Le Musk Cannes 2022: ’இது மனைவியின் ஐடியா’ : இயக்குநராக அறிமுகமாகும் ஏ.ஆர்.ரஹ்மான்.. முதல் திரைப்படமே கேன்ஸ் திரைப்பட விழாவில்..
லீ மஸ்க் திரைப்படத்தின் கதையை குராச்சி ஃபீனிக்ஸ் எழுத, இயக்கத்தை தொடர்ந்து ஏ.ஆர் ரஹ்மான் இந்த திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
ஆஸ்கார் விருது பெற்ற இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான் இயக்குநராக அறிமுகமாகும் முதல் திரைப்படமான லீ மஸ்க், கேன்ஸ் பிலிம் மார்க்கெட்டின் வரவிருக்கும் கேன்ஸ் எக்ஸ்ஆர் நிகழ்ச்சியில் திரையிடப்பட இருக்கிறது.
திரைத்துறையில் மிகவும் முக்கியமான ஒன்றாக கருதப்படுவது பிரான்ஸ் நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழா (Cannes Film Festival). இந்த விழாவில், உலகெங்கும் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 20 திரைப்படங்கள் போட்டியில் பங்குபெறும். இதிலிருந்து நடுவர்கள் குழு தேர்ந்தெடுக்கப்படும் கலைப்படைப்புக்கு விருது வழங்கப்படும். இந்த 75வது ஆண்டு கேன்ஸ் திரைப்பட விழா 2022 மே 17 முதல் 28 வரை நடைபெற இருக்கிறது.
இந்தநிலையில், கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்படும் லீ மஸ்க் கதையை, ரஹ்மான் மனைவி சாய்ராவின் யோசனை சொல்ல, அதன்பின் ஏஆர் ரஹ்மான் கதையை இயக்கியுள்ளார். இந்த கதை ஜூலியட் மெர்டினியன் வாசனை திரவியங்களில் காதல் மற்றும் இசைக்கலைஞரின் வாழ்வை பிரதிபலிக்கிறது. ஜூலியட் மெர்டினியன் தான் சிறுவயது முதல் அநாதையாக இருந்தநிலையில், 20 ஆண்டுகளுக்குப் பிறகு தனது விதியை மாற்றிய ஆண்களைக் கண்டுபிடிப்பதில் பயணம் செய்கிறார். அதுவே, இந்த லீ மஸ்க் திரைப்படத்தின் கதை.
View this post on Instagram
ஏ.ஆர்.ரஹ்மான் இயக்குநராக அறிமுகமான லீ மஸ்க் திரைப்படம் :
லீ மஸ்க் திரைப்படத்தின் கதையை குராச்சி ஃபீனிக்ஸ் எழுத, இயக்கத்தை தொடர்ந்து ஏஆர் ரஹ்மான் இந்த திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார். 36 நிமிட படமாக உருவாகியுள்ள இந்த படத்தில் நோரா அர்னிடேசர் மற்றும் கை பர்னட் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
ரோம் நகரில் லீ மஸ்க் திரைப்படம் 14 வெவ்வேறு கேமராக்களில் 'சூப்பர்-ரெசல்யூஷன் தரமான வீடியோக்களை கொண்டு தரமான படமாக உருவெடுத்துள்ளது. ஐடியல் என்டர்டெயின்மென்ட் மற்றும் இன்டெல் ஆகியவற்றுடன் இணைந்து ரஹ்மானின் ARR ஸ்டுடியோ தயாரித்துள்ளது. மேலும், தேனாண்டாள் ஸ்டுடியோ மற்றும் பழனி ஆண்டவர் ஹோல்டிங்ஸ் நிறுவனங்கள் இந்த படத்திற்கு இணை தயாரிப்பாளராக உள்ளனர்.
இதையடுத்து, நடிகர் ஆர் மாதவன், இயக்குநராக அறிமுகமான "ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட்" மே 19 ம் தேதி திரையிடப்பட இருக்கிறது. தொடர்ந்து, ஜெய்செங் க்சாய் தோஹுடியாவின் "பாக்ஜன்" (அஸ்ஸாமி, மோரன்), சைலேந்திர சாஹூவின் "பைலடிலா" (இந்தி, சத்தீஸ்கர்ஹி), "ஏக் ஜகா அப்னி" ஆகியவை அடங்கும். (இந்தி) ஏக்தாரா கலெக்டிவ், "பாலோவர்" (மராத்தி, கன்னடம், இந்தி) ஹர்ஷத் நலவாடே; மற்றும் ஜெய் சங்கரின் "சிவம்மா" (கன்னடம்) ஆகியவை திரையிடப்பட இருக்கின்றனர்.
பாலிவுட் சூப்பர் ஸ்டார் அக்ஷய் குமார், இசை மேஸ்திரி ஏ.ஆர்.ரஹ்மான், திரைப்பட தயாரிப்பாளர் சேகர் கபூர் மற்றும் நடிகை பூஜா ஹெக்டே உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் இந்தியக் குழுவின் ஒரு பகுதியாக 75 வது கேன்ஸ் திரைப்பட விழாவின் தொடக்க நாளில் சிவப்பு கம்பளத்தில் நடக்க உள்ளனர். கேன்ஸ் செல்லும் இந்த குழுவை மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் இந்தியாவில் இருந்து வழிநடத்துவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த விழாவில் நாட்டுப்புற பாடகர் மேம் கான், நடிகர்கள் நவாசுதீன் சித்திக், நயன்தாரா, தமன்னா மற்றும் வாணி திரிபாதி, இரண்டு முறை கிராமிய விருது பெற்ற இசையமைப்பாளர் ரிக்கி கேஜ், மற்றும் CBFC தலைவர் பிரசூன் ஜோஷி ஆகியோரும் பங்கேற்க இருக்கின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்