Nayanthara: காத்துவாக்குல கேன்ஸ் தகவல்.. வியப்பில் நயன்தாரா - விக்னேஷ் சிவன்!
Nayanthara in Cannes: நயன்தாரா பிரான்ஸில் நடைபெறும் கேன்ஸ் 2022 சர்வதேச விழாவில் பங்கேற்கப்போகிறார் என தகவல் வெளியாகியுள்ளது.

காத்துவாக்குல ரெண்டு காதல் பட வெற்றிக் களிப்பிலும் திருமண ஆயத்தப் பணிகளிலும் பிஸியாக உள்ள நயன்தாரா, விக்னேஷ் சிவன் ஜோடியை வியப்பில் ஆழ்த்தியுள்ளது அவர்கள் இருவரும் ஜோடியாக பிரான்ஸில் நடைபெறும் கேன்ஸ் 2022 சர்வதேச விழாவில்(Cannes Film Festival 2022) பங்கேற்கப்போகின்றனர் என்ற தகவல்.
திரைத்துறையில் மிகவும் முக்கியமான ஒன்றாக கருதப்படுவது பிரான்ஸ் நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழா (Cannes Film Festival). கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில், உலகெங்கும் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 20 திரைப்படங்கள் போட்டியில் பங்குபெறும். இதிலிருந்து நடுவர்கள் குழு தேர்ந்தெடுக்கப்படும் கலைப்படைப்புக்கு விருது வழங்கப்படும். இந்த 75வது ஆண்டு கேன்ஸ் திரைப்பட விழா 2022 மே 17 முதல் 28 வரை நடைபெற இருக்கிறது.
பாலிவுட் சூப்பர் ஸ்டார் அக்ஷய் குமார், இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான், திரைப்பட தயாரிப்பாளர் சேகர் கபூர் மற்றும் நடிகை பூஜா ஹெக்டே உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் இந்தியக் குழுவின் ஒரு பகுதியாக 75 வது கேன்ஸ் திரைப்பட விழாவின் தொடக்க நாளில் சிவப்பு கம்பளத்தில் நடக்க உள்ளனர். இசையமைப்பாளர் ஏ. ஆர். ரஹ்மான், நடிகர்கள் மாதவன், அக்ஷய் குமார், நடிகைகள் நயன்தாரா, தமன்னா உள்ளிட்ட 12 பேர் தென்னிந்தியாவிலிருந்து சிவப்பு கம்பள வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதில் நயன்தாராவின் பெயர் எப்படி வந்தது என்று நயனும், விக்கியுமே ஆச்சர்யத்தில் இருக்கின்றனராம். இந்தத் தகவல் எங்கிருந்து எப்படிப் பரவ ஆரம்பித்தது என்று கூட தெரியாமல் நயன்தாரா, விக்னேஷ் சிவன் குழப்பத்தில் உள்ளனராம்.
சரி நயனின் எல்லா முக்கிய அறிவிப்புகளையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தானே விக்கி அறிவிப்பார் என்று அவரது இன்ஸ்டா பக்கத்திற்கு சென்று பார்த்தால் கடைசியாக விக்கி கவுசாலுக்கு பிறந்தநாள் வாழ்த்துச் சொல்லி அவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தைத் தான் விக்கி பகிர்ந்திருக்கிறார். விக்கி கவுசால் யாரென்று கேட்காதீர்கள். சமீபத்தில் தான் பாலிவுட் பதுமை கத்ரீனா கைஃபை கரம்பிடித்தார் விக்கி.
View this post on Instagram
சரி அதெல்லாம் இருக்கட்டும், பிரபலம் என்பதால் அவர்களுக்கே தெரியாமல் அவர்களைப் பற்றி இப்படியெல்லாம் தகவல் பரவுவது வேறு லெவல் தான். விக்கி பாணியிலேயே சொல்லணும்னா காத்துவாக்குல எப்படியெல்லாம் செய்தி பரவுது பாருங்க. ஜூன் 7ல் இந்த ஜோடி திருப்பதியில் திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும் சொன்னாங்க. அதுவும் எவ்வளவு தூரம் நம்பகமானது என்று பொறுத்திருந்து பார்ப்போம். ஆனால் கேன்ஸ் செய்தியால் ஆச்சர்யமடைந்த நயன்தாரா திருமண செய்தியால் ஆச்சர்யமடையாதது சந்தேகங்களை எழுப்புகிறது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

