மேலும் அறிய

Vikram Health Update: விக்ரமுக்கு நடந்தது இதுதான்... அதிகாரப்பூர்வமாக அறிவித்த காவேரி மருத்துவமனை

விக்ரமுக்கு மாரடைப்பு ஏற்படவில்லை என்றும், இதயத்தில் அசௌகரியமான உணர்வு ஏற்பட்டதாகவும், விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நடிகர் விக்ரமுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதாக கூறப்பட்ட நிலையில் அதுதொடர்பாக அவர் அனுமதிக்கப்பட்டுள்ள காவேரி மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. 

1966-ல் பரமக்குடியில் பிறந்த நடிகர் விக்ரம் 1990 என் காதல் கண்மணி என்ற திரைப்படத்தின் மூலமாக தமிழ்த் திரையுலகில் நுழைந்தார்.அதனைத்தொடர்ந்து நீண்ட காலமாக சினிமாவில் போராடி வந்த விக்ரமிற்கு பாலா இயக்கிய  'சேது' திரைப்படம் திருப்பு முனையாக அமைந்தது. அதனைத் தொடர்ந்து காசி, ஜெமினி, சாமி, தில், தூள், பிதாமகன், அருள், அந்நியன், தெய்வத் திருமகள், ராவணன், ஐ ஆகிய படங்கள் அவரது ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.

நடிகர் மட்டுமல்லாது பாடகர், டப்பிங் கலைஞர் என பன்முகம் கொண்ட விக்ரம் திரைக்கதைக்காக எப்படிப்பட்ட ரிஸ்க் வேண்டுமானாலும் எடுக்கக்கூடியவர். கடைசியாக மகன் துருவ் உடன் அவர் நடித்த மகான் படம் கடந்த பிப்ரவரி மாதம் வெளியாகியிருந்தது. இதனைத் தொடர்ந்து மணிரத்னம் இயக்கியுள்ள பொன்னியின் செல்வன் படத்திலும், அஜய் ஞானமுத்து இயக்கியுள்ள கோப்ரா படத்திலும் அவர் நடித்து முடித்துள்ளார்.

பொன்னியின் செல்வன் படத்தின் டீசர் வெளியிட்டு விழா இன்று மாலை நடக்கவிருந்த நிலையில்

சில தினங்களுக்கு முன்பு அப்படத்தில் விக்ரமின் நடித்துள்ள ஆதித்ய கரிகாலன் கேரக்டர் போஸ்டரும் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. இந்நிலையில் விக்ரம் மாரடைப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல் வெளியானது. இதுகுறித்து பல வதந்திகள் பரவிய நிலையில் அதனை விக்ரம் தரப்பில் மறுத்தனர். 

இதன் பின்னர் விக்ரமுக்கு ஏற்பட்ட காய்ச்சல் காரணமாகவே அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் உண்மை நிலவரம் என்னவென்று தெரியாமல் ரசிகர்கள் குழம்பினர். இதனையடுத்து விக்ரமின் மேலாளர் சூர்யநாராயணன் தனது ட்விட்டர் பக்கத்தில், விக்ரமுக்கு இதயத்தில் அசௌகரியமான உணர்வு ஏற்பட்டதாகவும், தவறான தகவலாக கூறப்படும் மாரடைப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படவில்லை. 

அவர் ஓரிரு நாளில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என தெரிவிக்கப்பட்டதை விக்ரமின் மகனும் நடிகருமான துருவ் விக்ரம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உறுதிப்படுத்தினார். இந்நிலையில் விக்ரம் அனுமதிக்கப்பட்டுள்ள காவேரி மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் விக்ரமுக்கு மாரடைப்பு ஏற்படவில்லை என்றும், இதயத்தில் அசௌகரியமான உணர்வு ஏற்பட்டதாகவும், விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண 

தலைப்பு செய்திகள்

"என்னைப் பத்தி கிசுகிசு வந்துடும்னு பயம்.." மனம் திறந்த ஜமீன்கோட்டை ஹீரோயின்! ஞாபகம் இருக்கா?
Jananayagan: படுதோல்வியுடன் விடை பெற்ற முதல்வர் விஜய்.. மண்ணைக் கவ்விய ஜனநாயகன்!
Jananayagan: படுதோல்வியுடன் விடை பெற்ற முதல்வர் விஜய்.. மண்ணைக் கவ்விய ஜனநாயகன்!
பணத்துக்காக எல்லாமே செய்ய மாட்டேன்.. என் அம்மா அப்படி வளர்க்கல.. முருகன் சாட்சி.. தர்ஷா குப்தா வேதனை!
பணத்துக்காக எல்லாமே செய்ய மாட்டேன்.. என் அம்மா அப்படி வளர்க்கல.. முருகன் சாட்சி.. தர்ஷா குப்தா வேதனை!
DC movie Collection: ஹீரோவாகவும் மாஸ் காட்டிய லோகேஷ் கனகராஜ்! ! 'DC' படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
ஹீரோவாகவும் மாஸ் காட்டிய லோகேஷ் கனகராஜ்! ! 'DC' படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Mojtaba Khamenei Video: ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
Trump Vs Netanyahu: ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
"என்னைப் பத்தி கிசுகிசு வந்துடும்னு பயம்.." மனம் திறந்த ஜமீன்கோட்டை ஹீரோயின்! ஞாபகம் இருக்கா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
Embed widget