மேலும் அறிய

Allu Arjun: வசமாக சிக்கினார்! ரசிகை இறந்தது தெரிந்தும் மனசாட்சியே இல்லாமல் அல்லு அர்ஜுன் செய்த மோசமான காரியம்; வெளியானது வீடியோ!

ஹைதராபாத்தில் புஷ்பா 2 படம் பார்க்க சென்ற ரசிகை கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தது தெரிந்தும் 3 மணி நேரமாக ஹாயாக குடும்பத்துடன் படம் பார்த்து மகிழ்ந்த அல்லு அர்ஜூன் வீடியோ வைரலாகி வருகிறது.

புஷ்பா 2:

அல்லு அர்ஜூன் நடித்த 'புஷ்பா 2' படம் கடந்த 5 ஆம் தேதி வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. படம் வெளியாவதற்கு முந்தய நாளன்று ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் சிறப்பு காட்சி போடப்பட்டது. திரையரங்கிற்கு அல்லு அர்ஜுன் தன்னுடைய குடும்பத்துடன் வந்த போது தான் இப்படி ஒரு துயர சம்பவம் நடந்தது.

புஷ்பா 2 படத்தை பார்க்க வாசலில் ஆவலோடு காத்திருந்த ரசிகை ரேவதி மற்றும் அவரின் 8 வயது மகன் இருவரும் அல்லு அர்ஜுனை பார்க்க ரசிகர்கள் ஓடியபோது அதனை காவல் துறையினர் ஒழுங்கு படுத்தினர். அப்போது பல ரசிகர்கள் கூட்டமாக கீழே விழுந்ததில் ரேவதி மற்றும் அவரின் மகள் பலத்த காயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

ரசிகையின் மரணம்:

35 வயதே ஆன ரேவதி உயிரிழந்த நிலையில்,  அவரது மகனும் கூட்ட நெரிசலில் மயங்கி விழுந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.  ஒருவாரத்திற்கு மேல் 8 வயது சிறுவனுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்த போதிலும் அவர் மூளைச்சாவு அடைந்துள்ளார். இச்சம்பவம் தொடர்பாக் அல்லு அர்ஜூன் கைது செய்யப்பட்டார். எனினும், அவருக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டிருந்த நிலையில் ஹைதராபாத் உயர்நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியது. ஜாமீனுக்கான ஆவணங்கள் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்ட நிலையில் அல்லு அர்ஜூன் ஒரு நாள் இரவு முழுவதும் சிறையில் இருந்தார்.

Allu Arjun: வசமாக சிக்கினார்! ரசிகை இறந்தது தெரிந்தும் மனசாட்சியே இல்லாமல் அல்லு அர்ஜுன் செய்த மோசமான காரியம்; வெளியானது வீடியோ!

ரேவத் ரெட்டி குற்றச்சாட்டு:

மறுநாள் ஆவணங்கள் கிடைக்கப் பெற்று சிறையிலிருந்து வெளியில் வந்தார். இந்த நிலையில் தான் தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி அல்லு அர்ஜூன் மீது குற்றச்சாட்டுகளை முன் வைத்தார். அதில், போலிசார் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக அல்லு அர்ஜூனை வர வேண்டாம் என்று கூறியும் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் தியேட்டருக்கு வந்ததே இச்சம்பவத்திற்கு காரணம் என்றார். அதோடு தான் தெலுங்கானாவில் முதல்வராக இருக்கும் வரையில் சிறப்பு காட்சிக்கு அனுமதி கிடையாது என்றார்.

Allu Arjun: வசமாக சிக்கினார்! ரசிகை இறந்தது தெரிந்தும் மனசாட்சியே இல்லாமல் அல்லு அர்ஜுன் செய்த மோசமான காரியம்; வெளியானது வீடியோ!

இந்த நிலையில் சட்டசபையில் இச்சம்பவம் குறித்து பேசிய தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, புஷ்பா 2 படம் பார்க்க வந்த பெண் உயிரிழந்தது தெரிந்தும் படத்தை 3 மணி நேரம் முழுவதுமாக பார்த்து முடித்த பிறகு அவர் அங்கிருந்து புறப்பட்டு சென்றதாக குற்றச்சாட்டுகளை முன் வைத்தார். இதற்கு மறுப்பு தெரிவித்த அல்லு அர்ஜூன் தன்னுடைய பெயருக்கு கலங்கம் விளைவிக்கும் வகையில் தன் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இது எதிர்பாராத விதமாக நடந்த சம்பவம். இதற்காக தனி மனிதன் மீது குற்றம் சாட்டுவது நியாயமற்றது. தனது படம் வெளியாகி வெற்றிநடை போட்டுக் கொண்டிருக்கும் போது கூட தன்னால் இந்த வெற்றியை கொண்டாட முடியவில்லை என்று விளக்கம் கொடுத்தார்.

மனசாட்சி இல்லாத அல்லு அர்ஜுன்?

இந்த நிலையில் தான் ரசிகை உயிரிழந்தது தெரிந்தும் கூட 3 மணி நேரம் திரையரங்கில் அமர்ந்து தன்னுடைய குடும்பத்தோடு அல்லு அர்ஜுன் படத்தை பார்த்த வீடியோ காட்சி வெளியாகி வைரலாகி வருகிறது. இதை பார்த்த நெட்டிசன்கள் பலர் ரேவத் ரெட்டி சொல்வது போல், அல்லு அர்ஜுன் ரசிகை இறந்தது தெரிந்தும் மனசாட்சியே இல்லாமல் படம் பார்த்தாரா? என கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

தலைப்பு செய்திகள்

‘ஸ்பிரிட்’ படத்திலிருந்து தீபிகா படுகோன் விலகியது ஏன்? தயாரிப்பாளர் பிரணய் ரெட்டி வங்கா கூறிய காரணங்கள்
‘ஸ்பிரிட்’ படத்திலிருந்து தீபிகா படுகோன் விலகியது ஏன்? தயாரிப்பாளர் பிரணய் ரெட்டி வங்கா கூறிய காரணங்கள்
கிணத்துக்கடவு தொகுதியில் சீட் கேட்டேனா? லோகேஷ் கனகராஜ் விளக்கம்
கிணத்துக்கடவு தொகுதியில் சீட் கேட்டேனா? லோகேஷ் கனகராஜ் விளக்கம்
நெல்சன் மேஜிக் எங்கே? ‘ஜெயிலர் 2’ ப்ரோமோவில் ரசிகர்களுக்கு ஏமாற்றம்!
நெல்சன் மேஜிக் எங்கே? ‘ஜெயிலர் 2’ ப்ரோமோவில் ரசிகர்களுக்கு ஏமாற்றம்!
Vijay Sethupathy: விக்ரம் வேதா படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி... அப்புறம் எப்படி ஓகே சொன்னார்?
Vijay Sethupathy: விக்ரம் வேதா படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி... அப்புறம் எப்படி ஓகே சொன்னார்?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK TVK: களேபரமான விவாதம் - அராஜகத்தில் ஈடுபட்ட திமுகவினர்? நாஞ்சில் சம்பத் மீது சேர் தூக்கியடிப்பு
களேபரமான விவாதம் - அராஜகத்தில் ஈடுபட்ட திமுகவினர்? நாஞ்சில் சம்பத் மீது சேர் தூக்கியடிப்பு
Trump Vs Iran: உங்க சொந்த நாட்டு பிரச்னைய மறைக்க எங்க மேல தடையா.? ட்ரம்ப்பை கழுவி ஊற்றும் ஈரான்; என்ன விஷயம்.?
உங்க சொந்த நாட்டு பிரச்னைய மறைக்க எங்க மேல தடையா.? ட்ரம்ப்பை கழுவி ஊற்றும் ஈரான்; என்ன விஷயம்.?
TN Weather News: சென்னை உட்பட இன்று எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு? தமிழக வானிலை அறிக்கை
சென்னை உட்பட இன்று எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு? தமிழக வானிலை அறிக்கை
ரேசன் கடையில் கைரேகை, கருவிழி பதிவாகலயா? கவலை வேண்டாம்.. புதிய முறை விரைவில் அறிமுகம்!
ரேசன் கடையில் கைரேகை, கருவிழி பதிவாகலயா? கவலை வேண்டாம்.. புதிய முறை விரைவில் அறிமுகம்!
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்! நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 899 ஆக உயர்த்தப்படும் - அமைச்சர் வெங்கட்ரமணன் அறிவிப்பு
விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்! நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 899 ஆக உயர்த்தப்படும் - அமைச்சர் வெங்கட்ரமணன் அறிவிப்பு
Vijay Sethupathy: விக்ரம் வேதா படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி... அப்புறம் எப்படி ஓகே சொன்னார்?
Vijay Sethupathy: விக்ரம் வேதா படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி... அப்புறம் எப்படி ஓகே சொன்னார்?
நேற்று சொன்ன சிஎம்.. இன்று தலைமைச் செயலகம் வந்த கார்கள் - என்னென்ன வண்டி? என்னென்ன ஸ்பெஷல்?
நேற்று சொன்ன சிஎம்.. இன்று தலைமைச் செயலகம் வந்த கார்கள் - என்னென்ன வண்டி? என்னென்ன ஸ்பெஷல்?
Embed widget