மேலும் அறிய

Vadivelu | டிடக்டிவ் நேசமணி வருகிறாரா இல்லையா? - உண்மையை உடைத்த தயாரிப்பாளர் சிவி குமார்!

தற்போது வெள்ளித்திரையில் வடிவேலுவின் நடமாட்டம் இல்லாவிட்டாலும் மீம்ஸ் வாயிலாக வடிவேலு இன்னும் ரசிகர்களை மகிழ்வித்துக்கொண்டேதான் இருக்கிறார்.

தனது முக பாவனைகளாலும் எதார்த்த நடிப்பாலும் ரசிகர்களை கவர்ந்தவர் நகைச்சுவை நடிகர் வடிவேலு. இடையில் இவரின்  அரசியல் தலையீடு மற்றும் தேர்தல் பிரச்சாரம் காரணமாக தனக்கு இருந்த சினிமா வாய்ப்பினை தவறவிட்டார். பின்னர் கிடைத்த பட வாய்ப்புகளில் இயக்குநருக்கும் வடிவேலுக்குமான மோதல் போக்கு அதிகமாக இருந்ததாகவும் கூறப்பட்டது.  ஒரு காலத்தில் வடிவேலுவின் கால்ஷீட்டிற்காக தமிழ் சினிமாவின் உச்ச நடிகர்களும் , முன்னணி இயக்குநர்களும் காத்துக்கிடந்தனர்.

தற்போது வெள்ளித்திரையில் வடிவேலுவின் நடமாட்டம் இல்லாவிட்டாலும் மீம்ஸ் வாயிலாக வடிவேலு இன்னும் ரசிகர்களை மகிழ்வித்துக்கொண்டேதான் இருக்கிறார். இந்நிலையில் வடிவேலும் மீண்டும் எப்போது திரையில் தோன்றுவார் என்ற எதிர்பார்ப்பு அவரது ரசிகர்கள் மத்தியில் அதிகமாகவே உள்ளது.  இந்நிலையில் ஒடிடி தளம் ஒன்று உருவாக்க உள்ள புதிய நிகழ்ச்சிகள் மூலமாக மீண்டும்  வடிவேலு ரசிகர்களை மகிழ்விக்க  வர இருப்பதாக செய்திகள் வெளியாகின. தெலுங்கில் பிரபலமாக உள்ள ஆஹா என்னும் ஒடிடி தளம் தமிழில் கால்பதிக்க உள்ளது. இதன் மூலமாக வடிவேலு மீண்டும் தான் விட்ட இடத்தை நிரப்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.


Vadivelu | டிடக்டிவ் நேசமணி வருகிறாரா இல்லையா? - உண்மையை உடைத்த தயாரிப்பாளர் சிவி குமார்!

மேலும் வடிவேலுவின் அசத்தல் காமெடியில் வெளியான ‘பிரண்ட்ஸ்’ திரைப்படத்தில் ‘ நேசமணி’ என்னும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த கதாபாத்திரம் சமீபத்தில் உலக அளவில் டிரெண்டானது. இந்த வைரலுக்கு பிறகு வடிவேலு மீண்டும் இயக்குநர்களின் கவனம் பெற்றார். தில்லுக்கு துட்டு படத்தை இயக்கிய இயக்குநர் ராம் பாலா இயக்கத்தில், சிவி குமார் தயாரிப்பில் வடிவேலு நடிப்பில் புதிய படம் ஒன்று உருவாக இருப்பதாக தலவல்கள் வெளியாகின. ஆனால் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. இந்நிலையில் இவர்கள் கூட்டணியில் உருவான படத்தின் பெயர் டிடக்டிவ் நேசமணி என்றும் படம் தயார் நிலையில் உள்ளது, விரைவில் ஒடிடி தளத்தில் வெளியாகும் எனவும் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் தகவல்கள் உலா வந்தது. மேலும் படத்தில் வடிவேலுவின் கெட்டப் குறித்த ஃபேன் மேட் போஸ்டரும் வெளியானது. 

இது குறித்து அறிந்த தயாரிப்பாளர் சிவி குமார்  இதற்கு விளக்கமளித்துள்ளார். அதில் “Fake news uhh இருந்தாலும் ஓரு நியாயம் வேண்டாமாப்பா … ஆனா தலைவர் டிசைன்ல சூப்பர்ப்பா …” என கூறி முற்றுப்புள்ளி வைத்துள்ளார். இதற்கு கீழே கமெண்ட் செய்த வடிவேலு ரசிகர்கள் “ஃபேக் நியூஸ உண்மையான நியூஸா மாத்தினா ரொம்ப நல்லா இருக்கும் தயவுசெய்து முயற்சி செய்யுங்க அண்ணா” என கோரிக்கை விடுத்துள்ளனர். விரைவில் இந்த கூட்டணியில் உருவாகும்  படத்தின் அப்டேட் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தலைப்பு செய்திகள்

One Sun One Moon Lyrics : இன்றைக்கும் என்றைக்கும் ஒரு தலைவன் தான்..One Sun One Moon பாடல் லிரிக்ஸ் இதோ
One Sun One Moon Lyrics : இன்றைக்கும் என்றைக்கும் ஒரு தலைவன் தான்..One Sun One Moon பாடல் லிரிக்ஸ் இதோ
"நானும் தனுஷும் சேர்ந்து நடிக்காததற்கு இவர்கள்தான் காரணம்" - குண்டைத் தூக்கிப்போட்ட வடிவேலு
நினைவு நாளில் நடந்த அதிர்ச்சி! பூட்டப்பட்ட எஸ்பிபி நினைவிடம்... கண்ணீருடன் திரும்பிய ரசிகர்கள்!
நினைவு நாளில் நடந்த அதிர்ச்சி! பூட்டப்பட்ட எஸ்பிபி நினைவிடம்... கண்ணீருடன் திரும்பிய ரசிகர்கள்!
இவராவது வாய் திறந்து பேசினாரே...சின்மயி, ஷாலின் மரியாவுக்கு அமைச்சர் ராஜ்மோகன் ஆதரவு
இவராவது வாய் திறந்து பேசினாரே...சின்மயி, ஷாலின் மரியாவுக்கு அமைச்சர் ராஜ்மோகன் ஆதரவு

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin Slams CM Vijay: “மக்கள் முன் நடித்துக்கொண்டே இருக்கும் மாண்புமிகு முதலமைச்சர் விஜய் அவர்களே“: விளாசிய ஸ்டாலின்
“மக்கள் முன் நடித்துக்கொண்டே இருக்கும் மாண்புமிகு முதலமைச்சர் விஜய் அவர்களே“: விளாசிய ஸ்டாலின்
தவெகவில் இணைந்தவர்களுக்கு விஜய் தந்த சர்ப்ரைஸ்! மாஜி அமைச்சர்களுக்கு மாஸ் பொறுப்பு - யாருக்கு என்னென்ன பதவி?
தவெகவில் இணைந்தவர்களுக்கு விஜய் தந்த சர்ப்ரைஸ்! மாஜி அமைச்சர்களுக்கு மாஸ் பொறுப்பு - யாருக்கு என்னென்ன பதவி?
பெண்கள் குறித்து ஆபாச பேச்சு; பொறுக்க மாட்டேன் - திமுகவுக்கு முதல்வர் விஜய் கடும் எச்சரிக்கை
பெண்கள் குறித்து ஆபாச பேச்சு; பொறுக்க மாட்டேன் - திமுகவுக்கு முதல்வர் விஜய் கடும் எச்சரிக்கை
Aadhav Arjuna: ஜெம் வீரமணி வழக்கு: திமுக ஆட்சியில் முடிக்க ரூ.80 கோடி பரிமாற்றமா? ஆதவ் அர்ஜுனா கேள்வி!
ஜெம் வீரமணி வழக்கு: திமுக ஆட்சியில் முடிக்க ரூ.80 கோடி பரிமாற்றமா? ஆதவ் அர்ஜுனா கேள்வி!
CM Vijay: முதல்வராக நான் இங்கு வரவில்லை: என் தங்கச்சி மரகதம் குமரவேல்- சிஎம் விஜய் உருக்கம்!
CM Vijay: முதல்வராக நான் இங்கு வரவில்லை: என் தங்கச்சி மரகதம் குமரவேல்- சிஎம் விஜய் உருக்கம்!
பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லையா? பொய்யான தகவல்களை பகிர வேண்டாம் - தாம்பரம் போலீசார்
பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லையா? பொய்யான தகவல்களை பகிர வேண்டாம் - தாம்பரம் போலீசார்
Masoud Pezeshkian on War: “எங்களுக்கு போர் வேண்டாம், அமெரிக்கா தான் முடிவு செய்யனும்“; ஈரான் அதிபர் பெஷெஷ்கியன் கூறுவது என்ன.?
“எங்களுக்கு போர் வேண்டாம், அமெரிக்கா தான் முடிவு செய்யனும்“; ஈரான் அதிபர் பெஷெஷ்கியன் கூறுவது என்ன.?
Tata Aeris on EMI: மலிவு விலையில் ஹைடெக்கான Aeris காரை இறக்கிய டாடா.! இதை லோனில் வாங்கினால் EMI எவ்வளவு தெரியுமா.?
மலிவு விலையில் ஹைடெக்கான Aeris காரை இறக்கிய டாடா.! இதை லோனில் வாங்கினால் EMI எவ்வளவு தெரியுமா.?
Embed widget