மேலும் அறிய

Mamanidhan film: யுவன்ஷங்கர் ராஜா இசையில் “மாமனிதன்” படத்தின் இரண்டாவது சிங்கிள் “ஏ ராசா” பாடல்! 

யுவன்ஷங்கர் ராஜா ரசிகர்கள் மகிழும் வகையில் யுவன் தனியாக 'ஏ ராஜா' வீடியோவை வெளியிட்டுள்ளார்

யுவன்ஷங்கர் ராஜா, தமிழ் சினிமா இசையின் நாயகன். இசை கேட்கும் நெஞ்சங்களை ஆற்றுப்படுத்தும் கருவி அவர். யுவனின் இசை வெறும் பாடல் ரசனையாக முடிந்து விடுவதில்லை. துன்பத்தில் உழலும் மனதை, அழுத்தம் மிகுந்த மனதின் வெறுமையை ஆற்றுப்படுத்தும் ஆறுதல் மருந்தாகவே அவரது குரல் அவரது ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது. வாழ்வின் பல தருணங்களில் நம்மை மனமுருக செய்யும், பல அற்புத பாடல்களை  தன் குரலில் தந்த யுவன், அடுத்த விருந்தாக “மாமனிதன்”  படத்திலிருந்து இரண்டாவது பாடலாக “ஏ ராசா” பாடலை வெளியிட்டுள்ளார். இந்த பாடல் பலவிதமான உணர்வுகளை ஒன்றாக வெளிப்படுத்தும் பாடலாக,  வாழ்வின்  மீதான நம்பிக்கையை ஏற்படுத்தும் பாடலாக, ஆத்ம திருப்தி தரும் பாடலாக, இந்த பொதுமுடக்க காலத்தில் நம் மனதிற்கு இனிமையை தரும் பாடலாக அமைந்துள்ளது. 

வாழ்வின் மீதான நம்பிக்கையை நிலைப்படுத்தும் இப்பாடல், யுவனின் குரலில் ரசிகர்களை புது வித அனுபவத்திற்கு எடுத்து செல்கிறது. பா விஜய் அவர்களின் பாடல் வரிகள் நம் மனதை கொள்ளை கொள்ளும்படி அமைந்துள்ளது. இந்த கடினமான காலத்தில் ஆத்மாவை சாந்தப்படுத்தும் அற்புத இசையை தந்திருக்கிறார் யுவன் சங்கர் ராஜா. இந்த பாடல் யுவன் சங்கர் ராஜா ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்தும் விதமாக, யுவன் அவர்கள் தனியாக  தோன்றும் வீடியோ வடிவிலும் உருவாக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. மனதை ஆற்றுப்படுத்தும் அதே நேரம், கண்களுக்கும் இனிமை தரும் விருந்தாக, நம்பிக்கை தரும் மருந்தாக உள்ளது இப்பாடல். 

இளையராஜா அவர்களும் யுவன் சங்கர் ராஜா அவர்களும் இணைந்து இசையமைத்திருக்கும் இப்பாடலை, யுவன் தனது சொந்த குரலில் பாடியுள்ளார். கவிஞர் பா.விஜய் இப்பாடலை எழுதியுள்ளார். விஜய் சேதுபதி, காயத்திரி முன்னணி பாத்திரங்களில் நடிக்கும் “மாமனிதன்” படத்தினை இயக்குநர் சீனு ராமசாமி தயாரித்துள்ளார்.

தலைப்பு செய்திகள்

AK 64 Title: அஜித்தின் புதிய அவதாரம்... ஏகே 64 படத்தின் டைட்டில் டேர்டெவில் - இன்னொரு மங்காத்தாவா?
AK 64 Title: அஜித்தின் புதிய அவதாரம்... ஏகே 64 படத்தின் டைட்டில் டேர்டெவில் - இன்னொரு மங்காத்தாவா?
பிறந்தநாளை ஏன் கொண்டாடவில்லை? மனம் திறந்த சூர்யா...
பிறந்தநாளை ஏன் கொண்டாடவில்லை? மனம் திறந்த சூர்யா...
'விஸ்வநாத் & சன்ஸ்' படத்தில் தமிழ் டப்பிங் பேசிய மமிதா... மேடையில் சூர்யா பகிர்ந்த தகவல்
'விஸ்வநாத் & சன்ஸ்' படத்தில் தமிழ் டப்பிங் பேசிய மமிதா... மேடையில் சூர்யா பகிர்ந்த தகவல்
5,000 பேரின் ரத்ததானம் முதல் 40,000 பேருக்கான நலத்திட்ட உதவி வரை... ரசிகர்களை பாராட்டிய சூர்யா
5,000 பேரின் ரத்ததானம் முதல் 40,000 பேருக்கான நலத்திட்ட உதவி வரை... ரசிகர்களை பாராட்டிய சூர்யா

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Actor Dhanush : ’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
Bankipur Bypoll: பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்
Trump Vs Iran: பேச்சுவார்த்தைக்கு சிக்னல் கொடுக்கும் ட்ரம்ப்; மதிக்காமல் ஓமனுடன் ஹார்முஸ் டீல் போடும் ஈரான்
பேச்சுவார்த்தைக்கு சிக்னல் கொடுக்கும் ட்ரம்ப்; மதிக்காமல் ஓமனுடன் ஹார்முஸ் டீல் போடும் ஈரான்
Maruti Brezza Vs Renault Kiger: மாருதி பிரெஸ்ஸாவா.? ரெனால்ட் கைகரா.? குறைவான பட்ஜெட்டில் நிறைவான எஸ்யூவி எது.? தெரிஞ்சுக்கோங்க
மாருதி பிரெஸ்ஸாவா.? ரெனால்ட் கைகரா.? குறைவான பட்ஜெட்டில் நிறைவான எஸ்யூவி எது.? தெரிஞ்சுக்கோங்க
Maruti XL6 Facelift: செம லுக் யா.! பிரபலமான XL6 எஸ்யூவியின் ஃபேஸ்லிஃப்ட்டை இந்தியாவில் களமிறக்கும் மாருதி சுசூகி
செம லுக் யா.! பிரபலமான XL6 எஸ்யூவியின் ஃபேஸ்லிஃப்ட்டை இந்தியாவில் களமிறக்கும் மாருதி சுசூகி
Innova Hycross on EMI: ஹைடெக்கான இன்னோவா ஹைக்ராஸ் கார் வாங்க ஆசையா.? ரூ.1 லட்சம் முன்பணம் கட்டுனா எவ்ளோ EMI வரும்.?
ஹைடெக்கான இன்னோவா ஹைக்ராஸ் கார் வாங்க ஆசையா.? ரூ.1 லட்சம் முன்பணம் கட்டுனா எவ்ளோ EMI வரும்.?
Embed widget