![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Christmas Celebration: மேரி கிறிஸ்துமஸ்.. கொண்டாட்ட புகைப்படங்களை பகிர்ந்த பிரபலங்கள்!
கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் உலகம் முழுவதும் களைகட்டியுள்ளது. கரோனா தொற்றுக்கும் இடையே பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றி கிறிஸ்துமஸ் கொண்டாடப்பட்டு வருகிறது.
![Christmas Celebration: மேரி கிறிஸ்துமஸ்.. கொண்டாட்ட புகைப்படங்களை பகிர்ந்த பிரபலங்கள்! Christmas Celebration: Celebrities share pictures Christmas Celebration: மேரி கிறிஸ்துமஸ்.. கொண்டாட்ட புகைப்படங்களை பகிர்ந்த பிரபலங்கள்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/12/25/ae41869b12fbd2a8b6e797ee6455fe5c_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் உலகம் முழுவதும் களைகட்டியுள்ளது. கொரோனா தொற்றுக்கும் இடையே பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றி கிறிஸ்துமஸ் கொண்டாடப்பட்டு வருகிறது.
தமிழ்த் திரைப்பிரபலங்கள் சிலர் வெளிநாடுகளிலும், சிலர் உள்ளூரிலும் கிறிஸ்துமஸைக் கொண்டாடி கண்கவர் புகைப்படங்களை தங்களின் சமூக வலைதளப் பக்கங்களில் பகிர்ந்துள்ளனர்.
மாநாடு படத்தின் ஹீரோயினும், இயக்குநர் பிரியதர்ஷனின் மகளுமான கல்யாணி பிரியதர்ஷன் நியூயார்க் நகரில் கிறிஸ்துமஸைக் கொண்டாடி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
நடிகை கீர்த்தி சுரேஷ் லண்டனில் கிறிஸ்துமஸ் கொண்டாடிப் புகைப்படம் பதிவிட்டுள்ளார்.
இதேபோல், தனுஷ் மனைவி ஐஸ்வர்யா, அவருடைய சகோதரி சவுந்தர்யா தனுஷ் ஆகியோரும் கிறிஸ்துமஸ் புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர்.
View this post on Instagram
;
நடிகை மஞ்சிமா மோகன், அதாங்க நம்ம ராசாளியே... ராசாளியே புகழ் அழகி சென்னையில் கிறிஸ்துமஸ் கொண்டாடி புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அந்தப் புகைப்படத்தில் கிறிஸ்துமஸ் காலம் மகிழ்ச்சியாக இருக்க வேண்டிய காலம் என்று பதிவிட்டுள்ளார்.
View this post on Instagram
பிக்பாஸ் புகழ் லாஸ்லியாவும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டப் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். கிறிஸ்துமஸ் தாத்தா போல் சிவப்பு நிற உடையில் புன்னகை பூத்து அழகாக மிளிர்கிறார்.
View this post on Instagram
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)