Dhanush With Ranbir Kapoor | அடுத்து ரன்பீர் கபூருடன் அதிரடியா? தாமதிக்காமல் தனுஷ் சொன்ன பதில்.. எதிர்பார்ப்பில் பாலிவுட்..!
நடிகர் தனுஷ் பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூருடன் இணைந்து நடிக்க விரும்புவதாக கூறியிருக்கிறார்.
நடிகர் தனுஷ் பாலிவூட்டில் மூன்றாவது முறையாக நடித்துள்ள திரைப்படம் அட்ராங்கி ரே. இந்தப் படத்தில் தனுஷூடன்,சாரா அலிகான், அக்ஷய் குமார் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். முன்னதாக, ஹிந்தியில் தனுஷ் அறிமுகமான ராஞ்சனா படத்தை இயக்கிய ஆனந்த் எல்.ராய் இந்தப் படத்தையும் இயக்கியுள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இந்தப் படம், வரும் 24 ஆம் தேதி டிஸ்னி + ஹாட் ஸ்டாரில் வெளியாக உள்ளது. இந்தப் படத்தின் பிரோமோஷன் வேலைகள் மும்மரமாக நடைபெற்று வரும் நிலையில், அதற்காக தனுஷ் மும்பை சென்றிருக்கிறார்.
View this post on Instagram
பாலிவுட் சேனல் ஒன்றிற்கு பேட்டியளித்த தனுஷிடம், ஹிந்தியில் அடுத்தது யாருடன் நடிக்க விரும்புகிறீர்கள் என்று கேட்கப்பட்டது. அப்போது கொஞ்சம் கூட தாமதிக்காத தனுஷ் ரன்பீர் கபூருடன் நடிக்க விரும்புவதாக கூறினார். தொடர்ந்து பேசிய தனுஷ், ரன்பீர் கபூர் மிகச் சிறந்த நடிகர் என்றும் அவருடன் ஒரே ப்ரேமில் தன்னை பார்க்க விரும்புவதாகவும் தெரிவித்தார்.
அது நடந்தால் எல்லா பாக்ஸ் ஆஃபிஸ் ரெக்கார்டுகளெல்லாம் உடையுமல்லவா என்று சொன்னதற்கு, சிரித்துக்கொண்டே.. பதிலளித்த தனுஷ், ”அது உங்களுக்கு தெரியாது.. எது வேண்டுமானாலும் நடக்கலாம். ஆனால் நானும் அவரும் ஒரே ப்ரேமில் இருக்கும்போது என்ன நடக்கும் என்பதை நான் பார்க்கவே விரும்புகிறேன்” என்றார்.
View this post on Instagram
தனுஷ் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் திருச்சிற்றம்பலம் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். அனிருத் இசையமைக்கும் இந்தப் படத்தில், பிரியா பவானி ஷங்கர், ராஷி கண்ணா, நித்யா மேனன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். தற்போது தனுஷ் நானே வருவேன் படத்தில் நடித்து வருகிறார்.
இதனிடையே கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள மாறன் படத்தின் பின்னணி இசைக்கான பணிகள் நடைபெற்று வருவதாக அந்தப் படத்தின் இசையமைப்பாளர் ஜிவி பிரக்ஜாஷ் குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருந்தது கவனிக்கத்தக்கது.