local sarakku movie: சுறா இயக்குனருடன் யோகிபாபு... தினேஷ் மாஸ்டர் கரத்தை வலுப்படுத்தும் வலுவான கதையாம் ‛லோக்கல் சரக்கு’
தினேஷ் மற்றும் யோகிபாபு நடிப்பில் குடிப்பழக்கத்தால் ஏற்படும் விளைவுகளை நகைச்சுவையாக சொல்லும் படமாக ‘லோக்கல் சரக்கு’ வந்துள்ளது.
தினேஷ் மற்றும் யோகிபாபு நடிப்பில் குடிப்பழக்கத்தால் ஏற்படும் விளைவுகளை நகைச்சுவையாக சொல்லும் படமாக ‘லோக்கல் சரக்கு’ வந்துள்ளது.
’ஒரு குப்பைக் கதை’, ‘நாயே பேயே’ ஆகிய படங்களை தொடர்ந்து பிரபல நடன இயக்குநர் தினேஷ் ஹீரோவாக நடிக்கும் படம் ‘லோக்கல் சரக்கு’. இப்படத்தில் தினேஷுடன் இணைந்து யோகி பாபுவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் அண்மையில் வெளியிடப்பட்டது.
View this post on Instagram
உபாசனா ஆர்.சி நாயகியாக நடித்திருக்கும் இப்படத்தில் இமான் அண்ணாச்சி, சாம்ஸ், ரெமோ சிவா, சிங்கம் புலி, வையாபுரி, சென்றாயன், வினோதினி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள்.
’அழகர் மலை’, ‘சுறா’, ‘பட்டைய கிளப்புவோம் பாண்டியா’ உள்ளிட்ட படங்களை இயக்கிய எஸ்.பி.ராஜ்குமார் எழுதி இயக்கியிருக்கும் இந்தப்படத்திற்கு வி.ஆர்.சுவாமிநாதன் ராஜேஷ் இசையமைத்துள்ளார். இவர் பிரபல இசையமைப்பாளர் சங்கர் கணேஷிடம் பல வருடங்களாக உதவியாளராக பணியாற்றியவர்.
டிஸ்கவர் ஸ்டுடியோஸ் சார்பில் எஸ்.வலண்டினா சுவாமிநாதன், டாக்டர்.பத்மா வெங்கடசுப்ரமணியன் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கும் இந்தப்படத்திற்கு எம்.மூவேந்தர் மற்றும் கே.எஸ்.பழநி ஒளிப்பதிவு செய்கின்றனர். ஜே.எப்.கேஸ்ட்ரோ படத்தொகுப்பு செய்ய, முஜ்பூர் ரகுமான் கலையை இயக்குநராக பணியாற்றியுள்ளார்.
கதையின் கரு
குடிப்பழக்கத்துக்கு அடிமையாகி அதனால் பல்வேறு பிரச்சனைகளு ஏற்படுகின்றன. அத்தகைய பிரச்னைகளையும், அதனால் ஏற்படும் விளைவுகளையும் காமெடி கலந்து கமர்ஷியலாக சொல்வது தான் ‘லோக்கல் சரக்கு’ படத்தின் கதை.
View this post on Instagram
’லோக்கல் சரக்கு’ படத்தில் இசையமைப்பாளர் வி.ஆர்.சுவாமிநாதன் ராஜேஷின் இசையில் இரண்டு குத்து பாடல்கள் மற்றும் இரண்டு மெலோடி பாடல்கள் இடம்பெற்றுள்ளது. சென்னை மற்றும் பாண்டிச்சேரியில் படமாக்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து பின்னணி வேலைகள் தொடங்கியுள்ளது.