மேலும் அறிய

Cinema Headlines: கல்கி 2898AD பட விமர்சனம்.. தொடங்கிய இந்தியன் 2 ப்ரொமோஷன்.. சினிமா செய்திகள் இன்று!

Cinema Headlines Today June 27th: சினிமா வட்டாரத்தில் இன்று நிகழ்வுகளை இந்தத் தொகுப்பில் பார்க்கலாம்.

600 கோடிக்கு படம் வொர்த்தா? இல்லையா? - பிரபாஸ் , கமல் நடித்துள்ள கல்கி படத்தின் திரை விமர்சனம்

600 கோடி செலவில் பிரமாண்டமாக உருவாகியுள்ள கல்கி திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி பாசிட்டிவ் விமர்சனங்களை அள்ளி வருகிறது. சந்தோஷ் நாராயணின் இசை இப்படத்துக்கு பக்கபலமாக அமைந்துள்ள நிலையில் மகாபாரதப் போர் முடிந்து 6 ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு தொடங்குகிறது கல்கி படத்தின் கதை.  உலகின் முதலும் கடைசியுமான நகரமாக மிஞ்சியிருக்கும் காசியில் மக்கள் அனைவரும்  சுப்ரீம் யாஸ்கினின் (கமல்ஹாசன்) கொடுங்கோள் ஆட்சிக்கு அடிபணிந்து வாழ்கிறார்கள். சுப்ரீம் யாஸ்கினின் அரசை அழித்து மீண்டும் உலகத்தில் அமைதியை நிலைநாட்ட மக்களிடம் இருக்கும் ஒரே நம்பிக்கை கல்கியாக பிறக்க இருக்கும் குழந்தைதான். குழந்தையைக் காப்பாற்றி தனது சாபத்தை விடுவிக்க பல ஆண்டுகளாக காத்திருக்கிறார். இதே நகரில் செல்வம் படைத்த காம்பிளக்ஸ்’ என்கிற தங்களுக்கென தனி உலகில் வாழ அங்கு எப்படியாவது சென்று சேர வேண்டும் என்ற எண்ணத்தில் நாயகன் பிரபாஸ். இவர்களின் கனவு நிறைவேறியதா, பிறக்கப்போகும் குழந்தையின் நிலை, ப்ராஜக்ட் கே என்பது என்ன என்பதே படத்தின் கதை. கல்கி படத்தின் மிகப்பெரிய பலம் என்றால் படத்தின் ஸ்பெஷல் எஃபக்ட்ஸ் காட்சிகள் தான். அமிதாப் பச்சன் நடித்துள்ள பாத்திரம் சிறப்பு. கமலின் கண்களை மட்டும் காட்டினாலேயே ஒட்டுமொத்த திரையரங்கும் அதிர்கிறது.

ஜெட் வேகத்தில் இந்தியன் 2 ப்ரொமோஷன்.. இந்தியன் பட  3 பின்னணி பற்றி  ஷங்கர் பகிர்ந்த தகவல்!

இந்தியன் 2 படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தொடங்கிய நிலையில் நடிகர் கமல் ஹாசன் மற்றும் நடிகர் சித்தார்த் இருவரும் தங்கள் இணைய பக்கங்களில் இதுகுறித்துப் பகிர்ந்து ட்ரெண்டிங்கில் இடம்பெற்றுள்ளனர். இதனிடையே இந்தியன் 3ஆம் பாகம் பற்றி பேசியுள்ள ஷங்கர், “இந்தியன் படத்தின் 3 ஆம் பாகம் உருவாகும் என நானே எதிர்பார்க்கவில்லை. 2ஆம் பாகத்தின் கதை இந்தியா முழுக்க பயணிக்கும்படி இருக்கும். சரியான நீளத்தை கொடுத்த நிலையில், அதனை இரண்டு பாகங்களுக்கு பிரித்து சரியாக வருமா என்றும் சோதனை செய்தோம்” எனக் கூறியுள்ளார்.

ஆர்த்திக்கு கண்டிஷன் போட்ட ஜெயம் ரவி? வைரலாகும் விவாகரத்து விவகாரம்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் ஜெயம் ரவி அவரது காதல் மனைவி ஆர்த்தி இருவரும் விவாகரத்து செய்யப்போவதாக பகீர் தகவல்கள் வெளியாகி கோலிவுட் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து இதுவரை இருவரும் எந்த ஒரு விளக்கமும் அளிக்காத நிலையில், ஆர்த்தி தன்னுடைய இன்ஸ்டாகிராமில் ஜெயம் ரவியுடன் இருந்த புகைப்படங்களை நீக்கியது சர்ச்சைகளுக்கு மேலும் வழிவகுத்தது. இந்நிலையில் சினிமா குடும்பத்தை பின்னணியாகக் கொண்ட ஆர்த்தி தானும் சினிமா துறையில் என்ட்ரி கொடுப்பதன் மூலமோ அல்லது தனக்கென ஒரு தனி தொழிலை தொடங்கவோ விருப்பம் தெரிவித்ததும், அதற்கு ஜெயம் ரவி முட்டுக்கட்டை போட்டதும் அதன் தொடர்ச்சியாக சண்டைகள் தொடர்ந்ததும் தான் இந்தப் பிரச்னைகளுக்கு காரணம் எனத் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

7ஆம் வகுப்பு பாடத்தில் தமன்னா பற்றிய குறிப்பு... கொந்தளிக்கும் பெற்றோர்!

இந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை தமன்னா பற்றி 7ஆம் வகுப்பு பாடத்திட்டத்தில் இடம்பெற்றுள்ளது கடும் விமர்சங்களை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரில் உள்ள ஹெப்பால் பகுதியில் பிரபலமான தனியார் பள்ளி ஒன்று உள்ளது. அந்தப் பள்ளியின் 7ஆம் வகுப்பு பாடத்திட்டத்தில் 'சிந்த் பிரிவினைக்கு பிறகு இந்திய மக்களின் வாழ்க்கை'  என்ற தலைப்பில் உள்ள ஒரு பாடத்தில் நடிகை தமன்னா குறித்த தகவல் சில இடம்பெற்றுள்ளன. இதைப் பார்த்த மாணவர்களின் பெற்றோர் பாடத்திட்டத்தில் தமன்னா பற்றி எங்கள் பிள்ளைகள் ஏன் படிக்க வேண்டும் என கடும் எதிர்வினையாற்றி உள்ளதுடன் தனியார் பள்ளிகள் சங்கம் மற்றும் குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்திடம் புகார் அளித்துள்ளனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Bus: இனி ஹாப்பி! அரசு பேருந்துகளில் இனி 3 மாசத்துக்கு முன்பே புக்கிங் - அரசு அதிரடி
TN Bus: இனி ஹாப்பி! அரசு பேருந்துகளில் இனி 3 மாசத்துக்கு முன்பே புக்கிங் - அரசு அதிரடி
Udhayanithi:
Udhayanithi: "ஆமா.. நாங்க விஷக்காளான்தான்" EPS சொன்னதை ஒப்புக்கொண்ட உதயநிதி - ஏன்?
TN Rain: தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை வானிலை மையம் அறிக்கை
TN Rain: தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை வானிலை மையம் அறிக்கை
Tamilnadu Roundup: மத்திய அரசு மீது முதலமைச்சர் குற்றச்சாட்டு! தஞ்சையில் விடுமுறை - தமிழகத்தில் இதுவரை
Tamilnadu Roundup: மத்திய அரசு மீது முதலமைச்சர் குற்றச்சாட்டு! தஞ்சையில் விடுமுறை - தமிழகத்தில் இதுவரை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kasthuri Arrest : நடிகை கஸ்தூரி கைது போலீஸ் போட்ட ரகசிய ஸ்கெட்ச் ஹைதராபாத்தில் அதிரடி!Nayanthara Vs Dhanush : PUBLICITY தேடும் நயன்தாரா!கல்யாண வீடியோவுக்கு PROMOTION!ஊறுகாவா தனுஷ்?Kasthuri Arrest : ஹைதராபாத் to சென்னை..!காவல்நிலையத்தில் கஸ்தூரி சிரித்த முகத்துடன் ஆஜர்Rahul Eating Poha : ’’ஆஹா…என்ன ருசி’’ ரோட்டுக்கடை போஹா!ருசித்து சாப்பிட்ட ராகுல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Bus: இனி ஹாப்பி! அரசு பேருந்துகளில் இனி 3 மாசத்துக்கு முன்பே புக்கிங் - அரசு அதிரடி
TN Bus: இனி ஹாப்பி! அரசு பேருந்துகளில் இனி 3 மாசத்துக்கு முன்பே புக்கிங் - அரசு அதிரடி
Udhayanithi:
Udhayanithi: "ஆமா.. நாங்க விஷக்காளான்தான்" EPS சொன்னதை ஒப்புக்கொண்ட உதயநிதி - ஏன்?
TN Rain: தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை வானிலை மையம் அறிக்கை
TN Rain: தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை வானிலை மையம் அறிக்கை
Tamilnadu Roundup: மத்திய அரசு மீது முதலமைச்சர் குற்றச்சாட்டு! தஞ்சையில் விடுமுறை - தமிழகத்தில் இதுவரை
Tamilnadu Roundup: மத்திய அரசு மீது முதலமைச்சர் குற்றச்சாட்டு! தஞ்சையில் விடுமுறை - தமிழகத்தில் இதுவரை
Nayanthara:
Nayanthara: "மிருகங்கள் மீதான போர்" போஸ்டரிலே தனுஷை தாக்குகிறாரா நயன்தாரா?
Kanguva Box Office: அவ்வளவுதான் 1000 கோடி! இருங்க பாய் மோடில் கங்குவா வசூல் - இவ்வளவா?
Kanguva Box Office: அவ்வளவுதான் 1000 கோடி! இருங்க பாய் மோடில் கங்குவா வசூல் - இவ்வளவா?
Breaking News LIVE 18th NOV 2024: மாநிலங்களுக்கு வரிப்பகிர்வு 50 சதவீதமாக இருக்க வேண்டும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
Breaking News LIVE 18th NOV 2024: மாநிலங்களுக்கு வரிப்பகிர்வு 50 சதவீதமாக இருக்க வேண்டும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
"கூட்டத்தை கூட்டுங்க" தேர்தல் பிரச்சாரம் கேன்சல்.. டெல்லி விரைந்த அமித் ஷா!
Embed widget