மேலும் அறிய

Captain Miller: தனுஷ் பிறந்தநாள் பரிசாக நள்ளிரவில் ‘கேப்டன் மில்லர்’ டீஸர்... உற்சாகத்தில் ரசிகர்கள்!

தனுஷ் நடித்து வரும் 'கேப்டன் மில்லர்' படத்தின் டீசர் தனுஷின் பிறந்தநாளான ஜூலை 28ஆம் ஆண்டு வெளியாகும் என அறிவிக்க்ப்பட்ட நிலையில் தற்போது டீசர் வெளியாகும் நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது

கேப்டன் மில்லர் படத்தின் டீசர் ஜூலை 28ஆம் தேதி நள்ளிரவு 12 : 01 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இத்துடன் படத்தில் போஸ்டர் ஒன்றையும் பகிர்ந்துள்ளது.

கேப்டன்  மில்லர்

சத்யஜோதி நிறுவனம் தயாரிப்பில், அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிகர் தனுஷ், ‘கேப்டன் மில்லர்’ படத்தில் நடித்து வருகிறார். ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கும் இப்படத்தில் பிரியங்கா அருள்மோகன்,  கன்னட ஸ்டார் சிவராஜ் குமார், சந்தீப் கிஷன், நிவேதிதா, ஜான் கொக்கென் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.

தொடரி, பட்டாஸ், மாறன் ஆகிய படங்களை தொடர்ந்து 4ஆவது முறையாக தனுஷ்  இப்படத்தில் சத்யஜோதி நிறுவனத்துடன் இணைந்துள்ளார். கேப்டன் மில்லர் படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் உருவாகி வருகிறது. இந்தப் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தென்காசி மாவட்டத்தில் உள்ள மத்தளம்பாறை கிராமத்தில் நடந்த போது மிகப்பெரிய சர்ச்சைகளை சந்தித்தது.

முண்டந்துறை புலிகள் காப்பகத்தின் இடைப்பட்ட பகுதியான இந்த ஊடத்தில் உயர் பீம் லைட்டுகள், தீப்பற்றுவது, குண்டு வெடிப்பது தொடர்பான காட்சிகள் படமாக்கப்பட்டன. இதனால்  வனவிலங்குகள் பாதிக்கப்படுவதாக புகார் எழுந்தது. 

ஃபர்ஸ்ட் லுக்

இதனிடையே கடந்த ஜூன் 30 ஆம் தேதி கேப்டன் மில்லர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. வரலாற்று கால கதையை அடிப்படையாக கொண்ட இப்படத்தின் கதை மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் நடிகர் தனுஷ் பிறந்த நாள் ஜூலை 28ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனை மேலும் சிறப்பிக்கும் வண்ணம் கேப்டன் மில்லர் படத்தின் டீசர் வெளியாகும் என அறிவித்தது படக்குழு. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 

பிறந்தநாள் பரிசு

 

தற்போது ஜூலை 28ஆம் தேதி சரியாக நள்ளிரவு 12: 01 மணிக்கு படத்தின் டீசர் வெளியாகும் என படக்குழு  தெரிவித்துள்ளது. இத்துடன் சேர்த்து மிரட்டலான போஸ்டர் ஒன்றையும் வெளியிட்டு ரசிகர்களை மிரளவைத்திருக்கிறது கேப்டன் மில்லர் படக்குழு. கையில் துப்பாக்கியுடன் மிக ஆவேசமாக வெறிகொண்டு நிற்கிறார் தனுஷ். இந்தப் போஸ்டரைப் பார்த்த பின் டீசரின் மேல் உள்ள எதிர்பார்ப்பு பல மடங்கு பெருகியுள்ளது.

 

தலைப்பு செய்திகள்

DC movie Collection: ஹீரோவாகவும் மாஸ் காட்டிய லோகேஷ் கனகராஜ்! ! 'DC' படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
ஹீரோவாகவும் மாஸ் காட்டிய லோகேஷ் கனகராஜ்! ! 'DC' படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
DC படத்தில் லோகேஷ் கனகராஜூக்கு பதிலாக இந்த தெலுங்கு நடிகர் நடிக்க இருந்தாரா?
DC படத்தில் லோகேஷ் கனகராஜூக்கு பதிலாக இந்த தெலுங்கு நடிகர் நடிக்க இருந்தாரா?
விஜய்யின் உடைந்த குடும்பத்தை காப்பாற்றியது யார்? - சங்கீதாவின் திடீர் முடிவுக்கு காரணம் என்ன? வெளியான உண்மைகள்
விஜய்யின் உடைந்த குடும்பத்தை காப்பாற்றியது யார்? - சங்கீதாவின் திடீர் முடிவுக்கு காரணம் என்ன? வெளியான உண்மைகள்
"விஜய், அஜித், விக்னேஷ்னு இருந்துச்சு.. காலம் கைவிட்ருச்சு.." நொந்து பேசிய முன்னாள் ஹீரோ!

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
US Iran War: “சும்மா மேல இருந்து மட்டும் குண்டு போட்டா வேலைக்கு ஆகாது“; ட்ரம்ப்புக்கு US ராணுவ ஜெனரல் வார்னிங்
“சும்மா மேல இருந்து மட்டும் குண்டு போட்டா வேலைக்கு ஆகாது“; ட்ரம்ப்புக்கு US ராணுவ ஜெனரல் வார்னிங்
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
US Tariff on India: இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
Zelensky Serbia Weapons: பலே கில்லாடி மா நீ.! ரஷ்யாவின் நட்பு நாட்டிடமே ஆயுதங்களை கேட்கும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி; கிடைக்குமா.?
பலே கில்லாடி மா நீ.! ரஷ்யாவின் நட்பு நாட்டிடமே ஆயுதங்களை கேட்கும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி; கிடைக்குமா.?
Lottery Martin's donation ; ”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
Best Selling Midsize SUV: எத்தன புது SUV வந்தாலும் தோத்துதான் ஓடனும்.! விற்பனையில் தொடர்ந்து முதலிடம்; அசத்தும் அந்த கார் எது.?
எத்தன புது SUV வந்தாலும் தோத்துதான் ஓடனும்.! விற்பனையில் தொடர்ந்து முதலிடம்; அசத்தும் அந்த கார் எது.?
Embed widget