Jaydev Unadkat: ‘மோசமான படம்.. என்னோட 3 மணி நேரம் வேஸ்ட்’ - அனிமல் படத்தை விளாசிய கிரிக்கெட் வீரர் ஜெயதேவ் உனட்கட்
ரன்பீர் கபூர் நடித்துள்ள அனிமல் திரைப்படத்தை இந்திய கிரிக்கெட் வீரர் ஜெயதேவ் உனட்கட் சரமாரியாக விமர்சித்துள்ளார்.
அனிமல்
அர்ஜுன் ரெட்டி படத்தை இயக்கிய சந்தீப் ரெட்டி வங்கா இயக்கியிருக்கும் படம் அனிமல். ரன்பீர் கபூர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ராஷ்மிகா மந்தனா, அனில் கபூர், பாபு டியோல், உள்ளிட்டவர்கள் துணைக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். கடந்த டிசம்பர் 1 ஆம் தேதி வெளியான அனிமல் திரைப்படம் பல்வேறு விமர்சனங்களைப் பெற்று வந்தாலும் பாக்ஸ் ஆஃபிஸில் சாதனைப் படைத்து வருகிறது.
அனிமல் பாக்ஸ் ஆஃபிஸ்
அனிமல் திரைப்படம் வெளியாகி நான்கு நாட்களைக் கடந்துள்ள நிலையில் இதுவரை உலகளவில் மொத்தம் ரூ 425 கோடி வசூல் செய்துள்ளது. தமிழ் , தெலுங்கு , மலையாளம், இந்தி, கன்னடம் ஆகிய அனைத்து மொழிகளிலும் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது இந்தப் படம்.
. #Animal conquers Monday!🔥🪓#AnimalHuntBegins
— T-Series (@TSeries) December 5, 2023
Book Your Tickets 🎟️ https://t.co/QvCXnEetUb#AnimalInCinemasNow #AnimalTheFilm @AnimalTheFilm @AnilKapoor #RanbirKapoor @iamRashmika @thedeol @tripti_dimri23@imvangasandeep #BhushanKumar @VangaPranay @MuradKhetani… pic.twitter.com/UqTUzl7ZTw
விமர்சனங்கள்
ஒரு பக்கம் அனிமல் படம் ரன்பீர் கபூரின் ரசிகர்களுக்கு விருந்தாக அமைய மறுப்பக்கம் சமூக ஆர்வலர்களை கடும் கோபத்திற்கு உள்ளாக்கி இருக்கிறது. முழுக்க முழுக்க ஆணாதிக்க பெருமையை ஊட்டும் , பெண்களுக்கு எதிரான வன்மத்தை சித்தரிக்கும் காட்சிகள் அனிமல் படத்தில் நிறைந்திருப்பதாக விமர்சகர்கள் கூறி வருகிறார்கள். ஒரு சில முன்னணி நடிகர்களும் இந்தப் படத்தை சாடியுள்ளார்கள். அந்த வரிசையில் தற்போது இந்திய கிரிக்கெட் வீரர் ஜெயதேவ் உனட்கட் அனிமல் படத்தை கடுமையாக விமர்சித்துள்ளார்.
நாம் இன்னும் காட்டில் வாழவில்லை
#JayaDevUnadkat about #Animal 😲
— Prakash Mahadevan (@PrakashMahadev) December 3, 2023
ஒரே அடி 😲🧐 pic.twitter.com/3I55lAvMRP
தன்னுடைய பதிவில் ”அனிமல் படம் ஒரு அபத்தம். இன்றையச் சூழலில் ஆண் மையவாதம் என்கிற பெயரில் முழுக்க முழுக்க பெண் வெறுப்பை விதைப்பதை விட இழிவான செயல் வேறில்லை.இன்னும் நாம் காட்டிலோ அரண்மனைகளிலோ வாழ்ந்துகொண்டு வேட்டைக்கு செல்லும் காலத்தில் இல்லை. எவ்வளவு சிறப்பாக நடித்திருந்தால் என்ன..கோடிக்கணக்கான மக்கள் பார்க்கும் இப்படியான படத்தில் ஒரு செயலை காட்டும்போது கவனமாக இருக்க வேண்டும் . பொழுதுபோக்குத் துறையாக இருந்தாலும் அதற்கென்று சமூக பொறுப்பு ஒன்று இருக்கிறது. இவ்வளவு மோசமான ஒரு படத்தை பார்த்து என்னுடைய 3 மணி நேரத்தை வீணடித்துவிட்டேன்.” என்று அவர் கூறியுள்ளார்.