Arulnidhi Dejavu : டிமாண்டி காலனி படத்தோட 4 பாகமும் ரெடி.. ப்ளான் இதுதான் பாஸு.. அதிரடி காட்டும் அருள்நிதி..
"முதல் பாகம் 2023 இல் வெளியானால் 2027 இல் நான்காம் பாகத்தினை வெளியிடுவோம்"
டிமாண்டி காலணி :
இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கிய துப்பாக்கி, கத்தி போன்ற படங்களில் உதவி இயக்குநராக இருந்தவர் அஜய் ஞானமுத்து . இவரது அறிமுக இயக்கத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம்தான் டிமாண்டி காலனி . இந்த படத்தில் அருள்நிதி ஹீரோவாக நடித்திருந்தார்.இந்த படம் பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்தது. இந்த படத்தின் அடுத்த பாகம் உருவாக இருப்பதை அண்மையில் இயக்குநர் அஜய் ஞானமுத்து உறுதி செய்திருந்தார். மேலும் படத்தை கோப்ரா படத்தில் அஜய் ஞானமுத்துவின் உதவி இயக்குநர் வெங்கி வேணுகோபால் இயக்கவுள்ளதாகவும் , இந்த படத்தின் கதை , திரைக்கதை , வசனம் , தயாரிப்பு உள்ளிட்ட பணிகளை அஜய் ஞானமுத்து கவனிக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் டிமாண்டி காலனி 2 மூலம் அஜய் ஞானமுத்து தயாரிப்பாளராகவும் களமிறங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
With all your love and blessings, Super happy and excited to announce my collaboration with my first hero @arulnithitamil bro for #DemonteColony2 ❤️ @VenkyVenugopal the Co-Director of #Cobra will be directing the film!! #7YearsofDemonteColony https://t.co/l3IInw60wO
— Ajay Gnanamuthu (@AjayGnanamuthu) May 22, 2022
டிமாண்டி காலணி 2,3,4
இந்த நிலையில் டிமாண்டி காலனி இரண்டாம் பாகம் குறித்து பகிர்ந்த நடிகர் அருள்நிதி , இந்த படத்தில் மொத்தம் நான்கு பாகங்களை எடுக்க திட்டமிட்டிருக்கிறோம். முதல் பாகம் 2023 இல் வெளியானால் 2027 இல் நான்காம் பாகத்தினை வெளியிடுவோம் .
View this post on Instagram
2023-க்கும் 2027-க்கும் இடைப்பட்ட காலத்தில் என்ன நடக்கும் என்பதுதான் 2025-ஆம் ஆண்டில் மூன்றாம் பாகமாக வெளியாகும் என்றும் கதை மிகவும் அருமையாக வந்திருக்கிறது என்றும் தெரிவித்துள்ளார். இந்த வருட இறுதியில் டிமாண்டி காலனி திரைப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்புகள் தொடங்கவுள்ளதாக அஜய் ஞாமுத்து தெரிவித்திருக்கிறார். படம் முதல் பாகத்தின் தொடர்ச்சியாக இருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் வேண்டாம்.