Anant Radhika Wedding: விடிய விடிய ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம்.. களைகட்டிய அனந்த் அம்பானி திருமணம்..!
ஜூலை 12ம் தேதி ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் திருமணம் நடக்கவுள்ளது. இதற்கிடையில் திருமணத்திற்கு முந்தைய மூன்று நாள் கொண்டாட்டங்கள் கடந்த மார்ச் 1 ஆம் தேதி தொடங்கியது.
ரிலையன்ஸ் குழுமத் தலைவரும், தொழிலதிபருமான முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானியின் திருமண கொண்டாட்ட நிகழ்வுகள் உலகளவில் பேசுபொருளாக மாறியுள்ளது.
உலக பணக்காரர்களில் ஒருவரும், இந்தியாவின் ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி - நீடா அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி ராதிகா மெர்ச்சன்ட் என்ற பெண்ணை காதலித்து வந்தார். இவர்கள் இருவரது திருமண நிச்சயத்தார்த்தம் 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெற்றது. வரும் ஜூலை 12ம் தேதி ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் திருமணம் நடக்கவுள்ளது.
இதற்கிடையில் திருமணத்திற்கு முந்தைய மூன்று நாள் கொண்டாட்டங்கள் கடந்த மார்ச் 1 ஆம் தேதி தொடங்கியது.குஜராத்தின் ஜாம் நகரில் நடைபெற்று வரும் இந்த விழாவில் பூடான் மன்னர் நாம்கேல், அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்பின் மகள் இவாங்கா ட்ரம்ப், மெட்டா நிறுவனத் தலைவர் மார்க் ஜூக்கர்பெர்க், மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ், கத்தார் பிரதமர் ஷேக் முகமது பின் அப்துல் ரஹ்மான், மகேந்திரா நிறுவன தலைவர் ஆனந்த் மகேந்திரா உள்ளிட்ட முன்னணி பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
Actors Deepika Padukone, Ranveer Singh, Arjun Kapoor, Film directors Ayan Mukerji and Atlee posed at the pre-wedding celebrations of Anant Ambani and Radhika Merchant in Jamnagar, Gujarat. pic.twitter.com/Ju8OMLgwmM
— ANI (@ANI) March 2, 2024
அதேசமயம் அஜய் தேவ்கன், ரன்வீர் சிங், சித்தார்த் மல்கோத்ரா, ஷாருக்கான், அமீர் கான், அக்ஷய்குமார், ராம் சரண், நடிகைகள் தீபிகா படுகோன், மாதுரி தீக்சித், கியரா அத்வானி, அனன்யா பாண்டே, இயக்குநர் அட்லீ உள்ளிட்டோரும் திரைத்துறை சார்பில் கலந்து கொண்டனர். விளையாட்டு துறை சார்பில் சச்சின் டெண்டுல்கர் ரோகித் ஷர்மா, இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், ஜாஹிர் கான், முன்னாள் கேப்டன் தோனி ஆகியோரு பங்கேற்றனர். அதுமட்டுமல்லாமல் உலகம் முழுவதுமிருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட பிரபலங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் குஜராத் மாநிலமே கொண்டாட்டங்களால் களைக்கட்டியது.
நேற்று நடந்த 2ஆம் நாள் நிகழ்வில் மணமகன் ஆனந்த அம்பானி தனது உடல் நலம் பற்றி வெளிப்படையாக பேசினார். இதனைக் கேட்டு முகேஷ் அம்பானி கண்கலங்கிய புகைப்படம் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகியது. இந்த திருமணத்துக்காக 10 நாட்களுக்கு குஜராத் விமான நிலையம் சர்வதேச அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் மொத்த திருமண செலவு மட்டும் ரூ.1000 கோடிக்கும் மேல் இருக்கும் என கூறப்படுகிறது.