Cinema Headlines: ஆட்டத்தை தொடங்கிய பிரபுதேவா- ஏ.ஆர்.ரஹ்மான்; மகாராஜா படத்தின் சக்ஸஸ் மீட் - சினிமா செய்திகள்!
Cinema Headlines: தமிழ் சினிமா வட்டாரத்தில் இன்று நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளைப் பார்க்கலாம்.
-
25 ஆண்டுகளுக்குப் பின் இணையும் பிரபுதேவா - ஏ.ஆர்.ரஹ்மான் ; வெளியானது டைட்டில்
பிரபுதேவா மற்றும் இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் கூட்டணியில் உருவாகும் படத்தின் டைட்டிலை வெளியிட்டுள்ளது படக்குழு. பிஹைன்வுட்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்துக்கு “மூன் வாக்” என பெயரிடப்பட்டுள்ளது. மனோஜ் என்.எஸ்.இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் பிரபுதேவா, யோகி பாபு, அஜு வர்கிஸ், அர்ஜுன் அசோகன் ஆகியோர் இணைந்து நடிக்கிறார்கள். கடந்த மார்ச் மாதம் இப்படத்தின் அறிவிப்பு வெளியானது குறிப்பிடத்தக்கது
-
சக்சஸ் மீட் நடத்திய மகாராஜா படக்குழு - நெகிழ்ச்சியாக பேசிய விஜய் சேதுபதி
நித்திலன் சாமிநாதன் இயக்கி கடந்த ஜூன் 14ல் வெளியான மகாராஜா படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. விஜய் சேதுபதி, அனுராக் காஷ்யப்,மம்தா மோகன் தாஸ், அபிராமி உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். இந்த படத்தின் சக்சஸ் மீட் இன்று நடைபெற்றது. இதில் பேசிய விஜய் சேதுபதி, “ மகாராஜா படத்தின் கதையை கேட்கும்போது மிகப்பெரிய பிரமிப்பும், நம்பிக்கையும் இருந்தது. இது எப்படி சாத்தியமாக போகிறது என்ற கேள்வியும் இருந்தது. வெற்றிப்படமாக மாற்றிய மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என தெரிவித்தார்.
-
தமிழ் சினிமாவில் வட நாட்டு நடிகைகள் எதுக்கு? - ஏவிஎம் குமரன் பேச்சு
வட நாட்டு நடிகைகளை தமிழ் சினிமாவில் இறக்குமதி செய்வது தேவையில்லாத ஒன்று என ஏவிஎம் குமரன் நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார். மேலும் பிரமாண்டம் என்ற பெயரில் வீணாக பணத்தை விரயம் செய்கிறார்கள். வட இந்திய நடிகைகளுக்கு என்ன காட்சி அதற்கு என்ன உணர்ச்சி கொடுக்க வேண்டும் என்பது கூட தெரிவதில்லை.டப்பிங் ஆர்டிஸ்ட்கள் தான் அந்த கேரக்டருக்கு உயிரோட்டம் கொடுக்கிறார்கள் எனவும் குற்றம் சாட்டியுள்ளார்.
-
மிரள வைக்கும் சைக்கோ த்ரில்லர்... வரவேற்பை பெற்ற விதார்த்தின்'லாந்தர்' ட்ரைலர்!
தமிழ் சினிமாவின் யதார்த்த நாயகன் விதார்த் நடிப்பில் அறிமுக இயக்குநர் சாஜிசலீம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'லாந்தர்'. சஸ்பென்ஸ் கிரைம் த்ரில்லர் ஜானரில் உருவாகியுள்ள இப்படத்தை எம் சினிமா புரொடக்ஷன் நிறுவனத்தின் சார்பில் பத்ரி மற்றும் ஸ்ரீவிஷ்ணு இணைந்து தயாரித்துள்ளனர். இந்த படம் ஜூன் 21 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் ட்ரெய்லர் நேற்று வெளியாகி ரசிகர்களை மிகப்பெரிய அளவில் கவர்ந்துள்ளது.