
இன்ஸ்டாகிராமில் இணைந்துள்ள போனி கபூர்.. நடிகை ஸ்ரீதேவியுடனான பழைய Unseen படங்கள் வெளியீடு!
சமீபத்தில் இன்ஸ்டாகிராம் தளத்தில் இறங்கியுள்ளார் பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூர். இன்ஸ்டாகிராம் தளத்தில் அக்கவுண்ட் தொடங்கியவுடன் தன் குடும்பத்தின் பழைய படங்களைப் பதிவிட்டு வருகிறார் போனி கபூர்.

சமீபத்தில் இன்ஸ்டாகிராம் தளத்தில் இறங்கியுள்ளார் பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூர். இன்ஸ்டாகிராம் தளத்தில் அக்கவுண்ட் தொடங்கியவுடன் தன் குடும்பத்தின் பழைய படங்களைப் பதிவிட்டு வருகிறார் போனி கபூர். கடந்த ஜனவரி 18 அன்று, மறைந்த தன் மனைவி ஸ்ரீதேவியுடன் அவர் எடுத்துக் கொண்ட படங்களைப் பதிவிட்டிருந்தார் போனி கபூர். கடந்த 2012ஆம் ஆண்டு, துர்கா பூஜை கொண்டாட்டங்களின் போது இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது. அந்தப் படத்திற்கான கேப்ஷனில், `2012ஆம் ஆண்டு லக்னோவில் துர்கா பூஜை கொண்டாடிய போது’ என அவர் குறிப்பிட்டுள்ளார். பாலிவுட்டின் முதல் பெண் சூப்பர்ஸ்டார் என்று அழைக்கப்பட்ட நடிகை ஸ்ரீதேவி கடந்த 2018ஆம் ஆண்டு துபாயின் குடும்ப நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள சென்ற போது உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படத்தைப் பதிவிடுவதற்கு முன்பு, கான் திரைப்பட விழாவில் எடுத்துக் கொண்ட படத்தைப் பகிர்ந்திருந்தார் போனி கபூர். அதில் அவர், `இருவருக்கும் இனிப்புகள் என்றால் பிடிக்கும்; எவ்வளவு உண்ண வேண்டும் என்பதில் அவர் கட்டுப்பாட்டுடன் இருந்தார்; எனக்குக் கட்டுப்பாடு எதுவும் இல்லை’ என அவர் குறிப்பிட்டிருந்தார்.
View this post on Instagram
டோக்கியோவில் எடுத்த படம் ஒன்றைப் பதிவிட்ட போனி கபூர், அதில் `இங்க்லீஷ் விங்க்லீஷ்’ படத்தின் வெளியீட்டிற்காக ஜப்பான் சென்ற போது எடுத்த படம். தற்போதும் ஜப்பானில் அதிக லாபம் ஈர்த்த படங்களுள் அதுவும் ஒன்று’ என அவர் குறிப்பிட்டிருந்தார்.
View this post on Instagram
2017ஆம் ஆண்டு `மாம்’ என்ற படத்தில் இறுதியாக நடித்திருந்தார் ஸ்ரீதேவி; இதன் தயாரிப்பாளரும் போனி கபூர் தான். இந்தப் படத்திற்காக அவர் மறைந்த பின், 2018ஆம் ஆண்டு அவருக்குச் சிறந்த நடிகைக்கான தேசிய விருது வழங்கப்பட்டது.
View this post on Instagram
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

