Chandramukhi 2 update: ராமோஜி பிலிம் சிட்டியில் சந்திரமுகி 2... படத்தின் புதிய அப்டேட்!
சந்திரமுகி 2 படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் முன்னதாகக் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் படம் குறித்த புதிய அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது.
நடிகர்கள் ரஜினிகாந்த், பிரபு, நயன்தாரா, ஜோதிகா, வடிவேலு நடிப்பில் கடந்த 2005ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் “சந்திரமுகி”. பி.வாசு இயக்கிய இப்படத்திற்கு வித்யாசாகர் இசையமைத்திருந்தார். கிட்டதட்ட 700 நாட்களுக்கும் மேல் ஓடி தமிழ் சினிமாவில் மகத்தான சாதனைப் படைத்த இப்படத்தின் 2 ஆம் பாகம் குறித்த முயற்சிகளை பி.வாசு கடந்த சில ஆண்டுகளாகவே எடுத்து வந்தார்.
2 ஆம் பாகத்தில் ஹீரோவாக ராகவா லாரன்ஸ் நடிக்கவுள்ளதாகவும், இதற்காக நடிகர் ரஜினிகாந்திடம் முறையான அனுமதி பெற்றுள்ளதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் சந்திரமுகி-2 படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த ஜூன் 14 ஆம் தேதி வெளியானது.
View this post on Instagram
பாகுபலி படத்திற்கு இசையமைத்த பிரபல இசையமைப்பாளர் மரகதமணி இப்படத்திற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள நிலையில், 2 ஆம் பாகத்தில் ஹீரோவாக ராகவா லாரன்ஸ் நடிக்கிறார். மேலும் வடிவேலு, ராதிகா உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர். படத்தின் முதல் ஷெட்யூலும் முடிந்துவிட்டதாக ஏற்கெனவே தயாரிப்பு நிறுவனம் தெரிவித்தது.
— Manobala (@manobalam) October 15, 2022
இதைத்தொடர்ந்து சந்திரமுகி 2 படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் முன்னதாகத் தொடங்கி நடைபெற்று வருகிறது.இந்த இரண்டாம் கட்ட ஷூட்டிங்கில் நடிகர்கள் ராகவா லாரன்ஸ், ராதிகா சரத்குமார், வடிவேலு, மனோபாலா ஆகியோர் பங்கேற்றுள்ள நிலையில், ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி வைரலாகின.
இந்நிலையில் படம் குறித்த புதிய அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது.
#Chandramukhi2 Update 📢
— Laxmi Kanth (@iammoviebuff007) November 14, 2022
- Currently Shoot is Happening in Ramoji Film City..⭐
- Fight Sequences are being filmed in this schedule..🤙
சந்திரமுகி 2 திரைப்பட ஷூட்டிங் தற்போது ஹைதராபாதில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் நடைபெற்று வருவதாகவும், படத்தின் சண்டை காட்சிகள் தற்போது அங்கு படமாக்கப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
திருமணத்துக்குப் பிறகு இப்படத்தில் காஜல் அகர்வால் நாயகியாக நடிக்க உள்ள நிலையில், இந்தியன் 2 படத்திலும் காஜல் தற்போது நடித்து வருகிறார்.
முன்னதாக இந்தி சந்திரமுகியான பூல் புலையா படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகி வசூலில் சாதனை படைத்த நிலையில், தமிழிலும் சந்திரமுகி 2 ரசிகர்களை உற்சாகப்படுத்தி பாக்ஸ் ஆஃபிஸ் ஹிட் அடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.