Celebrities list :கொரோனா 3-வது அலையில் சிக்கிய திரைபிரபலங்கள்.. சினிமாவில் சாதனை..கொரோனாவினால் வேதனை!
கடந்த சில வாரங்களாகவே கொரோனா 3-வது அலையில் பல சினிமா திரைபிரபலங்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்தியாவில் 3 வது அலை தொடங்கிவிட்டதாக நிபுணர்கள் கூறுகிறார்கள். மீண்டும் கொரோனா தொற்று வேகமெடுத்து, தினசரி எண்ணிக்கை 1 லட்சத்தைத் தாண்டியுள்ளது. ஜனவரி 6-ம் தேதி தொற்றைக் காட்டிலும் நேற்றைய (ஜன.7) எண்ணிக்கை 28 சதவீதம் அதிகரித்து, 1,17,100 ஆக உயர்ந்துள்ளது கவலை அளிக்கிறது. இதன்மூலம் ஒட்டுமொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 3.52 கோடியாக அதிகரித்துள்ளது.
Kamal Hassan suffering from Corona virus🦠😷 after return from USA🇺🇸
— Praveen Prakash (@Praveen94300) November 23, 2021
Get well soon#KamalHaasan #COVID19
இந்தநிலையில், கடந்த சில வாரங்களாகவே கொரோனா 3வது அலையில் பல சினிமா திரைபிரபலங்கள் பாதிக்கபட்டு வருகின்றனர். முதன் முதலாக கடந்த நவம்பர் மாதம் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய கமல் ஹாசனுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பினார். அதேபோல், சர்வைவர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய அர்ஜுன், நடிகர் விக்ரம், வைகை புயல் வடிவேலு என்று டிசம்பர் மாதம் அடுத்தது கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.
View this post on Instagram
தொடர்ந்து, பாலிவுட் நடிகை கரீனா கபூர், நடிகர் அருண் விஜய், நடிகை மீனா மற்றும் அவரது குழந்தை நைனிகா உள்பட அவரது கும்பத்தார் அனைவருக்கும் தொற்று உறுதியானது. திரிஷா, பிக்பாஸ் புகழ் செரீன்,லட்சுமி மஞ்சு இந்த தொற்று கண்டறியப்பட்டது.
Superstar Mahesh Babu tested corona positive.
— Krishna Chaudhary (@Krishna23332657) January 7, 2022
Get well soon #MaheshBabu pic.twitter.com/ngAzm3bBuE
தெலுங்கு சூப்பர் ஸ்டார் நடிகர் மகேஷ் பாபு, சத்யராஜ் ஆகியோரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னணி இசையமைப்பாளராக இருந்து வரும் தமனுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் இன்றைய முக்கியச் செய்திகள்...
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

