Vijayakanth Heath Condition: 'நல்லாதான் இருக்கார்! கேப்டன் விஜயகாந்த் திரும்ப வருவார்' - மருத்துவமனையில் நாசர் பேட்டி
Captain Vijayakanth health condition: நடிகர் விஜயகாந்தின் உடல்நிலை குறித்து நடிகர் சங்கத் தலைவர் நாசர் மற்றும் நிர்வாகிகள் நேரில் சென்று நலம் விசாரித்தனர்.
நடிகர் விஜயகாந்த் கடந்த சில தினங்களாக தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருக்கும் நிலையில், அவர் விரைவில் உடல் நலம் தேறி வீடு திரும்ப வேண்டும் என்பதே திரையுலகத்தினர் மற்றும் ரசிகர்களின் வேண்டுதலாக இருந்து வருகிறது.
மருத்துவமனையில் விஜயகாந்த்:
ஒரு திறமையான நடிகர், சமூக நலம் கொண்ட அரசியல் தலைவர் என அனைத்தையும் தாண்டி கேப்டன் விஜயகாந்த் ஒரு மிக சிறந்த மனிதர். கடந்த சில ஆண்டுகளாகவே அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்தால் அரசியல் சார்ந்த பணிகளிலும், திரைப்படங்களிலும் நடிக்காமல் ஒதுங்கி இருந்து வந்தார். இந்த நிலையில் கடந்த சில நாட்கள் முன்னர் அவருக்கு ஏற்பட்ட சளி, இருமல், தொண்டை வலி உள்ளிட்ட காரணங்களால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
கேப்டன் விஜயகாந்த் உடல்நிலை குறித்து இணையத்தில் பலதரப்பட்ட வதந்திகள் பரவி வருவதால் நடிகர் சங்கத்தின் தலைவர் ஆர்.கே. செல்வமணி, நாசர் மற்றும் திரைத்துறையை சேர்ந்த பலரும் மருத்துவமனைக்கு சென்று விஜயகாந்த் உடல்நிலை குறித்து கேட்டறிந்து பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளனர்.
கேப்டன் திரும்ப வருவார்:
கேப்டன் விஜயகாந்த் உடல் நிலை குறித்து தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்ததை பத்திரிகையாளர்களிடம் பகிர்ந்து இருந்தார் நடிகர் நாசர். அவர் பேசுகையில் "கேப்டன் நார்மலாக தான் இருக்கிறார். நன்றாக இருக்கிறார். அவரின் அனைத்து புலன்களும் நன்றாக ரெஸ்பாண்ட் செய்கிறது. கொஞ்ச நாட்களாக வெளிவரும் செய்திகள் அனைத்து மிகைப்படுத்தப்பட்ட செய்திகளாகவே வெளியாகிறது. அவை அனைத்துமே வதந்திகள் தான்.
நாங்கள் மருத்துவமனையின் தலைமை மருத்துவரை சந்தித்து பேசினோம். கேப்டன் திரும்பவும் வருவார், உங்களை எல்லாம் பார்ப்பார் என தெளிவாக சொல்லிவிட்டார். அதனால் தயவு செய்து மிகைப்படுத்தப்பட்ட செய்திகளை வதந்திகளை நம்பாதீர்கள். ஒன்று, இரண்டு மாதங்களுக்கு முன்னாள் அவர் எப்படி இருந்தாரோ அதே போல தான் இப்போதும் இருக்கிறார்.
நம்பிக்கை:
எங்களின் கேப்டன் திரும்பி வருவார், எங்களோடு தோன்றுவர், எங்களோடு உரையாடுவார் என்பது தான் எங்களது நம்பிக்கை. அவருக்கு இன்ஃபெக்ஷன் இருப்பதால் அவர் நேரில் சென்று பார்க்க முடியாது. அவரை பார்ப்பது முக்கியமல்ல, செய்திகள் தான் நமக்கு முக்கியம். அவரை சந்திக்க முடியாது என்பது மெடிக்கல் ப்ரோடோகால். அவர் வென்டிலேஷனில் எல்லாம் கிடையாது" என தகவல் தெரிவித்து இருந்தனர்.
கேப்டன் விஜயகாந்த் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என திரை பிரபலங்கள், ரசிகர்கள் பலரும் சோசியல் மீடியாவில் அவரவர்களின் பிராத்தனையை பதிவிட்டு வருகிறார்கள்.