மேலும் அறிய
Advertisement
Captain Miller First Single: தனுஷ் பாடிய கேப்டன் மில்லர் படத்தின் சிங்கில் பாடல்...அப்டேட் கொடுத்த படக்குழு..!
Captain Miller First Single: கேப்டன் மில்லர் படத்தின் முதல் பாடல் நாளை வெளியிடப்படும் என்று படக்குழு அறிவித்துள்ளது.
Captain Miller First Single: தனுஷ் நடித்துள்ள கேப்டன் மில்லர் படத்தின் முதல் பாடல் நாளை வெளியிடப்படும் என்று படக்குழு அறிவித்துள்ளது.
அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடித்திருக்கும் படம் கேப்டன் மில்லர். வரலாற்று ஜானரில் எடுக்கப்பட்டுள்ள கேப்டன் மில்லர் படத்தை சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ளது. படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். மிரட்டலான காட்சிகள் தனுஷ் நடித்துள்ள கேப்டன் மில்லர் படத்தில், பிரியங்கா அருள் மோகன், நிவேதிதா சதிஷ், ஜான் கொக்கன், சுமேஷ் மூர் மற்றும் சிவராஜ் குமார் உள்ளிட்டோர் முக்கிய ரோலில் நடித்துள்ளனர்.
அணமையில் படப்பிடிப்பு முடிந்த நிலையில் போஸ்ட் புரொடெக்ஷன் பணிகள் நடந்து வருகின்றன. இதற்கிடையே, கேப்டன் மில்லர் படம் பொங்கலுக்கு ரிலீசாகும் என படக்குழு அறிவித்திருந்தது. இந்த நிலையில் கேப்டன் மில்லர் படத்தின் முதல் பாடல் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது தொடர்பாக படக்குழு வெளியிட்ட அறிவிப்பில், கேப்டன் மில்லர் படத்தின் முதல் பாடலான ‘கில்லர் கில்லர்’ வரும் 22ம் தேதி வெளியாகும் என்று, முகத்தை மூடியபடி துப்பாக்கியுடன் தனுஷ் அமர்ந்திருக்கும் புகைப்படத்துடன் அறிவிக்கப்பட்டுள்ளது.
Get ready folks ! @gvprakash x @dhanushkraja all set to drop a Banger 🔥
— Sathya Jyothi Films (@SathyaJyothi) November 20, 2023
First single Killer Killer from #CaptainMiller ,Releasing on November 22nd (Wednesday) 🥁
Lyrics @kabervasuki @ArunMatheswaran @NimmaShivanna @sundeepkishan @priyankaamohan @saregamasouth pic.twitter.com/FnTb39TxVH
பாடலுக்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ள நிலையில், பாடல் வரிகளை கேபர் வாசுகி எழுதியுள்ளார். கேப்டன் மில்லர் படத்தில் ஹீரோயினாக நடித்துள்ள பிரியங்கா மோகனின் பிறந்த நாளை ஒட்டி படத்தின் முதல் பாடல் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஜிவி இசையில், தனுஷ் குரலில், கேபர் வாசுகி வரிகளில் வெளிவர இருக்கும் முதல் சிங்கில் பாடலை கேட்க ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கின்றனர்.
முன்னதாக கேப்டன் மில்லர் படம் டிசம்பர் 15ம் தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், சில காரணங்களுக்காக கேப்டன் மில்லர் படம் பொங்கலுக்கு ரிலீசாகும் என படக்குழு தெரிவித்தது. படத்தில் கேப்டன் மில்லராகவும், ஈசா மற்றும் அனலிசன் என மூன்று கேரக்டர்களில் தனுஷ் நடித்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் படிக்க: Kalaignar 100: "அமிதாப், ரஜினி, கமல்" கலைஞர் 100 விழா மேடைக்கு தயாராகும் இந்திய திரை பிரபலங்கள்!
சமீபத்திய பொழுதுபோக்கு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் பொழுதுபோக்கு செய்திகளைத் (Tamil Entertainment News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கல்வி
இந்தியா
கல்வி
க்ரைம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion