Watch Video : ஸ்டைலா.. கெத்தா.. மும்பையில் மாஸ் காட்டிய தனுஷ்.. ஜிவி கொடுத்த மாஸ் அப்டேட்.!
தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் 'மாறன்' திரைப்படத்தின் பின்னணி இசை பணிகள் தொடங்கியதாக இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் அவரது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.
இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாறன்’.இந்தப் படத்தில் நடிகர் தனுஷூக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரங்களில் சமுத்திரக்கனி, காளி வெங்கட் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
இந்தப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத் ராமோஜிராவ் சிட்டியில் நடந்து வந்த நிலையில் தனுஷ் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் திருச்சிற்றம்பலம் படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். அனிருத் இசையமைக்கும் இந்தப் படத்தில், பிரியா பவானி ஷங்கர், ராஷி கண்ணா, நித்யா மேனன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். தற்போது தனுஷ் நானே வருவேன் படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் தற்போது மாறன் குறித்த அப்டேட்டை ஜிவி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.
Migraine | ஒற்றைத் தலைவலி பாடாய்படுத்துதா? இந்த 7 விஷயமும் உங்களுக்கான மந்திரம்..
இந்த பாகங்களில் தொடர்ச்சியாக வலி இருந்தால் கவனிங்க.. மாரடைப்பின் அறிகுறியாக இருக்கலாம்..
இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ள ஜிவி பிரகாஷ், “ மாறன் அப்டேட்.. பின்னணி இசை இன்று தொடங்குகிறது. நிச்சயம் இது ஆக்ஷன் நிறைந்த பின்னணி இசையாக இருக்கும் என்று பதிவிட்டுள்ளார்”. இந்தப்பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Maaran update …. BGScore starts today … will be an action packed score …. @dhanushkraja @karthicknaren_M @SathyaJyothi_ @MalavikaM_
— G.V.Prakash Kumar (@gvprakash) December 11, 2021
அத்துடன், மும்பையில் ‘அட்ராங்கி ரே’ படத்தின் ப்ரோமோஷனுக்கு வருகை தந்திருக்கும் தனுஷின்வீடியோ ஒன்றும் வைரலாகி வருகிறது. ஹிந்தியில் அக்ஷய் குமார், சாரா அலிகான் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் படத்தில் தனுஷூம் நடித்துள்ளார். இந்தப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். வரும் 24 ஆம் தேதி இந்தப் படம் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
#Dhanush 💥💥 papped in mumbai@ArtistryBuzz @dhanushkraja #dhanushfans #kollywood #bollywood pic.twitter.com/RA2bX6xZcI
— A K S Film's @007 (@AKSFilms1) December 11, 2021
மேலும் படிக்க..
Jaw Pain and Heart Attack | தாடை வலி, மாரடைப்பு வருவதற்கான அறிகுறியா?
முடி கொட்டுதா? பிரச்னை இதுதான்..! தலைமுடியும்.. தெரியாத தகவல்களும்!
Diabetes | சர்க்கரை நோய் குறித்து பரப்பப்படும் டாப் 10 பொய்கள் இவைதான்.. இதையெல்லாம் நம்பாதீங்க..
மழைக்காலத்தில் உடலை கதகதப்பாக்கும் உணவுகள் இதோ!
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய லைப்ஸ்டைல் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் லைப்ஸ்டைல் செய்திகளைத் (Tamil Lifestyle News) தொடரவும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்