Cinema Headlines: அயலான் மூன்றாவது பாடல் ரிலீஸ்.. வடக்குப்பட்டி ராமசாமி ரிலீஸ் தேதி அறிவிப்பு.. சினிமா ரவுண்ட்-அப்!
Cinema Headlines: தமிழ் திரையுலகில் இன்று ஜனவரி 7ஆம் தேதி நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளை கீழே காணலாம்.
சூரோ சூரோ சூப்பர் ஹீரோ.. ஏலியனை கலக்கலாக வரவேற்கும் சிவகார்த்திகேயன் - ரகுல் ப்ரீத் சிங்!
அயலான் திரைப்படத்தின் மூன்றாவது பாடலான ‘சூரோ சூரோ' பாடல் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகியுள்ளது. பூமிக்கு வரும் ஏலியன் கதையை மையப்படுத்தி சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங், யோகி பாபு, கருணாகரன் ஆகியோர் நடித்துள்ள திரைப்படம் ‘அயலான்’. ‘இன்று நேற்று நாளை’ படத்தினை இயக்கிய ஆர்.ரவிக்குமார் இயக்கியுள்ள இப்படத்தை கேஜேஆர் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார். மேலும் படிக்க
ராமர் சர்ச்சையில் சிக்கிய அன்னபூரணி.. பரபரப்பு புகார்: பிரச்சினையில் நயன்தாரா?
நடிகை நயன்தாராவின் 75ஆவது திரைப்படமாக உருவான ‘அன்னபூரணி கடந்த ஆண்டு டிசம்பர் 1 ஆம் தேதி வெளியானது. அறிமுக இயக்குநர் நிலேஷ் கிருஷ்ணா இப்படத்தை இயக்கியுள்ளார். நடிகர்கள் ஜெய், சத்யராஜ், இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார், கார்த்திக் குமார், அச்யுத் குமார், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். தமன் இசையமைத்துள்ளார். மேலும் படிக்க
பொங்கல் வந்தாச்சு.. கேப்டன் மில்லர் முன்பதிவு தொடக்கம் - அயலான், மிஷன் 1 படங்களுக்கு எப்போது?
பொங்கல் பண்டிகைக்கு இன்னும் ஒரு வாரம் உள்ள நிலையில், புதிய படங்களுக்கான முன்பதிவு தொடங்கியுள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 2024 ஆம் ஆண்டில் பொங்கல் பண்டிகை வரும் ஜனவரி 15 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. பண்டிகை தினம் என்றாலே புத்தாடைகள், விதவிதமான உணவு வகைகள் எல்லாம் நினைவுக்கு வருவதைப் போல புதுப்படங்கள் ரிலீஸூம் தவிர்க்க முடியாத ஒன்று. அந்த வகையில் வரும் பொங்கல் பண்டிகை திங்கட்கிழமை வருகிறது. மேலும் படிக்க
2024-ல் சந்தானத்தின் முதல் படம்.. ரிலீஸ் தேதியை அறிவித்தது “வடக்குப்பட்டி ராமசாமி” படக்குழு
தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகராக இருந்தவர் சந்தானம். இவர் 2014 ஆம் ஆண்டு வெளியான வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தின் மூலம் ஹீரோவாக நடிக்க தொடங்கினார். தொடர்ந்து பல படங்களில் ஹீரோவாக நடித்து வரும் அவர், மீண்டும் காமெடி கேரக்டர்களில் நடிக்க வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இப்படியான நிலையில் கடந்தாண்டு சந்தானம் நடிப்பில் 3 படங்கள் வெளியானது. இதில் டிடி ரிட்டர்ன்ஸ் படம் மட்டும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. மற்றப் படங்களான கிக், 80ஸ் பில்டப் ஆகிய படங்கள் தோல்வியை தழுவியது. மேலும் படிக்க
விரைவில் சம்பவம் .. "கலைஞர் 100” விழாவில் வடிவேலுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்திய பார்த்திபன்..!
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவின் ஒரு பகுதியாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சார்பில் “கலைஞர் 100” விழா நேற்று கொண்டாடப்பட்டது. கிண்டி ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் நடந்த இந்நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ரஜினிகாந்த், கமல்ஹாசன்தனுஷ், சூர்யா, நயன்தாரா,கார்த்தி, ஜெயம் ரவி, அருண் விஜய், ஆர்.ஜே.பாலாஜி, இயக்குநர் வெற்றிமாறன், சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ், பார்த்திபன், வடிவேலு, ரோஜா, கன்னட நடிகர் சிவராஜ் குமார், முத்துக்காளை, சாக்ஷி அகர்வால், இயக்குநர் பா.ரஞ்சித் என முக்கிய திரைப்பிரபலங்கள் கலந்து கொண்டனர். மேலும் படிக்க