Cinema Headlines: ட்ரெண்டிங்கில் அஜித்: டி.எம்.கிருஷ்ணாவுக்கு கிளம்பிய எதிர்ப்பும் ஆதரவும் - சினிமா செய்திகள்!
Cinema Headlines: தமிழ் சினிமா வட்டாரத்தில் இன்று நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளைக் காணலாம்.
- Ajith Kumar: பிரியாணி சமைப்பது முதல் பில்லியர்ட்ஸ் விளையாடுவது வரை.. வைரலாகும் அஜித் வீடியோக்கள்!
மருத்துவமனையில் இருந்து வெளியேறிய அஜித் குமார் தற்போது மீண்டு தனது பைக்கில் பயணத்தை தொடங்கியிருக்கிறார். மேஜையின் மேல் கால்போட்டு ஓய்வெடுப்பது, இளம் பைக் ஓட்டுநர்களுக்கு பயிற்சி அளிப்பது , நண்பர்களுடன் நேரத்தை செலவிடுவது என ஒவ்வொரு நாளும் அவரது புகைப்படங்கள், வீடியோக்கள் வெளியானபடி இருக்கின்றன. மேலும் படிக்க
- James Vasanthan: "சமூக நீதி பேசியதால் தான் இந்த எதிர்ப்பு" - டி.எம் கிருஷ்ணாவுக்கு ஜேம்ஸ் வசந்தன் ஆதரவு!
கர்நாடக சங்கீத இசை உலகின் உயரிய விருதான 'சங்கீத கலாநிதி' இந்த ஆண்டு பாடகர் டி.எம். கிருஷ்ணா அவர்களுக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதற்கு எதிராக பல முன்னணி இசைக்கலைஞர்கள் தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகிறார். மேலும் சங்கீத அகாடமியில் இருந்து விலகிக் கொள்வதாகவும் அவர்கள் அறிவித்துள்ளனர். இது தொடர்பாக இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் டி.எம் கிருஷ்ணாவுக்கு ஆதரவாக தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் படிக்க
- Rangaraj Pandey: “ப்ரேக்கிங் நியூஸை விட்டுவிட்டு ராஜா சாருக்காக வந்தேன்” - ரங்கராஜ் பாண்டே நெகிழ்ச்சி!
இசையமைப்பாளர் இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாக இருக்கும் தகவல் நேற்று அறிவிக்கப்பட்டது. தனுஷ் இந்தப் படத்தில் இளையராஜாவாக நடிக்க, அருண் மாதேஸ்வரன் இந்தப் படத்தை இயக்குகிறார். இளையராஜாவே இந்தப் படத்திற்கு இசைமைக்கிறார். இந்நிலையில், பத்திரிகையாளராக இருந்து அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை படத்தின் மூலம் திரைக்கு வந்த ரங்கராஜ் பாண்டே இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இளையராஜா குறித்த சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்துகொண்டார். மேலும் படிக்க
- LYCA Music Series: ”நடுவுல கொஞ்சம் இசையைக் காணோம்”.. இளையராஜாவின் பாடல்களை ஆய்வு செய்யும் லைகா!
இதுவரை இளையராஜாவின் பாடல்கள் பற்றியும், பின்னணி இசை பற்றியும் நூற்றுக்கணக்கான வீடியோக்கள் இருந்தும், லைகா மியுசிக்கில் வரும் இந்த தொடரில் , பலர் கவனிக்க தவறிய இளையராஜாவின் இசை பக்கத்தை பற்றியும், அது ஒரு திரைப்படத்தில் செய்த மாற்றத்தை பற்றியும் ஜான் மகேந்திரன், ஒரு இளையராஜா ரசிகராக பகிர்கிறார். மேலும் படிக்க
- Ranjani - Gayathri Issue: பெரியாரை போற்றிய டி.எம்.கிருஷ்ணா.. சங்கீத அகாடமி மாநாட்டை புறக்கணிக்கும் ரஞ்சனி - காயத்ரி..
சென்னை மியூசிக் அகாடமி சார்பில் இசைக் கலைஞர்களுக்கு வழங்கப்படும் சங்கீத கலாநிதி விருதுக்கு இந்தாண்டு டி.எம்.கிருஷ்ணா தேர்வு செய்யப்பட்டுள்ளார். எனவே இந்தாண்டு நடைபெறும் 98-வது மியூசிக் அகாடமி ஆண்டு மாநாட்டை டி.எம் கிருஷ்ணா தலைமை தாங்குவார். டி.எம் கிருஷ்ணா தலைமையில் இந்தாண்டு மாநாடு நடைபெறுவதால் பிரபல கர்நாடக இசை கலைஞர்களான ரஞ்சனி – காயத்ரி இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளாமல் புறக்கணிக்கப்போவதாக அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளனர். மேலும் படிக்க