Vijay Birthday : திரை, அரசியல் பிரபலங்கள் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து... யாரெல்லாம் வாழ்த்து சொல்லி இருக்காங்க தெரியுமா?
நடிகர் விஜய்யின் பிறந்தநாளையொட்டி ஏராளமான திரை மற்றும் அரசியல் பிரபலங்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். அவற்றை பார்க்கலாம்.
நடிகர் விஜய் நேற்று தனது 49வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இந்நிலையில் புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி ”பிரபல நடிகர் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்துகள்” என டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
My hearty congratulations to popular actor of Tamil cinema Shri Vijay I wish all the best in in film career
— V.Narayanasamy (@VNarayanasami) June 22, 2023
மலையாள திரையுலகின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான மோகன்லால், "ஹேப்பி பர்த்டே டியர் விஜய்" என ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.
Happy Birthday Dear Vijay@actorvijay pic.twitter.com/flVcxOzFJE
— Mohanlal (@Mohanlal) June 22, 2023
பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், "சகோதரர் விஜய்க்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். லியோ படத்தின் வெளியீட்டிற்கு ஆவலுடன் காத்திருக்கிறேன். இந்தாண்டு வெற்றியும் மகிழ்ச்சியும் நிறைந்ததாக அமைய வாழ்த்துக்கள்" என ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.
Wishing a very happy birthday to brother @actorvijay! Looking forward to Leo's release, wishing you a year filled with success and happiness! pic.twitter.com/ENb1AoJL0P
— Sanjay Dutt (@duttsanjay) June 22, 2023
காதல் கண் கட்டுதே, ஏமாளி, கீ, சுட்டு பிடிக்க உத்தரவு, முருங்ககாய் சிப்ஸ் உள்ளிட்ட பல படங்களில் நடித்த அதுல்யா ரவி, விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.
Happy birthday to our one and only dearest #thalapthy 🎂 marana waiting to see #ThalapathyVijay sir’s charismatic presence in theatres soon in #leo 🔥 wishing you a great year ahead @actorvijay sir ! #ThalapathyVijayBirthday #HBDThаlаpаthyVIJAY #LeoFirstLook pic.twitter.com/o4mKn6mHnz
— Athulyaa Ravi (@AthulyaOfficial) June 22, 2023
இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா, ”பிறந்தநாள் வாழ்த்துகள் தளபதி விஜய் நீங்கள் எதை செய்தாலும் அதில் நீங்கள் சிறப்பாக இருக்க வாழ்த்துகிறேன். கடவுள் உங்களுடன் இருக்கட்டும்” என்று டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
Happy birthday Thalapathy @actorvijay 😊 Wishing you only the best in whatever you do. May God be with you ❤️
— Raja yuvan (@thisisysr) June 22, 2023
விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கும் லியோ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் கதாநாயகியாக திரிஷா நடிக்க பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், அர்ஜுன், மன்சூர் அலி கான், என ஒரு பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடிக்கின்றனர். இப்படம் வருகிற அக்டோபர் 19 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வைரலாகி வருகிறது.