மேலும் அறிய

'Chilla Chilla' Release Date: தீ தளபதிக்கு டஃப் கொடுக்குமா ‘சில்லா சில்லா’.. பாடல் வெளியீட்டு தேதியை அறிவித்த துணிவு டீம்!

அஜீத் குமார் நடித்துள்ள 'துணிவு' படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடலான 'சில்லா சில்லா' பாடல் ரிலீஸ் தேதி வெளியானது.

நடிகர் அஜித் குமார் நடிப்பில் பொங்கல் ரிலீஸாக வெளியாக இருக்கும் 'துணிவு' படத்தின் மிகவும் எதிர்பார்க்கப்படும் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடலான 'சில்லா சில்லா' பாடல் ரிலீஸ் குறித்த தகவலை தற்போது வெளியிட்டுள்ளனர் படக்குழுவினர். இது ரசிகர்கள் மத்தியில் ஆரவாரத்தை  ஏற்படுத்தியுள்ளது. 

 

Chilla Chilla' Release Date: தீ தளபதிக்கு டஃப் கொடுக்குமா ‘சில்லா சில்லா’.. பாடல் வெளியீட்டு தேதியை அறிவித்த துணிவு டீம்!

சில்லா சில்லா ரிலீஸ் தேதி :

போனி கபூர் தயாரிப்பில் ஹெச். வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடித்துள்ள திரைப்படம் 'துணிவு'. நடிகர் அஜித் ஜோடியாக மலையாள திரையுலகின் முன்னணி நடிகையான மஞ்சு வாரியர் நடித்துள்ள இப்படத்திற்கு இசையமைத்துள்ளார் ஜிப்ரான்.

படத்தின் இறுதிக்கட்ட போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் மிகவும் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடலான 'சில்லா சில்லா' தொடர்பான தகவல் முன்னமே வெளியானது. ஜிப்ரான் இசையில் வைசாக் எழுத்தில், அனிருத் குரலில் ஒரு பவர் ஃபுல் பாடலாக உருவாகியிருக்கிறது இந்தப்பாடல். 

 

இந்த பாடல் எப்போது வெளியாகும் எனும் அறிவிப்பிற்காக மிகவும் ஆர்வமாக எதிர்பார்த்த அஜித் ரசிகர்களுக்கு ஒரு நற்செய்தி வெளியாகியுள்ளது. ஆம் சில்லா சில்லா பாடல் வரும் டிசம்பர் 9ம் தேதி வெளியாகவுள்ளது எனும் அறிவிப்பு தான் அந்த அற்புதமான சர்ப்ரைஸ். 

 


சில்லா சில்லா பாடல் ஒரு ஃபாஸ்ட் நம்பர் பாடல் என்றும் இதில் தல அஜித் குமார் ஒரு மாஸ் கெட்டப்பில் தோன்றவுள்ளார் என்றும் நெருங்கிய சினிமா வட்டாரங்கள் மூலம் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் இப்பாடல் மீது ரசிகர்களுக்கு இருந்த ஆர்வம் மேலும் தூண்டப்பட்டுள்ளது. 

 

பாக்ஸ் ஆபிஸில் மோதும் மாஸ் ஹீரோக்கள் :

மேலும் பொங்கலுக்கு துணிவு மற்றும் வாரிசு திரைப்படங்கள் என இரண்டு மாஸ் ஹீரோக்களின் படங்களும் ஒன்றாக வெளியாகும் நிலையில் போஸ்டர்களுக்கு மாறி மாறி வெளியாகி  சோசியல் மீடியாவில் புயலை கிளப்பி வருகின்றன.

இந்த இரு கோலிவுட் ஸ்டார்களின் திரைப்படங்கள் பாக்ஸ் ஆஃபிசில் கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகளுக்கு பிறகு மோதுவதால், திரை ரசிகர்கள் மத்தியிலும் பரபரப்பு அதிகமாக காணப்படுகிறது. துணிவு திரைப்படம் ஜனவரி 11ஆம் தேதி உலகளவில் உள்ள திரையரங்குகளில் கோலாகலமாக வெளியாக உள்ளது.  

தலைப்பு செய்திகள்

Soori : நம்ம சூரியா இது! டான்ஸ் எல்லாம் மிரட்டுதே..கவனமீர்க்கும் மண்டாடி பட பாடல்
Soori : நம்ம சூரியா இது! டான்ஸ் எல்லாம் மிரட்டுதே..கவனமீர்க்கும் மண்டாடி பட பாடல்
நடிகை ப்ரீத்தி முகுந்தன் கணித மேதை ராமானுஜரின் உறவினரா ? முழு விபரம் இதோ
நடிகை ப்ரீத்தி முகுந்தன் கணித மேதை ராமானுஜரின் உறவினரா ? முழு விபரம் இதோ
ராயன் படத்திற்கு தேசிய விருதா..இத தனுஷ் ரசிகர்களே ஏத்துக்கமாட்டாங்க..சோசியல் மீடியாவில் ரியாக்‌ஷன் என்ன?
ராயன் படத்திற்கு தேசிய விருதா..இத தனுஷ் ரசிகர்களே ஏத்துக்கமாட்டாங்க..சோசியல் மீடியாவில் ரியாக்‌ஷன் என்ன?
72nd national film awards: தேசிய விருதுகளை அள்ளிய தமிழ் சினிமா.. யார்? யாருக்கு என்னென்ன விருது? - முழு லிஸ்ட் இதோ
தேசிய விருதுகளை அள்ளிய தமிழ் சினிமா.. யார்? யாருக்கு என்னென்ன விருது? - முழு லிஸ்ட் இதோ

வீடியோ

காங்., கவுன்சிலர் புடவையை இழுத்த திமுக கவுன்சிலர்கள்! வெளியான பகீர் வீடியோ!
மீண்டும் DELIMITATION மசோதா திமுக-வை நாடிய பாஜக? ஸ்டாலின் அவசர ஆலோசனை!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
US Iran War: ஈரான் மீது தரைவழித் தாக்குதல் நடத்தப் போகிறதா அமெரிக்கா.? ரகசிய திட்ட வரைபடம் வைரலானதால் பரபரப்பு
ஈரான் மீது தரைவழித் தாக்குதல் நடத்தப் போகிறதா அமெரிக்கா.? ரகசிய திட்ட வரைபடம் வைரலானதால் பரபரப்பு
72nd national film awards: தேசிய விருதுகளை அள்ளிய தமிழ் சினிமா.. யார்? யாருக்கு என்னென்ன விருது? - முழு லிஸ்ட் இதோ
தேசிய விருதுகளை அள்ளிய தமிழ் சினிமா.. யார்? யாருக்கு என்னென்ன விருது? - முழு லிஸ்ட் இதோ
National Film Award-Dhanush: 2024 தேசிய திரைப்பட விருதுகள்; இயக்குனர், நடிகர் என 2 விருதுகளை அள்ளிய தனுஷ்.! எந்தெந்த படங்கள்.?
2024 தேசிய திரைப்பட விருதுகள்; இயக்குனர், நடிகர் என 2 விருதுகளை அள்ளிய தனுஷ்.! எந்தெந்த படங்கள்.?
3 வருட கட்சி தவெக.. உங்களுக்கு இவ்வளவு திமிரா? - விஜயை விளாசிய வளர்மதி!
3 வருட கட்சி தவெக.. உங்களுக்கு இவ்வளவு திமிரா? - விஜயை விளாசிய வளர்மதி!
குறைகளைக் கொட்டிய சமூகநீதி விடுதி மாணவர்கள்.. ஒரே நாளில் ஆக்‌ஷன் எடுத்த விஜய்..குவியும் பாராட்டு!
குறைகளைக் கொட்டிய சமூகநீதி விடுதி மாணவர்கள்.. ஒரே நாளில் ஆக்‌ஷன் எடுத்த விஜய்..குவியும் பாராட்டு!
RBI Plans Plastic Notes: கள்ளநோட்டு கும்பலுக்கு ஆப்பு.! புதிய பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்த RBI திட்டம்.? விவரம்
கள்ளநோட்டு கும்பலுக்கு ஆப்பு.! புதிய பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்த RBI திட்டம்.? விவரம்
Samsung Flex Titanium Display: ‘கீழ விழுந்தாலும் உடையாது‘; மடிக்கக்கூடிய ஃபோன் டிஸ்ப்ளேக்களில் புதிய டெக்னாலஜி; அசத்தும் சாம்சங்
‘கீழ விழுந்தாலும் உடையாது‘; மடிக்கக்கூடிய ஃபோன் டிஸ்ப்ளேக்களில் புதிய டெக்னாலஜி; அசத்தும் சாம்சங்
ரூ.1 லட்சம் போதும்; ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 மாத இஎம்ஐ எவ்வளவு?- முழு விவரம்
ரூ.1 லட்சம் போதும்; ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 மாத இஎம்ஐ எவ்வளவு?- முழு விவரம்
Embed widget