Warner latest Instagram Reel : புஷ்பா ஓவர்... அடுத்து கே.ஜி.எஃப் - 2 பீவர்... நடிகர் யஷ் வசனத்தை கையிலெடுத்த வார்னர்..
டேவிட் வார்னர் நேற்று இந்தியா முழுவதும் வெளியாகி வசூல் சாதனை படைத்துவரும் கேஜிஎப் - 2 படத்தில் யஷ் பேசிய டைலாக்களை ரீல்ஸ் செய்து வெளியிட்டுள்ளார்.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர் டேவிட் வார்னர். இவர் ஐபிஎல் தொடரில் கடந்த சீசன் வரை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடினார். தற்போது, நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் டெல்லி அணியால் ஏலம் எடுக்கப்பட்டு அந்த அணிக்காக விளையாடி வருகிறார்.
டேவிட் வார்னர், ஹைதராபாத் அணியில் இருந்தபோது தெலுங்கு படங்கள் தொடர்பான பாடல்களுக்கு நடனம் ஆடுவது இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் செய்வது போன்ற விஷயங்களை செய்து வந்தார். இதன்காரணமாக இவருக்கு இந்தியாவில் ரசிகர்கள் அதிகமாக உள்ளனர்.
இந்தநிலையில், டேவிட் வார்னர் நேற்று இந்தியா முழுவதும் வெளியாகி வசூல் சாதனை படைத்துவரும் கேஜிஎப் - 2 படத்தில் யாஷ் பேசிய டைலாக்களை ரீல்ஸ் செய்து வெளியிட்டுள்ளார். தற்போது, அது இணையத்தில் படு வைரலாகி வருகிறது.
View this post on Instagram
கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்தியா முழுவதும் மிகவும் எதிர்ப்பார்க்கப்பட்ட புஷ்பா படத்தின் பாடல் மற்றும் டைலாக்ஸ் மிகப்பெரிய வைரலானது. அதையும் டேவிட் வார்னர் தனது ஸ்டைலில் செய்து வெளியிட்டார்.
View this post on Instagram
இந்திய சினிமாவே கடந்த இரண்டு ஆண்டுகளாக மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கே.ஜி.எப். படத்தின் இரண்டாம் பாகம் நேற்று வெளியாகியது. படத்திற்கு ரசிகர்கள் மிகப்பெரிய வரவேற்பை அளித்து வருகின்றனர். சென்னையில் கே.ஜி.எப். 2ம் பாகமான இன்று எந்த திரையரங்கிலும் டிக்கெட் கிடைக்காத அளவிற்கு ஹவுஸ்புல் ஆகியுள்ளது. இதனால், திரையரங்க உரிமையாளர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.
சென்னையை பொறுத்தவரை (நேற்று) ஏப்ரல் 14ந் தேதி நிலவரப்படி பீஸ்ட் 1.61 கோடி வசூல் குவித்துள்ளது. கே.ஜி.எப். 2 படம் 67 லட்சம் குவித்துள்ளது. தொடர்ந்து, இந்தியா முழுவதும் நேற்று கே.ஜி.எப். 2ம் பாகம் வெளியான அனைத்து மாநிலங்களிலும் கே.ஜி.எப். படமே நம்பர் 1இடத்தில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்