத்தாலும் என் அண்ணன், தளபதி விஜய் இல்லையென்றால் சான்ஸே கிடையாது. நான் ராஜா ராணி படம் எடுத்து பிரபலமாகி விட்டேன். ஆனால் எனக்கு விஜய் தொடர்ந்து வாழ்க்கை கொடுத்துக் கொண்டே இருந்தார். தெறி, மெர்சல், பிகில் என அடுத்தடுத்து படம் பண்ணினேன். ஷாரூக்கான் என் ஆபீஸூக்கு வருகை தந்தார். அப்போது விஜய் என்னிடம் ஒரு விஷயம் சொன்னார். சும்மா சும்மா என் காலை சுற்றி வராதே.. என்ன பண்ணுவியோ எனக்கு தெரியாது. ஷாருக்கானின் படத்தை தயவுசெய்து பண்ணிடு. உன் வாழ்க்கை மாறிவிடும் என கூறினார். அதேபோல் என் வாழ்க்கை மாறிவிட்டது. இன்னொரு படம் எல்லாம் அவர் கொடுக்க மாட்டார். முதலமைச்சரானாலும் நம் அண்ணன் அண்ணன் தான்.
ஊர் வாயை அடைக்க முடியாது. ஊர் ஆயிரம் பேசும். ஊர் வாயில் விழுந்த நம்மை நம்பி வாழ்ந்துட்டு போவது முட்டாள் தனம் என நினைக்கிறேன். யார் என்ன சொன்னாலும் கேட்காதீர்கள். நீங்கள் உங்கள் இலக்கை நோக்கி சென்று கொண்டே இருங்கள். நடுவில் சின்ன சின்ன தடைகள் வரத்தான் செய்யும். ஜென்ஸி தலைமுறையினரான நாம் தான் அடுத்து வரப்போகிறோம். சமூக வலைத்தளங்களில் இவரு அவரை சொல்கிறார், அவர் இவரை சொல்கிறார் என கூற வேண்டாம். சொல்ல வேண்டும் என்றால் நேரடியாக சொல்லி விட்டு போகலாம். அடுத்த தலைமுறையினர் அரசியலில் இருக்க ஒரே காரணம் விஜய் தான். எனக்கு முந்தைய தலைமுறையினர் அரசியல் செய்ததை பார்த்திருக்கிறேன். ஆனால் இந்த தலைமுறையினர் சட்டசபை நிகழ்வுகளைப் பார்க்க ஒரே காரணம் விஜய் தான். அதை மறுக்கவே முடியாது. அரசியல் நமக்கானது தான். நாம் அதை எந்தளவு, எவ்வளவு எடுத்துக் கொள்கிறோம் என்பதில் தான் விஷயம் உள்ளது.
ராக்கா படத்துக்கு அனிருத் அல்லது ஜிவி பிரகாஷ்குமாரை இசையமைக்க வைக்கலாமா என யோசித்தேன். 2,3 படங்களுக்கு ஒருமுறை இசையமைப்பாளரை மாற்றுவேன். நான் சாய் அபயங்கரை ஒப்பந்தம் செய்யும்போது அவர் ஒரு படம் கூட பண்ணவில்லை. உண்மையில் சாய் அபயங்கர் கடவுளின் குழந்தை தான். எப்படி இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான், ஹாரிஸ் ஜெயராஜ், யுவன், அனிருத் காலக்கட்டம் இருப்பது போல சாய் அபயங்கர் காலமும் கண்டிப்பாக இருக்கும்” என தெரிவித்தார்.
அட்லியின் இந்த பேச்சு சமீபத்தில் விஜய் சேதுபதி முதலமைச்சர் விஜய்க்கு எதிராக கருத்து தெரிவித்ததாக சர்ச்சை எழுந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமைந்ததாக சமூக வலைத்தளங்களில் பலரும் தெரிவித்துள்ளனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்





















