மேலும் அறிய

Rashmika Mandanna : ராஷ்மிகாவின் டீப்ஃபேக் வீடியோ.. 3 ஆண்டுகள் சிறை விதிக்கப்படும் என எச்சரிக்கை..!

Rashmika Mandanna : மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் சமூக ஊடக தளங்களுக்கு டீப்ஃபேக் வீடியோக்களின் சட்ட விதிகளை அடிக்கோடிட்டுக் ஒரு ஆலோசனையை வெளியிட்டுள்ளது.

தென்னிந்திய சினிமாவின் கனவு கன்னியாக வலம் வரும் ராஷ்மிகா மந்தனாவின் டீப்ஃபேக் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாக பகிரப்பட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. AI செயற்கை நுண்ணறிவு மூலம் மார்ஃபிங் செய்யப்பட்டது என்றும் அதன் ஒரிஜினல் வீடியோ நடிகை ஷாரா படேல் இருப்பதாகவும் தெரியவந்தது. ரஷ்மிகாவின் இந்த முகம் சுளிக்க வைக்கும் வீடியோ சோசியல் மீடியாவில் மிகவும் வைரலாக பகிரப்பட்டதற்கு திரை பிரபலங்கள் பலரும் அவர்களது கண்டனங்களை தெரிவித்து வந்தனர். மத்திய தொழில்நுட்பத்தை இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகரும் இந்த விவகாரம் தொடர்பாக சமூக வலைதளங்களுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தார்.

Rashmika Mandanna : ராஷ்மிகாவின் டீப்ஃபேக் வீடியோ.. 3 ஆண்டுகள் சிறை விதிக்கப்படும் என எச்சரிக்கை..!

நடிகை ராஷ்மிகா மந்தனாவின் இந்த டீப்ஃபேக் வீடியோவுக்குப் பிறகு, சமூக ஊடக தளங்களுக்கு மீண்டும் ஒருமுறை விதிகளை நினைவூட்டியுள்ளது அதன் மையம். மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் சமூக ஊடக தளங்களுக்கு ஒரு ஆலோசனை அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி இது போன்ற டீப்ஃபேக்குகளை உருவாக்குபவர்கள் மற்றும் அதை பரப்புபவர்கள் மீது அபாரதங்கள் விதிக்கக்கூடும் என குறிப்பிட்டுள்ளது. 

தகவல் தொழில்நுட்ப சட்டம், 2000 இன் பிரிவு 66Dஐ படி 'கணினி வளத்தைப் பயன்படுத்தி தனிப்பட்ட முறையில் மோசடி செய்ததற்கான தண்டனை' என்ற பிரியை சுட்டி காட்டியுள்ளது. அதன் படி "எந்தவொரு தகவல் தொடர்பு சாதனம் அல்லது கணினி வளம் மூலம் தனிப்பட்ட முறையில் மோசடி செய்பவர்கள் மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனையுடன் சேர்த்து ஒரு லட்சம் ரூபாய் வரை அபராதமும் விதிக்கக்கூடும்" என குறிப்பிட்டுள்ளது. 

இது "மிகவும் பயங்கரமானது" என ராஷ்மிகா மந்தனா பதிவிட்டு இருந்தார். "இது போன்ற டீப்ஃபேக் வீடியோ பகிரப்பட்டதை நினைத்து நான் மிகவும் வேதனைப்படுகிறேன். நிச்சயமாக இது போன்ற ஒரு வீடியோ மூலம் தொழில்நுட்பம் தவறாகப் பயன்படுத்தப்படுவதால் எனக்கு மட்டுமின்றி நம் ஒவ்வொருவருக்கும் தீங்கு விளைவிக்க கூடும் என பயமாக இருக்கிறது" என குறிப்பிட்டு இருந்தார். 

பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் உள்ளிட்ட திரை பிரபலங்கள் இந்த தவறான வீடியோவுக்கு குரல் எழுப்பியதால் இந்த விஷயம் சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வழிவகுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

டிஜிட்டல் துறையில் இந்தியர்களின் பாதுகாப்பையும் நம்பிக்கையையும் உறுதி செய்வதில் நரேந்திர மோடி அரசு உறுதி பூண்டுள்ளதாக மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் நேற்று தெரிவித்தார். 

"ஏப்ரல், 2023 இல் அறிவிக்கப்பட்ட தகவல் தொழில்நுட்ப விதிகளின்படி - எந்தவொரு பயனாளரும் தவறான தகவல்களை போஸ்ட் செய்யவில்லை என்பதை உறுதிப்படுத்துவது, அப்படி புகாரளிக்கப்பட்டால் அவை 36 மணிநேரத்தில் அகற்றப்பட்டுவிட்டதா என்பதை தளங்கள் உறுதிபடுத்துத வேண்டும் என்பது சட்டப்பூர்வ கடமையாகும். அதையும் மீறி தளங்கள் இணங்கவில்லை என்றால் IPC விதிகள் மற்றும் ரூல் 7 படி பாதிக்கப்பட்ட நபர் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லலாம். 

டீப்ஃபேக் வீடியோ சமீப காலமாக மிகவும் ஆபத்தான மற்றும் சேதப்படுத்தும் தவறான தகவல்கள் மற்றும் தளங்கள் சரியான முறையில் கையாளப்பட வேண்டும்" என "SafeTrustedInternet", "Accountable" மற்றும் "DigitalIndia" என்ற ஹேஷ்டேக்குகளுடன் அமைச்சர் நேற்று ட்வீட் செய்து இருந்தார். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இனி ட்ரீப் போக முடியாதோ? லடாக்கில் கை வைத்த ஜின்பிங்.. சொந்தம் கொண்டாடும் சீனா!
இனி ட்ரீப் போக முடியாதோ! லடாக் யாருக்கு சொந்தம்? சீனா செய்த செயலால் இந்தியா அதிர்ச்சி!
Pongal 2025 Holiday: என்னாது? பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு 9 நாட்கள் பொங்கல் விடுமுறையா? அறிவிப்பு சொல்வது என்ன?
Pongal 2025 Holiday: என்னாது? பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு 9 நாட்கள் பொங்கல் விடுமுறையா? அறிவிப்பு சொல்வது என்ன?
Tamilisai Soundararajan : ”தமிழிசைக்கு விரைவில் புதிய பதவி” இதற்காகதான் காய் நகர்தினாரா அவர்?
Tamilisai Soundararajan : ”தமிழிசைக்கு விரைவில் புதிய பதவி” இதற்காகதான் காய் நகர்தினாரா அவர்?
யப்பா! நிம்மதி பெருமூச்சு விட்ட அல்லு அர்ஜுன்.. கிடைத்தது ஜாமீன்!
யப்பா! நிம்மதி பெருமூச்சு விட்ட அல்லு அர்ஜுன்.. கிடைத்தது ஜாமீன்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Tamilisai vs Annamalai : EPS-ஐ வைத்து அ.மலைக்கு ஸ்கெட்ச்!டெல்லிக்கே போன தமிழிசை! பாஜக தலைவர் யார்?Yescon 2025 : சென்னையில் நாளை முதல்.. YESCON - 2025 மாநாடு துவக்கி வைக்கும் நிதியமைச்சர்செ.பாலாஜி..பொன்முடி வரிசையில்..  துரைமுருகன் வீட்டில் ED ரெய்டு!  பரபரக்கும் வேலூர்ஸ்டாலின் vs இபிஎஸ் vs விஜய் ! களமிறங்கிய MASTER MINDS ! 2026-ல் அரியணை யாருக்கு?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இனி ட்ரீப் போக முடியாதோ? லடாக்கில் கை வைத்த ஜின்பிங்.. சொந்தம் கொண்டாடும் சீனா!
இனி ட்ரீப் போக முடியாதோ! லடாக் யாருக்கு சொந்தம்? சீனா செய்த செயலால் இந்தியா அதிர்ச்சி!
Pongal 2025 Holiday: என்னாது? பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு 9 நாட்கள் பொங்கல் விடுமுறையா? அறிவிப்பு சொல்வது என்ன?
Pongal 2025 Holiday: என்னாது? பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு 9 நாட்கள் பொங்கல் விடுமுறையா? அறிவிப்பு சொல்வது என்ன?
Tamilisai Soundararajan : ”தமிழிசைக்கு விரைவில் புதிய பதவி” இதற்காகதான் காய் நகர்தினாரா அவர்?
Tamilisai Soundararajan : ”தமிழிசைக்கு விரைவில் புதிய பதவி” இதற்காகதான் காய் நகர்தினாரா அவர்?
யப்பா! நிம்மதி பெருமூச்சு விட்ட அல்லு அர்ஜுன்.. கிடைத்தது ஜாமீன்!
யப்பா! நிம்மதி பெருமூச்சு விட்ட அல்லு அர்ஜுன்.. கிடைத்தது ஜாமீன்!
TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
சனாதனம் பத்தி புரியாம பேசாதீங்க? கொதித்தெழுந்த துணை ஜனாதிபதி
சனாதனம் பத்தி புரியாம பேசாதீங்க? கொதித்தெழுந்த துணை ஜனாதிபதி
Kushboo :
Kushboo : "தந்தையால் பாலியல் தொந்தரவுக்கு ஆளானேன்"..நடிகை குஷ்பு ஓப்பன் டாக்
Madurai: அக்னி சட்டி, மிளகாய் அரைத்து போராட்டம் ; மதுரையில் குஷ்பு கைது
அக்னி சட்டி, மிளகாய் அரைத்து போராட்டம் ; மதுரையில் குஷ்பு கைது
Embed widget