மேலும் அறிய

LGM Trailer: ரசிகர்களே.. எல்.ஜி.எம். இசை மற்றும் ட்ரெயிலரை ரிலீஸ் செய்யும் தோனி, சாக்‌ஷி..! எப்போது, எங்கே?

எல்.ஜி.எம். படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நாளை சென்னையில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

LGM Trailer: எல்ஜிஎம் படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நாளை சென்னையில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

 படத் தயாரிப்பில் களமிறங்கிய தோனி

கிரிக்கெட்டின் கூல் கேப்டன் என்றழைக்கப்படுபவர் எம்.எஸ்.தோனி. இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். தொடர்ந்து ஐபிஎல் கிரிக்கெட்டில் மட்டுமே கவனம் செலுத்தி வரும் தோனி அவ்வப்போது விவசாயம், இராணுவத்தினருடன் பயிற்சியில் ஈடுபடுவது போன்றவற்றிலும் ஈடுபட்டு வருகிறார். இதனிடையே கடந்த ஜனவரி மாதம் 27 ஆம் தேதி தோனி படத் தயாரிப்பில் களமிறங்கவுள்ளதாக அறிவிப்பு வெளியானது. 

தோனி படம் தயாரிக்கப்போகிறார் என தெரியவந்ததும்  ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்தது. யாரும் எதிர்பாராத வகையில் தோனி என்டெர்டெயின்மென்ட்  தயாரிப்பு நிறுவனத்தின் முதல் தயாரிப்பாக “Lets Get Married”  என்ற படம் உருவாகி உள்ளது. இந்த படத்தில் இளம் பெண்களின் கனவு கண்ணனாக வலம் வரும் ஹரீஷ் கல்யாண் ஹீரோவாக நடிக்கிறார். ஹீரோயினாக லவ் டுடே படத்தின் மூலம் இளைஞர்களை கவர்ந்த இவானா நடிக்கிறார். அதுமட்டுமல்லாமல் 80’ஸ் நாயகி நதியாவும், ட்ரெண்டிங் காமெடி நடிகர் யோகி பாபு என பலரும் இப்படத்தில் இணைந்துள்ளனர். 

தோனி கொடுத்த அப்டேட்

தமிழில் விட்னெஸ், தெலுங்கில் அஹம் பிரம்மாஸ்மி படங்களை இயக்கிய ரமேஷ் தமிழ்மணி இப்படத்தை இயக்க, அவரே படத்திற்கும் இசையும் அமைத்திருக்கிறார். இந்நிலையில், இந்த படம் குறித்து மாஸ் அப்டேட் ஒன்றை தோனி வெளியிட்டிருக்கிறார்.  முன்னதாக ஜூன் 8ஆம் தேதி இப்படத்தில் டீசர் வெளியாகி கவனமீர்த்துள்ளது. அதன்பின், ஜூன் 16ஆம் தேதி இப்படத்தில் முதல் சிங்கிளான சலானா பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகி இருந்தது. பாடலாசிரியர் மதன் கார்க்கி பாடலை எழுத ஆதித்யா ஆர்.கே. பாடியிருக்கிறார். பாடலுக்கு தினேஷ் மாஸ்டர் நடனம் அமைத்திருக்கிறார். இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதோடு, எதிர்பார்ப்பையும் அதிகரிக்க செய்தது.

இந்நிலையில், நாளை ஜூலை 10ஆம் தேதி சென்னையில் இந்த படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இந்த விழாவில் எம்.எஸ்.தோனி மற்றும் அவரது மனைவி சாக்ஷியும் கலந்து கொள்கின்றனர்.  இந்நிகழ்ச்சியில் படத்தின் இசை மற்றும் ட்ரெய்லரை தோனி மற்றும் அவரது மனைவி சாக்ஷி வெளியிட உள்ளனர். இந்த தகவலை தோனி என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் சமூக வலைதள பக்கத்தில் பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில், தோனியை காண ரசிர்கள் மிகவும் ஆவலுடன் உள்ளனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs ZIM Match Highlights: ஜிம்பாப்வேக்கு பதிலடி கொடுத்த இந்தியா! 2 வது டி20 போட்டியில் அபார வெற்றி!
IND vs ZIM Match Highlights: ஜிம்பாப்வேக்கு பதிலடி கொடுத்த இந்தியா! 2 வது டி20 போட்டியில் அபார வெற்றி!
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
Breaking News LIVE, July 7 : இரவு 10 மணிவரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு ! வானிலை மையம் அறிவிப்பு
Breaking News LIVE, July 7 : இரவு 10 மணிவரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு ! வானிலை மையம் அறிவிப்பு
Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Armstrong Funeral | உடல் அடக்கம் எங்கே? நீதிமன்றம் சொன்னது என்ன? சம்மதித்த ஆம்ஸ்ட்ராங் மனைவிMayawati in Armstrong Funeral |  Armstrong Murder | உண்மையான குற்றவாளிகள் யார்?அஸ்ரா கர்க் அதிர்ச்சி தகவல் ஆம்ஸ்ட்ராங் படுகொலை..Armstrong Murder : சாமானியன் To தலைவன்!படுகொலை - பகீர் தகவல்! யார் இந்த ஆம்ஸ்ட்ராங்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs ZIM Match Highlights: ஜிம்பாப்வேக்கு பதிலடி கொடுத்த இந்தியா! 2 வது டி20 போட்டியில் அபார வெற்றி!
IND vs ZIM Match Highlights: ஜிம்பாப்வேக்கு பதிலடி கொடுத்த இந்தியா! 2 வது டி20 போட்டியில் அபார வெற்றி!
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
ஜம்மு காஷ்மீரில் என்கவுண்டர்.. வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்கள்.. நடந்தது என்ன?
Breaking News LIVE, July 7 : இரவு 10 மணிவரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு ! வானிலை மையம் அறிவிப்பு
Breaking News LIVE, July 7 : இரவு 10 மணிவரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு ! வானிலை மையம் அறிவிப்பு
Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
Abhishek Sharma: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டி.. மொரட்டு அடி..மிரட்டல் சதம்! அசத்திய அபிஷேக் ஷர்மா!
TNPL 2024: NRK vs CSG: கடைசி ஓவரில் கெத்து காட்டிய நித்திஷ்! - 3 விக்கெட் வித்தியாசத்தில் சேப்பாக்கை வீழ்த்திய நெல்லை ராயல்!
TNPL 2024: NRK vs CSG: கடைசி ஓவரில் கெத்து காட்டிய நித்திஷ்! - 3 விக்கெட் வித்தியாசத்தில் சேப்பாக்கை வீழ்த்திய நெல்லை ராயல்!
Kanchana 4: காஞ்சனா 4 ரெடி! முக்கிய அப்டேட்டை கொடுத்த ராகவா லாரன்ஸ்
Kanchana 4: காஞ்சனா 4 ரெடி! முக்கிய அப்டேட்டை கொடுத்த ராகவா லாரன்ஸ்
Sunil Gavaskar: ட்ராவிட்டிற்கு இதுதான் உயர்ந்த கெளரவமாக இருக்கும்! அரசுக்கு கவாஸ்கர் வைத்த முக்கிய கோரிக்கை!
Sunil Gavaskar: ட்ராவிட்டிற்கு இதுதான் உயர்ந்த கெளரவமாக இருக்கும்! அரசுக்கு கவாஸ்கர் வைத்த முக்கிய கோரிக்கை!
EPS - Annamalai: நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்
EPS - Annamalai: நான் துரோகியா? அண்ணாமலைதான் பச்சோந்தி; சுயநலவாதி ஓபிஎஸ்: வச்சி செய்த இபிஎஸ்
Embed widget