Manjummel Boys: சத்யம் திரையரங்கில் மஞ்சுமெல் பாய்ஸ் பார்த்த தோனி - வைரலாகும் வீடியோ
மலையாளத்தில் வெளியாகி 200 கோடி ரூபாய் வசூல் செய்த மஞ்சுமெல் பாய்ஸ் படத்தை தோனி சென்னையில் பார்த்துள்ளார்.
சென்னை சத்யம் திரையரங்கில் மஞ்சுமெல் பாய்ஸ் படத்தைப் பார்த்துள்ளார் சி.எஸ்.கே அணி வீரர் தோனி. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
மஞ்சுமெல் பாய்ஸ்
கடந்த பிப்ரவரி மாதம் மலையாளத்தில் வெளியான மஞ்சுமெல் பாய்ஸ் திரைப்படம். தமிழ் ரசிகர்களிடம் பரவலான கவனம் பெற்ற இந்தப் படம் தமிழ் மட்டும் மலையாளத்தில், இந்த ஆண்டில் அதிக வசூல் ஈட்டிய படங்களில் முதலிடத்தைப் பிடித்துள்ளது. கடந்த இரண்டு மாதங்களாக திரையரங்கில் ஓடிக் கொண்டிருக்கும் இந்தப் படம் இதுவரை 200 கோடி வரை வசூல் செய்துள்ளது.
உலகநாயகன் கமல்ஹாசன், தனுஷ், சிம்பு, விக்ரம் என தமிழ் சினிமாவில் முன்னணி பிரபலங்கள் இந்தப் படத்தைப் பாராட்டி படக்குழுவினரை சந்தித்து பேசினார்கள். தற்போது இந்தப் படத்தை சென்னை சத்யம் திரையரங்கில் தோனி பார்த்துள்ளது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மஞ்சுமெல் பாய்ஸ் பார்த்த தோனி
இந்த ஆண்டு ஐ.பி.எல் சீசன் கடந்த சில நாட்கள் முன்பாக தொடங்கியது. முதல் போட்டியாக சென்னை மற்றும் பெங்களூரு ஆகிய இரு அணிகளுக்கு இடையில் போட்டி நடைபெற்றது. இந்த ஆண்டு தோனி கேப்டன் பொறுப்பை ருத்துராஜ் கெய்க்வாட் இடம் ஓப்படைத்துள்ளார். இதுவே தோனியின் கடைசி சீசனாக இருக்கும் என்பதால் ரசிகர்களி இந்த சீசனை முடிந்த அளவு கொண்டாடி தீர்க்க வேண்டும் என்கிற ஆவேசத்தில் இருக்கிறார்கள்.
இப்படியான நிலையில் சென்னை தற்போது தங்கியிருக்கும் தோனி சென்னை சத்யம் திரையரங்கில் மஞ்சுமெல் பாய்ஸ் படத்தைப் பார்த்துள்ளார். அவருடன் சி.எஸ்.கே அணியின் நட்சத்திர பந்துவீச்சாளரான தீபக் சாஹரும் காணப்பட்டார்.
Dhoni watched #ManjummelBoys at Saytam Theatre.
— Christopher Kanagaraj (@Chrissuccess) March 24, 2024
pic.twitter.com/7YAVkYeXbD
பொதுவாக தமிழ் சினிமாவின் மீது அதிக ஈடுபாடு கொண்டவர் தோனி. இதனை வெளிப்படும் வகையில் தான் தோனி எண்டர்டெயின்மெண்ட் என்கிற தனது தயாரிப்பு நிறுவனத்தின் முதல் படமாக தமிழில் வெளியான எல்.எஸ்.ஜி படத்தை தயாரித்தார் தோனி. ஹரிஷ் கல்யாண் , இவானா மற்றும் யோகி பாபு உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் நடித்திருந்தார்கள். இப்படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. விரைவில் தோனி மீண்டும் தமிழில் ஒரு வெற்றிப் படத்தை தயாரிப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். மஞ்சுமெல் பாய்ஸ் படத்தைப் பார்த்து அவர் மலையாள சினிமாவிலும் திரைப்படம் தயாரிப்பது பற்றி யோசிக்கலாம் என்று எதிர்பார்க்கப் படுகிறது.