Cinema Headlines: தயாரிப்பாளர் ஆர்.எம்.வீரப்பன் மறைவு.. விஜய்யின் வைரல் வீடியோ.. சினிமா செய்திகள் இன்று!
Cinema Headlines: சினிமா வட்டாரத்தில் நிகழ்ந்த இன்றைய முக்கிய நிகழ்வுகளைப் பார்க்கலாம்.
தி கோட் ஷூட்டிங் நடுவே ஜாலியாக நடிகர் விஜய் செய்த செயல்.. வைரலாகும் வீடியோ!
நடிகர் விஜய் 2 நாள்களுக்கு முன்னதாக தி கோட் படப்பிடிப்புக்காக ரஷ்யா புறப்பட்டார். வெங்கட் பிரபு இயக்கும் தி கோட் ஷூட்டிங் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. நடிகர்கள் மோகன், பிரபுதேவா, பிரஷாந்த், நடிகைகள் சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி, நடிகர்கள் வைபவ், பிரேம் ஜி, உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது தி கோட் ஷூட்டிங் தளத்தில் இருந்து விஜய்யின் க்யூட் வீடியோ இன்று வெளியாகியுள்ளது.
"எம்.ஜி.ஆர் முதல் ரஜினிகாந்த் வரை" : தமிழ் சினிமாவில் ஆர்.எம்.வீரப்பன் தந்த ப்ளாக்பஸ்டர்கள்!
தமிழ் திரையுலகின் பிரபல தயாரிப்பாளரும் பன்முகத் திறமையாளரும் முன்னாள் அமைச்சருமானவர் ஆர்.எம்.வீரப்பன் இன்று வயது மூப்பு காரணமாக காலமானார். அதிமுக நிறுவனர் மற்றும் நடிகர், மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆருக்கு மிக மிக நெருக்கமானவராக இருந்த ஆர்.எம்.வீரப்பன் அவரது அரசியல் ஆலோசகராகவும், அவரது அமைச்சரவையில் அமைச்சராகவும் பதவி வகித்தவர். எம்.ஜி.ஆர் பிச்சர்ஸின் நாடோடி மன்னன் திரைப்படத்தின் முக்கியப் பங்காற்றியுள்ளார்.
பா.ரஞ்சித் எதிர்கால தலைமுறையினருக்கான வழித்தடம்... பாலாஜி சக்திவேல் புகழாரம்!
இயக்குநர் பா.இரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் சார்பாக 'பிகே ரோஸி திரைப்பட விழா' ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. அதன்படி இந்த ஆண்டு 4ம் ஆண்டு பிகே ரோஸி திரைப்பட விழா தற்போது நடைபெற்று வருகிறது.. இந்த விழாவில் இயக்குநர் மற்றும் நடிகர் பாலாஜி சக்திவேல் சிறப்பு விருந்தாளியாகக் கலந்துகொண்டார். அப்போது பா. ரஞ்சித் இந்த திரைத்துறையில் நுழைவதற்கு முன்னர் இருந்த சினிமாவுக்கும், அவர் வந்ததற்கு பிறகு இருக்கும் சினிமாவுக்கும் ஏராளமான வித்தியாசங்கள் உள்ளதாகத் தெரிவித்தார்.
மாரி செல்வராஜின் வாழ்வியல் தாக்கங்கள்.. தனுஷின் கர்ணன் படம் வெளியான நாள் இன்று!
மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ், லால், ரஜிஷா விஜயன் உள்ளிட்டோர் நடிப்பில் 2021ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'கர்ணன்'. மாரி செல்வராஜின் இரண்டாவது படமாக பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இப்படத்தின் கதைக்களம் மாரி செல்வராஜின் தனித்துவமான பாணியில் அமைந்து பாராட்டுகளைக் குவித்தது. தென் மாவட்ட வட்டார பேச்சு வழக்கில் அமைந்த இப்படம் உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு அமைந்ததாக சர்ச்சையையும் கிளப்பியது.
ஆட்டத்தை ஆரம்பித்த வெள்ளி விழா நாயகன்.. ரஜினிக்கு வில்லனாகும் மைக் மோகன்..!
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் 171ஆவது படத்தில் வில்லனாக தமிழ் சினிமாவின் பிரபல நடிகர் மோகன் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. லியோ படத்துக்கு அடுத்து ரஜினிகாந்தை பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இயக்குகி லோகேஷ் கனகராஜ். இப்படத்தின் ஷூட்டிங் இந்த மாதம் தொடங்க உள்ள நிலையில், படக்குழு பற்றிய அப்டேட் வரிசையாக வெளியாகி வருகிறது.