Custody Twitter Review: வெங்கட் பிரபு விருந்து வைத்தாரா..? வெறுப்பு ஏற்றினாரா..? கஸ்டடி ட்விட்டர் விமர்சனம்..!
Custody Movie Twitter Review: காவல் துறை அதிகாரியாக நாகசைதன்யா இப்படத்தில் நடித்துள்ள நிலையில், விறுவிறுப்பான சேஸிங் காட்சிகள் ட்ரெய்லரில் இடம்பெற்றிருந்தன.
தெலுங்கு நடிகர் நாக சைதன்யா, க்ரித்தி ஷெட்டி, அரவிந்த் சாமி, சரத்குமார், பிரேம்ஜி, சம்பத் ராஜ், பிரியாமணி ஆகியோர் நடிப்பில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள திரைப்படம் ‘கஸ்டடி’. கோலிவுட்டில் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தைக் கொண்டுள்ள இயக்குநர் வெங்கட் பிரபு இந்தப் படத்தை இயக்கியுள்ளார். மாமனிதன் படத்துக்குப் பிறகு இளையராஜாவும் அவரது மகன் யுவனும் இணைந்து இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளனர்.
கஸ்டடி விமர்சனம்:
சென்ற ஆண்டு நவம்பர் மாதம் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டைட்டில் வெளியாகி ரசிகர்களை ஈர்த்தது. தொடர்ந்து மார்ச் மாதம் இந்தப் படத்தின் டீசரும் கடந்த மே 5ஆம் தேதி இந்தப் படத்தின் ட்ரெய்லரும் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. காவல் துறை அதிகாரியாக நாகசைதன்யா இப்படத்தில் நடித்துள்ள நிலையில், விறுவிறுப்பான சேஸிங் காட்சிகள் ட்ரெய்லரில் இடம்பெற்றிருந்தன.
தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் இப்படம் வெளியாகியுள்ள நிலையில், வெங்கட் பிரபு ஸ்பெஷல் படமாக இப்படம் அமைந்ததா, ரசிகர்கள் சொல்வது என்ன எனப் பார்க்கலாம்!
Show time:#Custody
— Lokie (@LokeshD33384473) May 12, 2023
⭐⭐⭐/5
Sorry guys for the late review.
Cinema is just as fuckin💥 awesome in its own way
I won't say damn word about custody,coz fans and people should enjoy this #cult movie of @chay_akkineni,movie has that potential.
#CustodyFromTomorrow#CustodyReview pic.twitter.com/rINaFRhbAK
“படம் தனித்துவமாக அற்புதமாக உள்ளது. நாக சைதன்யாவின் இந்த கல்ட் படத்தை மக்களும் ரசிகர்களும் பார்த்து ரசிக்க வேண்டும், அதனால் இந்தப் படத்தைப் பற்றி நான் எதுவும் சொல்ல மாட்டேன்” எனப் பேசியுள்ளார்.
#Custody is a decent action thriller. The initial love track and a few boring parts in the second hour act as minus points, but the other important scenes work well. The dynamic between Shiva and Raju was good, and Raju's character stands out. #CustodyReview pic.twitter.com/fwjWaIV3Rb
— అరగంటలో దివ్యమైన ముహూర్తం ఉందమ్మా (@ThisIsAdityamov) May 12, 2023
”கஸ்டடி ஒரு டீசண்ட் ஆக்ஷன் த்ரில்லர். ஆரம்ப காதல் காட்சிகள் உள்ளிட்ட சில பகுதிகளில் படத்தின் குறை ஆனாலும், மற்ற காட்சிகள் நன்றாக வந்துள்ளன” எனத் தெரிவித்துள்ளார்.
1st half diff setup by VP,slowpace.Chay decent work👏.Forced comedy,inorganic romantic chemistry,its tiresome.Chaotic conflict n confrontation.2nd half total mess,abrupt ending.Effort wasted in disaster attempt 😢 #Custody #NagaChaitanya#custodyreview #CustodyMovie #KrithiShetty pic.twitter.com/n6SPsrkY2C
— Aparna bedi (@appurant) May 11, 2023
”முதல் பாதி வித்தியாசமாகவும், மெதுவான காட்சிகளுடனும் நகரும் நிலையில், இரண்டாம் பாதியில் வலிந்து திணிக்கப்பட்ட காமெடி, ரொமான்ஸ் காட்சிகள் சோர்வாக்குகின்றன. இரண்டாம் பாதி முழுவதும் மாஸ், ஆனால் சடாரென முடிந்துவிட்டது. படத்துக்கான உழைப்பு வீணடிக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
Review: #Custody
— Ante Sundaraniki!!! (@nameisAj8) May 12, 2023
Positives:
1. Screenplay
2. Arvind Swamy’s characterization
3. Pre interval and forest sequences
Negatives:
1. Songs
2. Few repetitive scenes
Verdict: Custody is not great but not bad either kind of flick and ends up as a satisfactory watch
Rating:3.25/5
”கஸ்டடி சிறப்பான படமல்ல , அதே நேரம் மோசமான படமும் அல்ல, அரவிந்த் சாமி, திரைக்கதை ஆகியவை படத்தின் பலம். பாடல்களும், ரிப்பீட்டட் காட்சிகளும் குறை” எனத் தெரிவித்துள்ளார்.