Cobra Director: ‛ஏமாற்றியதற்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்...’ -கோப்ரா இயக்குனர் அஜய் ஞானமுத்து!
கோப்ரா படம் கலவையான விமர்சனங்களை பெற்று வரும் நிலையில் அந்தப்படத்தின் இயக்குநர் அஜய்ஞானமுத்து மன்னிப்புக்கேட்டுள்ளார்.
இயக்குநர் அஜய்ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் கடந்த மாதம் 31 ஆம் தேதி வெளியான திரைப்படம் ‘கோப்ரா’. மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கிடையே இந்தப்படத்தின் ஃபர்ஸ்ட் ஆஃப் ஓகே என்ற சொன்ன ரசிகர்கள், செகண்ட் ஆஃப் நீளமாக இருப்பதோடு, போர் அடிக்கும் வகையில் இருப்பதாகவும் தங்களின் விமர்சனத்தை முன்வைத்தனர். இதனால் படக்குழு 3 மணி நேரம் 3 நிமிடம் 3 நொடியாக இருந்த படத்தில் 20 நிமிடத்தை குறைத்தது. இருப்பினும் படத்திற்கு கலவையான விமர்சனங்களே வந்தன. இந்தநிலையில் படத்தின் இயக்குநர் அஜய்ஞானமுத்து தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரி பக்கத்தில் ரசிகர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தார்.
ஏன் படத்தில் நீளத்தில் (3.3.3) இவ்வளவு பிடிவாதமாக இருந்தீர்கள்? அதனால் முதல் நாளில் எவ்வளவு எதிர்மறையான விமர்சனங்கள் வந்தது பார்த்தீர்களா?
3 என்பது என்னுடைய லக்கி நம்பர் அல்ல. 3+3+3 =9, 3*3*3=27 ஆகியவையும் என்னுடைய லக்கி நம்பர் இல்லை. படத்தின் காட்சிகள் மற்றும் அதில் உள்ள டீடெயில்கள் உள்ளிட்டவை வீணாகிவிடக்கூடாது என்பதற்காகத்தான் அதன் நீளத்தை குறைக்க வேண்டாம் என்று நினைத்தோம்.
View this post on Instagram
அது சிலருக்கு பிடித்தும் இருந்தது. அதன் பின்னர் பார்வையாளரின் கோரிக்கைக்கு இணங்க நீளத்தை குறைத்தோம். அடுத்த படங்களில் இதை கவனமாக கையாள்கிறேன்.
திரைக்கதையில் இவ்வளவு குழப்பமேன்?
முதலில் அதற்காக மன்னிப்புக்கேட்டுக்கொள்கிறேன். ஆனால் எனக்கு பார்வையாளனை சிந்திக்க வைக்கும் படங்களே பிடிக்கும். அதைத்தான் இந்த முறை நேர்மையாக முயற்சி செய்தேன். வாய்ப்பிருந்தால் படத்தை இன்னொரு முறை பாருங்கள் உங்களுக்கு பிடிக்கும் என்று நம்புகிறேன்.
View this post on Instagram
மேலும் படம் நன்றாக இருக்கிறது ஆனால் கிளைமாக்ஸ் ஏமாற்றிவிட்டதே என்ற கேள்விக்கு, படத்தின் கிளைமாக்ஸில் ஹீரோ தப்பித்து வெளிநாட்டிற்கு செல்வது போன்று மாசானா இசையில் அந்தக்காட்சியை அமைத்திருக்கலாம். ஆனால் அந்தக்கதாபாத்திரம் பல குற்றங்களை செய்திருக்கிறது. அபபடி இருக்கும் போது அந்தக்கதாபாத்திரம் சுதந்திரமாக இருப்பது நியாமாக இருக்காது என்பதால்தான் கிளைமாக்ஸை அப்படி எடுத்தோம்.
இமைக்கா நொடிகள் படத்தை எடுத்த இயக்குநர் இப்படி ஒரு படத்தை எடுத்திருக்கிறாரா என்பதை நம்பமுடியவில்லை?
உங்களை ஏமாற்றியதற்காக மன்னிப்புக்கேட்டுக்கொள்கிறேன். அடுத்த முறை உங்களது எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வேன் என்று நம்புகிறேன். இருப்பினும் ஒரு முடிவுக்கு வருவதற்கு முன்னாடி, படத்தை இன்னொரு முறை பாருங்கள்.” என்று பேசினார்.