Actor Dhanush: மதுரையில் தெருவில் தனியாக ஜாகிங் சென்ற நடிகர் தனுஷ்... ரசிகரை பார்த்து கையசைத்த வீடியோ வைரல் ..
மதுரையில் நடிகர் தனுஷ் தெருவில் ஜாகிங் சென்ற போது ரசிகர்களை நோக்கி கையசைத்தது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மதுரையில் கேப்டன் மில்லர் படபிடிப்பில் உள்ள நடிகர் தனுஷ் தெருவில் ஜாகிங் சென்ற போது ரசிகர்களை நோக்கி கையசைத்தது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது.
நடிகர் தனுஷ் கேப்டன் மில்லர் படபிடிப்பில் பிசியாக உள்ளார். தற்போது இப்படத்தின் ஷூட்டிங் மதுரையில் நடைபெற்று வருகிறது. தனது பிட்னசில் அதிக கவனம் செலுத்தி வரும் நடிகர் தனுஷ், ஷூட்டிங் தொடங்குவதற்கு முன்னதாக அதிகாலை நேரத்தில் மதுரையில் உள்ள தெருக்களில் ஜாகிங் சென்றார். அவர் ஜாகிங் சென்று கொண்டிருந்த போது அங்கு நின்றிருந்த ஒருவர் சார் சார் என அழைக்கின்றார். நடிகர் தனுஷ் அவரை நோக்கி கையசைத்து விட்டு செல்கிறார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
#Dhanush spotted today while jogging 🤩🔥#CaptainMiller shooting currently going in Madurai 🎬pic.twitter.com/K9O4M6KnW6
— AmuthaBharathi (@CinemaWithAB) June 3, 2023
முன்னனி நடிகர்களில் ஒருவரான நடிகர் தனுஷ், பவுன்சர்ஸ் யாரும் இல்லாமல் தனியாக ஜாகிங் சென்றுள்ளார். மேலும் பொதுமக்கள் மற்றும் பேன்ஸ் தன்னை அடையாளம் கண்டுவிட கூடாது என்பதற்காக அவர் மாஸ்க் மற்றும் கேப் அணிந்து தன்னுடைய முகத்தை மறைத்தவாறு ஜாகிங் சென்றார். இருந்த போதிலும் சிலர் தனுஷை அடையாளம் கண்டு கொண்டனர்.
இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் தற்போது 'கேப்டன் மில்லர்' படத்தில் நடித்து வருகிறார். வரலாற்று பாணியில் உருவாகி வரும் இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். இதில் பிரியங்கா அருள் மோகன், நிவேதிதா சதிஷ், ஜான் கொக்கன் மற்றும் சுமேஷ் மூர், சிவராஜ்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இது 80’s காலகட்டத்தை சார்ந்த கதை ஆகும். இந்த படத்திற்காக நடிகர் தனுஷ் rugged லுக்கில் இருக்கின்றார். இதனால் ரசிகர்கள் மத்தியில் இந்த திரைப்படத்தை பற்றிய எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது.
மேலும் படிக்க