மேலும் அறிய

Cinema Headlines July 13: ஜெட் வேகத்தில் எகிறும் இந்தியன் 2 வசூல் முதல் மூக்குத்தி அம்மன் 2 வரை... சினிமா செய்திகள் இன்று!

Cinema headlines July 13: சினிமா வட்டாரத்தின் இன்று நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு!

ஜெட் வேகத்தில் எகிறும் இந்தியன் 2 வசூல் :

ஷங்கர் - கமல்ஹாசன் கூட்டணியில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் நேற்று உலகெங்கிலும் உள்ள திரையரங்குகளில் வெளியான திரைப்படம் 'இந்தியன் 2'. அனிருத் இசையில் சித்தார்த், எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா, பிரியா பவானி சங்கர், ரகுல் ப்ரீத், காஜல் அகர்வால், நெடுமுடி வேணு, விவேக் உள்ளிட்ட பலரின் நடிப்பில் வெளியான இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதுடன் முதல் நாளே உலக அளவில் சுமார் 54. 6 கோடிகளை வசூலித்துள்ளதாக சாக்னிக் தளம் தகவல் பகிர்ந்துள்ளது. இந்நிலையில் இன்றும் நாளையும் விடுமுறை நாட்களை ஒட்டி வசூல் தொகை எகிறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கல்கி 2898AD வசூலில் சாதனை :

நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ், கமல்ஹாசன், அமிதாப் பச்சன், தீபிகா படுகோன் உள்ளிட்ட பலரின் நடிப்பில் ஜூன் 27ஆம் வெளியான திரைப்படம் 'கல்கி 2898AD'. சுமார் 600 கோடிகள் செலவில் உருவான இப்படம், கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும், வெளியானது முதலே வசூலில் மாஸ் செய்து காட்டியது. அந்த வகையில் தற்போது படம் வெளியாகி 17 நாட்களில் கல்கி 2898 AD திரைப்படம் ரூ.1000 கோடிகள் வசூலைக் கடந்து இமாலய சாதனை படைத்துள்ளது. 2017ம் ஆண்டு வெளியான பாகுபலி பாகம் 2 திரைப்படம் உலக அளவில் ரூ,1800 கோடிகளைக் கடந்து சாதனை படைத்தது. அந்த வரிசையில் தற்போது பிரபாஸின் இரண்டாவது படமாக கல்கி 1000 கோடிகள் வசூல் என்ற மைல்கல்லை எட்டியுள்ளது.

இயக்குநர் ரவிஷங்கர் தற்கொலை :

பாக்யராஜ், விக்ரமன் உள்ளிட்ட தமிழ் சினிமாவின் பிரபலமான இயக்குநர்களிடம் உதவி இயக்குநராக இருந்து 2002ஆம் ஆண்டு மனோஜ் நடிப்பில் வெளியான 'வருஷமெல்லாம் வசந்தம்' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார் ரவிஷங்கர். அப்படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களுக்கும் அவரே பாடல் வரிகளை எழுதி இருந்தார். அதிலும் குறிப்பாக 'எங்கே அந்த வெண்ணிலா...' பாடல் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது. சூர்யவம்சம் படத்தில் இடம்பெற்ற 'ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ..' பாடல் வரிகளை எழுதியதும் அவரே. 

சென்னை கே.கே. நகரில் தனிமையில் வசித்து வந்த இயக்குநர் ரவிஷங்கர் நேற்று இவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. 

அந்தகன் டிரைலர்:

இந்தியில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற 'அந்தாதுன்' படத்தின் தமிழ் ரீமேக் படமான 'அந்தகன்' படத்தில் நடிகர் பிரஷாந்த் ஹீரோவாக நடிக்க சிம்ரன், கார்த்திக், பிரியா ஆனந்த், சமுத்திரக்கனி, யோகி பாபு உள்ளிட்ட ஏராளமானோர் நடித்துள்ளனர். தியாகராஜன் இயக்கி அவரே தயாரித்துள்ளார். பல ஆண்டுகளாக கிடப்பில் இருந்த இப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது. வரும் ஆகஸ்ட் மாதம் இப்படம் வெளியாக உள்ளது. 

மூக்குத்தி அம்மன் 2 :

ஆர்ஜே வகை இருந்து காமெடியான சினிமாவில் என்ட்ரி கொடுத்து இன்று நடிகர், இயக்குநர் என பல பரிணாமங்களை எடுத்துள்ளார் நடிகர் ஆர்ஜே பாலாஜி. அவர் இணை இயக்குநராக இருந்து நடித்த 'மூக்குத்தி அம்மன்' திரைப்படம் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. நயன்தாரா மூக்குத்தி அம்மனாக நடித்திருந்தார். தற்போது அதன் இரண்டாம் பாகம் வெளியாக உள்ளது என்ற அதிகாரபூர்வமான தகவல் வெளியாகியுள்ளது. வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் கீழ் ஐசரி கணேஷ் தயாரிக்க நயன்தாரா மூக்குத்தி அம்மனாக நடிக்க உள்ளார். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Tirupati Laddu: திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு  - ஆய்வில் உறுதி..! பக்தர்கள் அதிர்ச்சி.!
Tirupati Laddu: திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு - ஆய்வில் உறுதி..! பக்தர்கள் அதிர்ச்சி.!
"65 நாடுகளுக்கு ஏற்றுமதி.. சர்வதேச சந்தையில் தனித்துவம்" ஆச்சி குழும தலைவர் பத்மசிங் ஐசக் பேச்சு!
சென்னையில் நான் தான் கிங்கு.. வங்கதேச பவுலர்களை கதறடித்த அஸ்வின்.. மிரட்டல் சதம்!
சென்னையில் நான் தான் கிங்கு.. வங்கதேச பவுலர்களை கதறடித்த அஸ்வின்.. மிரட்டல் சதம்!
7.5 % இட ஒதுக்கீட்டை அரசு உதவிபெறும் பள்ளிக்கும் ஏன் வழங்க கூடாது.? அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு.!
7.5 % இட ஒதுக்கீட்டை அரசு உதவிபெறும் பள்ளிக்கும் ஏன் வழங்க கூடாது.? அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு.!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Trichy News | திமுக கொடியுடன் ஆடு திருடும் கும்பல்..தீவிரமாக தேடும் போலீஸ்VCK vs PMK  | Graph-ஐ உயர்த்திய திருமா! விசிக ரூட்டில் பாமக?அன்புமணி மாஸ்டர் பிளான்Shakthi Vasudevan | GP Muthu Fight | ரகளை செய்த GP முத்து..BEEP-ல் பூசாரியுடன் சண்டை..என்ன காரணம் தெரியுமா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tirupati Laddu: திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு  - ஆய்வில் உறுதி..! பக்தர்கள் அதிர்ச்சி.!
Tirupati Laddu: திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு - ஆய்வில் உறுதி..! பக்தர்கள் அதிர்ச்சி.!
"65 நாடுகளுக்கு ஏற்றுமதி.. சர்வதேச சந்தையில் தனித்துவம்" ஆச்சி குழும தலைவர் பத்மசிங் ஐசக் பேச்சு!
சென்னையில் நான் தான் கிங்கு.. வங்கதேச பவுலர்களை கதறடித்த அஸ்வின்.. மிரட்டல் சதம்!
சென்னையில் நான் தான் கிங்கு.. வங்கதேச பவுலர்களை கதறடித்த அஸ்வின்.. மிரட்டல் சதம்!
7.5 % இட ஒதுக்கீட்டை அரசு உதவிபெறும் பள்ளிக்கும் ஏன் வழங்க கூடாது.? அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு.!
7.5 % இட ஒதுக்கீட்டை அரசு உதவிபெறும் பள்ளிக்கும் ஏன் வழங்க கூடாது.? அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு.!
பாஸ்போர்ட் விண்ணப்பிக்க போறீங்களா..? - இத கட்டாயம் தெரிஞ்சிகோங்க
பாஸ்போர்ட் விண்ணப்பிக்க போறீங்களா..? - இத கட்டாயம் தெரிஞ்சிகோங்க
Group 4 Vacancy: குரூப் 4 தேர்வர்களுக்கு ஸ்வீட் நியூஸ்… காலியிடங்களை அதிகரிக்க டிஎன்பிஎஸ்சி முடிவு- அறிவிப்பு எப்போது?
Group 4 Vacancy: குரூப் 4 தேர்வர்களுக்கு ஸ்வீட் நியூஸ்… காலியிடங்களை அதிகரிக்க டிஎன்பிஎஸ்சி முடிவு- அறிவிப்பு எப்போது?
புதிய உருமாறிய கொரோனா.. மீண்டும் மிரட்ட வருகிறது.. மருத்துவர்கள் கூறுவது என்ன?
புதிய உருமாறிய கொரோனா.. மீண்டும் மிரட்ட வருகிறது.. மருத்துவர்கள் கூறுவது என்ன?
கன்னியாகுமரியில் அணுக் கனிம சுரங்கம்.! மத்திய அரசு திட்டம்.!
கன்னியாகுமரியில் அணுக் கனிம சுரங்கம்.! மத்திய அரசு திட்டம்.!
Embed widget