Captain Miller: தனுஷ்- சிவராஜ் குமார் இணைந்து மிரட்டும் கோரனாரு பாடல் ரிலீஸ்! உற்சாகத்தில் கேப்டன் மில்லர் ரசிகர்கள்!
தனுஷ் நடித்துள்ள கேப்டன் மில்லர் படத்தின் மூன்றாவது பாடலான கோரனாரு பாடல் வெளியாகியுள்ளது
கேப்டன் மில்லர்
ராக்கி , சாணி காயிதம் படத்தின் இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் கேப்டன் மில்லர். கன்னட நடிகர் ஷிவராஜ்குமார், பிரியங்கா மோகன் , சந்தீப் கிஷன் உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளார்கள். யுவன் ஷங்கர் ராஜா இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார்.
சத்யஜோதி ஃபிலிம்ஸ் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. வருகின்ர ஜனவரி 12 ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது கேப்டன் மில்லர் திரைப்படம். இந்நிலையில் கேப்டன் மில்லர் படத்தின் மூன்றாவது பாடல் கோரனாரு பாடல் வெளியாகி ரசிகர்களிடம் கவனத்தை ஈர்த்துள்ளது.
கோரனாரு
The Power-packed 3rd Single #Koranaaru from #CaptainMiller is out Now🔥🎶https://t.co/l977rGzr4y
— Sathya Jyothi Films (@SathyaJyothi) January 2, 2024
A @gvprakash Musical 🎶
🎙️@ungaldevaoffl @santoshariharan @ILikeSlander
✍🏻@UmadeviOfficial@dhanushkraja @ArunMatheswaran @NimmaShivanna @gvprakash @saregamasouth pic.twitter.com/S40dzob2in
உமாதேவி எழுதியுள்ள இந்தப் பாடலை தேனிசைத் தென்றல் தேவா, சந்தோஷ் ஹரிஹரன் , அலெக்ஸாண்டர் பாபு ஆகிய மூவர் இணைந்து பாடியுள்ளார்கள் . பாபா பாஸ்கர் இந்தப் பாடலுக்கு நடனம் அமைத்துள்ளார். ராவான குரலில் அமைந்திருக்கும் இந்தப் பாடலில் தனுஷ் மற்றும் சிவராஜ் குமார் இணைந்து நடனமாடியிருப்பது ரசிகர்களை கவர்ந்துள்ளது. குறிப்பாக ஜெயிலர் திரைப்படத்திற்கு பின் கன்னட நடிகர் சிவராஜ்குமாருக்கு தமிழ் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. அதே நேரத்தில் சிவராஜ்குமாரின் கன்னட ரசிகர்களும் இந்தப் பாடலை பாராட்டி வருகிறார்கள்.
கேப்டன் மில்லர் படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு சென்னையில் நாளை பிரமாண்டமாக நடைபெற இருக்கிறது. சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் மாலை 6 மணிக்கு இந்த நிகழ்ச்சி தொடங்க இருக்கிறது.
Buckle up for the Biggest Event of this season 💥#CaptainMiller Grand Pre Release Event Tomorrow , 6PM onwards at Nehru Indoor stadium, Chennai 😎
— Sathya Jyothi Films (@SathyaJyothi) January 2, 2024
#CaptainMillerPongal 🥳@dhanushkraja @ArunMatheswaran @NimmaShivanna @sundeepkishan @gvprakash @priyankaamohan @saregamasouth pic.twitter.com/SVq13v0hpZ
கேப்டன் மில்லர் படத்தைத் தொடர்ந்து தனுஷ் தனது 50 ஆவது படத்தை இயக்கி நடித்துள்ளார். மேலும் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்தையும் இயக்கி வருகிறார். தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் நடிக்க இருக்கும் டி 51 படத்தின் வேலைகளும் விரைவில் தொடங்க இருக்கின்றன. இந்தப் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க இருக்கிறார். ஏ ஆர் ரஹ்மான் இந்தப் படத்திற்கு இசையமைக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத் தக்கது.