மேலும் அறிய

GST Theatre Food : அதிரடி.. தியேட்டர் உணவுகளுக்கான ஜிஎஸ்டி வரி 13 சதவிகிதம் குறைப்பு.. மக்கள் வருகை அதிகரிக்குமா?

GST Theatre Food : டெல்லியில் நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் தியேட்டரில் விற்கப்படும் உணவுப் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரி குறைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. 

GST Theatre Food : டெல்லியில் நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் தியேட்டரில் விற்கப்படும் உணவுப் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரி குறைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. 

கடந்த 2017 ஆம் ஆண்டு சரக்கு மற்றும் சேவை வரி அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், டெல்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் ஜிஎஸ்டி கவுன்சிலின் 50ஆவது கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாநில நிதியமைச்சா்கள், மத்திய நிதித்துறை அமைச்சகத்தின் உயர் அலுவலர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். தமிழ்நாடு அரசு சார்பில்  நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கலந்து கொண்டார். 

இந்த கூட்டத்தில் இணைய விளையாட்டுகள், குதிரைப் பந்தயம், கேசினோ விளையாட்டுகள் ஆகியவற்றுக்கு 28 சதவீத ஜிஎஸ்டி வரி விதிக்கப்படும் என ஆலோசனை நடத்தப்பட்டது. தொடர்ந்து புற்றுநோய் சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் இறக்குமதி மருந்துகளுக்கு வரி விலக்கு அளிக்கவும், செயற்கை ஜரிகைக்கு 12% வரியில் 5% ஆக குறைப்பது போன்றவை தொடர்பாகவும்  விவாதிக்கப்பட்டது. 

அப்போது தியேட்டர்களில் விற்பனை செய்யப்படும் உணவுப் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரி 18 சதவிகிதத்தில் இருந்து 5 சதவிகிதமாக குறைக்கப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். இந்த அறிவிப்பு சினிமா ரசிகர்களிடையே மிகப்பெரிய அளவில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. 

உணவுப் பொருட்களின் தாறுமாறு விலை 

தமிழ்நாட்டில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தியேட்டர்கள் செயல்பட்டு வரும் நிலையில், முன்பை விட தற்போது படம் பார்ப்பவர்களின் எண்ணிக்கை குறைந்து விட்டது. அதற்கு காரணம் தியேட்டர்களில் விற்கப்படும் உணவுப் பொருட்களின் தாறுமாறு விலை தான் காரணம். டிக்கெட் விலையை விட உணவுப் பொருட்கள் விலை அதிகமாக இருப்பதால் பலரும் குடும்பத்துடன் படம் பார்க்க செல்லும் முடிவையே கைவிடும் நிலை ஏற்படுகிறது. இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என ரசிகர்கள் பல காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். 

இப்படியான நிலையில் தியேட்டர்களில் விற்பனை செய்யப்படும் உணவுப் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்டுள்ளதால், அதன் மொத்த விலையின் கணிசமான தொகை குறைய வாய்ப்புள்ளது. இதனால் மீண்டும் ரசிகர்கள் அதிக எண்ணிக்கையில் தியேட்டருக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேசமயம் கடந்த சில நாட்களுக்கு முன், தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் தியேட்டர்களில் டிக்கெட் கட்டணத்தை உயர்த்திக்கொள்ள அனுமதி கோரி  தமிழ்நாடு அரசிடம் மனு ஒன்றை அளித்தனர். அதன்படி மல்டிபிளக்ஸ் ஏசி தியேட்டர் கட்டணம் ரூ.250 ஆகவும், பிற ஏசி தியேட்டர் கட்டணம் ரூ.200 வரையும், ஏசி இல்லாத தியேட்டர்களில் ரூ.120 வரையும் கட்டணம் உயர்த்த கோரிக்கை விடுக்கப்பட்டது. இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், தியேட்டர் உணவுப் பொருட்களுக்கான வரி குறைப்பு சற்று நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது எனலாம்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Manmohan Singh Death: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார் - துடித்துப்போன அரசியல் தலைவர்கள் - மனமுடைந்து இரங்கல்
Manmohan Singh Death: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார் - துடித்துப்போன அரசியல் தலைவர்கள் - மனமுடைந்து இரங்கல்
Manmohan Singh: தத்தளித்த இந்திய பொருளாதாரம், கரையேற்றிய மன்மோகன் சிங் - ”எல்பிஜி” ரீஃபார்ம், லைசன்ஸ் ராஜ் ரத்து
Manmohan Singh: தத்தளித்த இந்திய பொருளாதாரம், கரையேற்றிய மன்மோகன் சிங் - ”எல்பிஜி” ரீஃபார்ம், லைசன்ஸ் ராஜ் ரத்து
Manmohan Singh: வளர்ச்சியே மூச்சு..! இன்றைய இந்தியாவிற்கு, அன்றே அடித்தளம் போட்ட மன்மோகன் சிங் - இவ்வளவு சீர்திருத்தங்களா?
Manmohan Singh: வளர்ச்சியே மூச்சு..! இன்றைய இந்தியாவிற்கு, அன்றே அடித்தளம் போட்ட மன்மோகன் சிங் - இவ்வளவு சீர்திருத்தங்களா?
Manmohan Singh Death: நவீன இந்தியாவின் சிற்பி.. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார்!
நவீன இந்தியாவின் சிற்பி.. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

RN Ravi Delhi Visit: ”ஸ்டாலின் சொல்றத கேளுங்க!” RN.ரவிக்கு பறந்த ORDER! மோடியின் திடீர் முடிவு?Anna University Issue: அண்ணா பல்கலை. விவகாரம் குற்றவாளி குறித்து திடுக் தகவல்!  கைதானவர் யார்?Sri Ram Krishna Profile: தமிழனை அழைத்த TRUMP WHITE HOUSE-ல் முக்கிய பதவி! யார் ஸ்ரீராம் கிருஷ்ணன்?Anna University Student Sexual Assault |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Manmohan Singh Death: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார் - துடித்துப்போன அரசியல் தலைவர்கள் - மனமுடைந்து இரங்கல்
Manmohan Singh Death: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார் - துடித்துப்போன அரசியல் தலைவர்கள் - மனமுடைந்து இரங்கல்
Manmohan Singh: தத்தளித்த இந்திய பொருளாதாரம், கரையேற்றிய மன்மோகன் சிங் - ”எல்பிஜி” ரீஃபார்ம், லைசன்ஸ் ராஜ் ரத்து
Manmohan Singh: தத்தளித்த இந்திய பொருளாதாரம், கரையேற்றிய மன்மோகன் சிங் - ”எல்பிஜி” ரீஃபார்ம், லைசன்ஸ் ராஜ் ரத்து
Manmohan Singh: வளர்ச்சியே மூச்சு..! இன்றைய இந்தியாவிற்கு, அன்றே அடித்தளம் போட்ட மன்மோகன் சிங் - இவ்வளவு சீர்திருத்தங்களா?
Manmohan Singh: வளர்ச்சியே மூச்சு..! இன்றைய இந்தியாவிற்கு, அன்றே அடித்தளம் போட்ட மன்மோகன் சிங் - இவ்வளவு சீர்திருத்தங்களா?
Manmohan Singh Death: நவீன இந்தியாவின் சிற்பி.. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார்!
நவீன இந்தியாவின் சிற்பி.. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார்!
Anna University Issue:
"ஞானசேகரன் மட்டுமே குற்றவாளி" அண்ணா பல்கலை. விவகாரம்.. சென்னை கமிஷனர் அருண் பரபர தகவல்!
நாளையில் இருந்து செருப்பு அணியமாட்டேன்; சாட்டையால் அடித்துக்கொள்வேன்: அண்ணாமலை எடுத்த சபதம் 
நாளையில் இருந்து செருப்பு அணியமாட்டேன்; சாட்டையால் அடித்துக்கொள்வேன்: அண்ணாமலை எடுத்த சபதம் 
Pushpa 2 Collection :  கலவரத்திலும் குறையாத வசூல்...புஷ்பா 2 பட பாக்ஸ் ஆபிஸ்
Pushpa 2 Collection : கலவரத்திலும் குறையாத வசூல்...புஷ்பா 2 பட பாக்ஸ் ஆபிஸ்
"இந்தியா கூட்டணியில் உங்களுக்கு இடம் இல்ல" காங்கிரஸ்-க்கு கெட் அவுட்.. கொதிக்கும் கெஜ்ரிவால்!
Embed widget