மேலும் அறிய

Canadian Actor Death: பி.டி.எஸ் இசைக்கலைஞர் ஜிமினைப்போல மாற விரும்பி உயிரிழந்த கனடா நடிகர்!

Canadian Actor Death: பிரபல கொரிய பாடகர் ஜிமினை போல மாற விரும்பி கனடாவை சேர்ந்த நடிகர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கனடாவை சேர்ந்த செயின்ட் வான் குலோசி (Saint Von Colucci) என்ற நடிகர், பி.டி.எஸ் கலைஞர் ஜிமினின் பெரிய ரசிகராக இருந்துள்ளார். ஜிமினைப்போல மாற வேண்டும் என ஆசைப்பட்டு பல அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டு பரிதாமாக உயிரிழந்துள்ளார். 

கனடா நடிகர்:

கனடாவில் உள்ள க்யூபெக் என்ற நகரில் வசித்து வந்த 22 வயது இளம் நடிகர், செயின்ட் வான் குலோசி. 2015 ஆம் ஆண்டு திரைத்துறையில் விளம்பர மாடலாக அறிமுகமாகியுள்ளார். நடிகராக வேண்டும் என்ற ஆசையால் கடந்த 2019ஆம் ஆண்டு கனடாவில் இருந்து தென் கொரியாவிற்கு குடிபெயர்ந்துள்ளார். தென் கெரியாவிற்கு வந்த பிறகு, சில பாடல்கள் எழுதியுள்ளார். இசைக்கலைஞர் ஆகும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளார். பிரபல தென்கொரிய இசைக்குழுவான பி.டி.எஸ் குழுவின் பாடல்களால் பெரிதும் ஈர்க்கப்பட்ட இவர், அந்த குழுவின் முக்கிய நபரான ஜிமினின் ரசிகராக இருந்துள்ளார். அதுவே, அவரது உயிரிழப்புக்கும் காரணமாகியுள்ளது. 


Canadian Actor Death: பி.டி.எஸ் இசைக்கலைஞர் ஜிமினைப்போல மாற விரும்பி உயிரிழந்த கனடா நடிகர்!

உயிரிழந்த பரிதாபம்!

ஜிமினின் பெரிய ரசிகரான செயின்ட் வான் குலோசி, அவரைப் போலவே மாற வேண்டும் என்று ஆசைப்பட்டுள்ளார். இதற்காக அவர் முகச் சீரமைப்பு அறுவை சிகிச்சை, மூக்கிற்கான அறுவை சிகிச்சை, உதட்டில் உள்ள தசையை குறைக்கும் சிகிச்சை, கண்களுக்கான சிகிச்சை என மொத்தம் 12 முகமாற்று அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டுள்ளார்.  இதனால், அவர் இதுவரை இரண்டு லட்சத்து 20 ஆயிரம் டாலர்கள் வரை செலவு செய்துள்ளதாக அவரது உதவியாளர் கூறியுள்ளார். 

இத்தனை அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டதால், சில மாதங்களுக்கு முன்பிருந்தே பல்வேறு பிரச்சனைகளால் செயின்ட் வான் பாதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், கடந்த சனிக்கிழமை அன்று மாற்று அறுவை சிகிச்சைக்காக செயின் வான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அந்த சிகிச்சைக்கு பிறகு, அவருக்கு நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. அதன் பிறகு, சில மணிநேரத்தில் அவர் உயிரிழந்துள்ளார். 

இத்தனை அறுவை சிகிச்சைக்கு காரணம் என்ன?

இப்படி பரிதாபமாக உயிரிழந்துள்ள இந்த இளைஞர் எப்படி இருந்தார் என்பது குறித்து அவரது உதவியாளர் ஊடகத்திடம் கூறியுள்ளார். அந்த நடிகருக்கு பொன்னிறத்தில் முடி இருந்ததாகவும் அவரது கண்கள் நீல நிறத்தில் இருந்ததாகவும் அவர் 6 அடி வரை உயரத்துடன் இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். 


Canadian Actor Death: பி.டி.எஸ் இசைக்கலைஞர் ஜிமினைப்போல மாற விரும்பி உயிரிழந்த கனடா நடிகர்!

தாடை மாற்று அறுவை சிகிச்சையால்தான் இப்போது அந்த நடிகர் உயிரிழந்துள்ளார். ஆனால், அந்த சிகிச்சையில் இருக்கப்போகும் ஆபத்துகள் குறித்தும் அவருக்கு முன்னரே தெரிந்திருந்துதான் அதற்கு ஒப்புக்கொண்டாராம். இருப்பினும் அவரது தோற்றம் குறித்து அவருக்கு தாழ்வு மனப்பான்மை இருந்ததால் ஜிமின் போல மாற வேண்டும் என்று அவர் முடிவெடுத்தாராம். 

அது மட்டுமன்றி, தென் கொரியாவிற்கு நடிகர் வந்த புதிதில் அவருக்கு வேலை கிடைக்கவில்லையாம். இந்த நாட்டில் அனைவரும் ஆசியாவை சேர்ந்தவர்களாக இருப்பதாலும், இவர் அவர்களைப் போல இல்லாததால் அவரை பிறர் பாரபட்சத்துடன் பார்த்ததாகவும் கூறப்படுகிறது. 

விரைவில் வெளிவர இருக்கும் நடிகரின் தொடர்:

கொரிய நடிகர்கள் பலர் நடித்துள்ள ப்ரிட்டி லைஸ் என்ற தொடரில், செயின்ட் குலோசி நடித்துள்ளார் என அந்நாட்டு ஊடகங்கள் சில கூறியுள்ளன. அந்த தொடரில், ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள இவர் வெளிநாட்டு மாணவராக வருகிறாராம். இந்த தொடர் வரும் அக்டோபர் மாதத்தில் வெளிவர உள்ளது. 

தலைப்பு செய்திகள்

DC movie Collection: ஹீரோவாகவும் மாஸ் காட்டிய லோகேஷ் கனகராஜ்! ! 'DC' படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
ஹீரோவாகவும் மாஸ் காட்டிய லோகேஷ் கனகராஜ்! ! 'DC' படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
DC படத்தில் லோகேஷ் கனகராஜூக்கு பதிலாக இந்த தெலுங்கு நடிகர் நடிக்க இருந்தாரா?
DC படத்தில் லோகேஷ் கனகராஜூக்கு பதிலாக இந்த தெலுங்கு நடிகர் நடிக்க இருந்தாரா?
விஜய்யின் உடைந்த குடும்பத்தை காப்பாற்றியது யார்? - சங்கீதாவின் திடீர் முடிவுக்கு காரணம் என்ன? வெளியான உண்மைகள்
விஜய்யின் உடைந்த குடும்பத்தை காப்பாற்றியது யார்? - சங்கீதாவின் திடீர் முடிவுக்கு காரணம் என்ன? வெளியான உண்மைகள்
"விஜய், அஜித், விக்னேஷ்னு இருந்துச்சு.. காலம் கைவிட்ருச்சு.." நொந்து பேசிய முன்னாள் ஹீரோ!

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
US Iran War: “சும்மா மேல இருந்து மட்டும் குண்டு போட்டா வேலைக்கு ஆகாது“; ட்ரம்ப்புக்கு US ராணுவ ஜெனரல் வார்னிங்
“சும்மா மேல இருந்து மட்டும் குண்டு போட்டா வேலைக்கு ஆகாது“; ட்ரம்ப்புக்கு US ராணுவ ஜெனரல் வார்னிங்
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
US Tariff on India: இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
Zelensky Serbia Weapons: பலே கில்லாடி மா நீ.! ரஷ்யாவின் நட்பு நாட்டிடமே ஆயுதங்களை கேட்கும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி; கிடைக்குமா.?
பலே கில்லாடி மா நீ.! ரஷ்யாவின் நட்பு நாட்டிடமே ஆயுதங்களை கேட்கும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி; கிடைக்குமா.?
Lottery Martin's donation ; ”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
Best Selling Midsize SUV: எத்தன புது SUV வந்தாலும் தோத்துதான் ஓடனும்.! விற்பனையில் தொடர்ந்து முதலிடம்; அசத்தும் அந்த கார் எது.?
எத்தன புது SUV வந்தாலும் தோத்துதான் ஓடனும்.! விற்பனையில் தொடர்ந்து முதலிடம்; அசத்தும் அந்த கார் எது.?
Embed widget