Dance Master Shanthi : ஆடியன்ஸ் மாறிவிட்டார்கள்... வருத்தமாக இருக்கிறது.. இசை வெளியீட்டு விழாவில் சாந்தி ஆதங்கம்
இந்த காலத்தில் பாடல்கள் எல்லாம் கமர்ஷியல் மயமாகிவிட்டது. பார்வையார்களின் தேவையே மாறிவிட்டது. கதைககளை தான் பெரிதும் எதிர்பார்க்கிறார்கள். கட்டில் பாடல் வெளியீட்டு விழாவில் நடன இயக்குனர் சாந்தி ஆதங்கம்
மேப்பிள் லீஃப் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் இ.வி.கணேஷ்பாபு இயக்கி தயாரித்து கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் 'கட்டில்'. எடிட்டர் பி.லெனின் இப்படத்திற்கு கதை, திரைக்கதை எழுத, ஸ்ரீகாந்த் தேவா இசையமைக்க ஒளிப்பதிவு பணிகளை மேற்கொண்டுள்ளார் வைட் அங்கிள் ரவிசங்கர். படத்தின் ஹீரோயினாக சிருஷ்டி டாங்கே நடித்துள்ளார்.
பாடல் வெளியீட்டு விழா :
'கட்டில்' படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் வெளியீட்டு விழா நடைபெற்றதில் படக்குழுவினர் கலந்து கொண்டனர். மேலும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அவர்களுடன் இந்த விழாவில் கலந்து கொண்டார். இந்த விழாவில் கலந்து கொண்டு பேசிய படத்தின் இயக்குனர் இ.வி.கணேஷ்பாபு, நானும் ஒரு காலத்தில் பத்திரிகையாளனாக இருந்துள்ளேன். இன்று பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டதில் மகிழ்ச்சி. இன்று நான் இந்த மேடையில் இருக்க முக்கிய காரணம் எடிட்டர் லெனின். அவரின் ஊக்கப்படுத்தியதால் தான் இந்த திரைப்படம் சாத்தியமானது.
நான்கு மொழிகளிலும் சித் ஸ்ரீராம் :
கட்டில் திரைப்படம் நான்கு மொழிகளில் வெளியாகவுள்ளது. ஸ்ரீகாந்த் தேவா இசையமைப்பில் பாடல்கள் அனைத்தும் மிகவும் நன்றாக வந்துள்ளது. சித் ஸ்ரீராம் ஒரு சில அருமையான பாடல்களை தான் தேர்ந்தெடுத்து பாடுவார். ஆனால் எங்கள் படத்தில் நன்கு மொழிகளிலும் அவரே பாடியதில் மிக்க மகிழ்ச்சி. படத்திற்கு மேலும் பலம் சேர்த்துள்ளது வைட் அங்கிள் ரவிசங்கரின் ஒளிப்பதிவு. நமது நாட்டின் பாரம்பரியத்தை போற்றும் விதமாக உருவாக்கப்பட்டுள்ள இப்படம் நிச்சயம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெரும் என எதிர்பார்க்கிறோம் என்றார் இ.வி.கணேஷ்பாபு.
View this post on Instagram
நடன இயக்குனர் சாந்தி வருத்தம் :
கட்டில் படத்தின் நடன இயக்குனரான மெட்டி ஒலி சாந்தி பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமாகிவிட்டார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய நடன இயக்குனர் சாந்தி " அந்த காலங்களில் எல்லாம் பாடல்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும். பாடல்கள் அனைத்தும் கதையோடு ஒன்றியே இருக்கும். ஆனால் இந்த காலத்தில் பாடல்கள் எல்லாம் கமர்ஷியல் மயமாகிவிட்டது. நடன இயக்குனராக இதை நினைத்து அடிக்கடி வருத்தப்பட்டுளேன். இன்று இருக்கும் பார்வையார்களின் தேவையே மாறிவிட்டது. கதைககளை தான் பெரிதும் எதிர்பார்க்கிறார்கள். ஆனால் இந்த படத்தின் பாடல்களுக்காகவே மக்கள் படம் பார்ப்பார்கள். பாடல்களே படத்தின் ஒட்டுமொத்த கதையையும் சொல்லிவிடும். பாடல்கள் ஒவ்வொன்றையும் மிக சிறப்பாக அமைத்த ஸ்ரீகாந்த் தேவாவிற்கு தான் நன்றி சொல்ல வேண்டும். இப்படம் நிச்சயமாக வெற்றி பெற நான் பிராத்திக்கிறேன்" என பேசினார் நடன இயக்குனர் சாந்தி.