'சினிமாவை விட்டு போகமுடில.. நிறைய அடி வாங்கிட்டேன்' - மனம் திறந்த பாய்ஸ் மணிகண்டன்!
திரைப்பட வாய்ப்புகள் இல்லையென்றாலும் தன்னம்பிக்கையோடு பேசுகிறார் பாய்ஸ் பட நடிகர் மணிகண்டன்
பாய்ஸ் மணிகண்டன்:
சங்கர் இயக்கத்தில் வெளியான பாய்ஸ் படத்தில் நடித்த மணிகண்டனை பலருக்கும் தெரியும், கதாபாத்திரத்திற்கு ஏற்றவாறு நடித்து, இன்றும் பலரது நினைவுகளில் இருக்கிறார். ஆனால் தற்போது சினிமா வாய்ப்புகள் இல்லையென்றாலும், மிகுந்த தன்னம்பிக்கையோடு பேசுகிறார்.
சினிமா வாழ்க்கை பிடித்துவிட்டது:
பாய்ஸ் படத்தின் மூலம் நடிகன் ஆயிட்டேன் ,சினிமா வாழ்க்கை பிடித்துவிட்டது. சினிமா தான் வாழ்க்கை ஆயிருச்சு, அதனால் சினிமாவை விட்டு போக முடியல,
என் அம்மாவுக்கு நிறைய செய்யனும் ஆதங்கம் இருக்கு. பாய்ஸ் , கிச்சா வயசு பதினாறு, யுகா படம் பண்ணிட்டு இருந்தப்போ அப்பா மறைந்துவிட்டார். அதன் பிறகு அம்மா தான் எல்லா பிரச்னையும் பார்த்துக்கிட்டாங்க. ஒரு தடவ அம்மா கூட பேசிட்டு இருக்கும் போது, தாயும், நாயும் ஒன்னுனு சொல்லிட்டேன். என் அம்மா கோபித்து கொண்டாங்க, நான் ஏன் சொன்னேன்னா, என் அம்மாவை அவ்ளோ உயர்வா பார்க்கிறேன், அதே போலத்தான் வாய் பேச முடியாத ஜீவனையும் பார்க்கிறேன், அந்த அர்த்தத்தில் தான் கூறினேன் என இரக்க குணத்துடன் பேசுகிறார்.
”சங்கர் சாரை பார்க்கனும்”
என் வாழ்க்கை இப்படி இருப்பதற்கு நான் தான் காரணம், என் பழக்க வழக்கமும் காரணம் தான் என ஆன்மிக தன்மையுடனும் பேசுகிறார். விஜய் சேதபதி என் நடிப்பை பற்றி பாராட்டி பேசியது ரொம்ப மகிழ்ச்சியை தந்தது, அவர் பார்க்கணும் நினைச்சேன். சங்கர் சார பார்க்கனும் ,நல்லதா எதாவது பண்ணிட்டு பார்க்கனும் நினைச்சேன், இவ்ளோ நாள் ஆகும்னு நினைத்து பார்க்கல என கவலையையும் சிரித்துக் கொண்டே சொல்கிறார்,
காசு முன்னாடி செல்லாது:
தோல்வி பெற்றவனா என்ன சிலர் பார்க்கிறாங்க, ஆனால், தேசமா, ஞானமா, பூசையா,கல்வியா காசு முன்னாடி செல்லாது, என பணம் குறித்து, பராசக்தி திரைப்படத்தில் உள்ள கலைஞர் வரிகளை மேற்கோளுடன் விளக்குகிறார். பாலைவனத்துல தண்ணீர் இல்லாதவனுக்கு கடைசி நேரத்துல, மழை பேஞ்சு, அதை குடிச்சு வாழ்ற மாதிரி என் வாழ்க்கை போயிட்டிருக்கு.
என் வாழ்க்கைல பெண் இல்லைனு ஆதங்கம் இருக்கு, ஆனால் எல்லாத்துக்கும் ஏதோ தகுதி இருக்குனு நினைக்கிறேன், அதை சரி பன்னிட்டு இருக்கேன் என தன்னம்பிக்கையோடும், வெகுளித்தனாமாகவும் பாய்ஸ் மணிகண்டன் பேசுகிறார்.
Also Read: Best Actor Award: நீ ஜெயிச்சிட்ட மாறா.. பிறந்தநாள் பரிசாக தேசிய விருதை தட்டித்தூக்கிய சூர்யா..!
Also Read: National Film Awards : சிறந்த பின்னணி இசை அமைப்பாளருக்கான தேசிய விருது பெறுகிறார் ஜி.வி. பிரகாஷ்..
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்