மேலும் அறிய

பாலிவுட்டுக்கு படையெடுக்கும் சவுத் குயின்ஸ்... மீண்டும் திரும்பும் 80ஸ் நிலை!

நயன் முதல் சமந்தா வரை அதிக டிமாண்ட் உள்ள தென்னிந்திய நடிகைகள்

லேடி சூப்பர் ஸ்டார் நயன் ஷாருக்கானுடன் ஜவான் படம் நடிக்கவுள்ள நிலையில் நடிகை ராஷ்மிகா மந்தனா மிஷன் மஜ்னு மற்றும் குட்பாய் ஆகிய படங்களில் நடித்து கொண்டிருக்கிறார். அதுபோல் தென்னிந்தியாவின் சென்சேஷனல் நடிகை சமந்தா பேமிலி மேன் 2 வில் நடித்து பல சர்ச்சைகளுக்குள் மாட்டினார்.

பிரச்சனைகள் ஒரு புறம் வந்தாலும் நடிகை சமந்தா பல பாலிவுட் படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அதுவும் சாதாரண படங்கள் அல்ல, எல்லாம் பெரிய பட்ஜெட்டில் இயக்கப்படவுள்ள படமாகும். பீஸ்ட் பட நாயகி பூஜா ஹெக்டேவும் ஹிந்தி சினிமாவில் தனக்கான தனி ரசிகர்களை உறுவாக்கிவிட்டார். இவர்கள் எல்லாம் தென்னிந்திய சினிமாவில்  கொடி கட்டி பறந்து வரும் நடிகைகள்.

View this post on Instagram
 
A post shared by Vignesh Shivan (@wikkiofficial)

தற்போது பாலிவுட் திரையுலகத்தினர், இவர்களுக்கான கால்ஷீட்டை போட்டி போட்டு வாங்கி வருகின்றனர். முன்னதாக ஹிந்தியில் கலக்கும் நடிகைகளுக்கு  அதிக மவுசு இருந்தது. அவர்கள் அனைவரையும் தமிழ் சினிமாவில் நடிக்க வைக்க இயக்குநர்கள் படாத பாடு பட்டனர். இப்போது எல்லாமே உல்டா-புல்டாவாக மாறிவிட்டது என்றே சொல்லலாம்.

கடந்த காலத்தில் ரேகா, ஹேம மாலினி, ஸ்ரீதேவி, ஜெயபிரதா ஆகிய பிரபல பாலிவுட் நடிகைகள் அனைவரும் தெற்க்கில் இருந்து வடக்கிற்கு சென்று ஃபேமஸ் ஆனவர்கள். இந்த ட்ரெண்ட் அப்பொது இருந்து வந்தது ஆனால் சமீப நாட்களில் மறைந்து போனது. இப்போது இருக்கும் தென்னிந்திய நடிகைகள்  இங்கேயே செட்டில் ஆகி விடுகின்றனர். முன்பு போல் மும்பைக்கு சென்றால்தான் நடிக்க வாய்ப்பு கிடைக்கும் என்ற நிலை இன்று இல்லை.

சில சமயங்களில் பெரிய நடிகர்களுடன் நல்ல கதை அமைந்தால் அவர்கள் பாலிவுட் வாசலை ஏட்டி பார்ப்பதும் உண்டு. தங்களது திறமையையும் கடின உழைப்பையும் மட்டும் வைத்து தங்களுக்கான அங்கீகாரத்தை பெற்று வருகின்றனர். பாலிவுட் நடிகைகளோ , தேவையில்லாத விஷயங்கள் வைத்து பேசு பொருளாக  வலம்வந்து கொண்டிருக்கின்றனர். இவர்களால் ஊடகங்களுக்கு அடிக்கடி கண்டண்ட் சிக்கி விடுகிறது. ஆனால் , தென்னிந்திய நடிகைகள் தனிப்பட்ட விஷயங்களை அதிகம் பகிர்ந்து கொள்ள மாட்டார்கள்.

அவர்களை வெளியே பார்ப்பது கூட அரிதாகவே இருக்கும். தென்னிந்திய நடிகைகளுடன் நேர்காணல் நடத்த வாய்ப்பு  கிடைப்பதும் ரொம்ப கஷ்டம். நடிகை நயனும் அப்படிதான், ஆனால்  தற்போது அட்லி இயக்கபோகும் ஜவான் படத்தில் நடிக்கபோகிறார்.

View this post on Instagram
 
A post shared by Samantha (@samantharuthprabhuoffl)

டெம்ளேட் செட் செய்தது போல் பாலிவுட்  நடிகைகள் பார்க்க ஸ்லிமாகவும், உயரமாகவும் இருப்பார்கள். ஆனால் இங்கு ஒரு ஒருவரும் அவர்களுக்கான  தனி அழகை பெற்றவர்கள். சிம்பிளாக மேக் - அப் போட வில்லையென்றாலும் இயற்கை அழகிகளாக சிறகடித்து வருபவர்கள் செளத் குயின்ஸ்!

இப்போது தனி தனி மொழிகளில் படம் எடுக்காமல் பான் இந்திய படம் என்ற பெயரில்  ஒரே படத்தை பல மொழிகளில் வெளியிடுகின்றனர். இந்திய சினிமா என்ற ஒரே கூடாரத்தில் நிக்கவைத்துள்ளது பாகுபலி,கேஜிஎஃப், புஷ்பா, ஆர் ஆர் ஆர் போன்ற படங்கள். இதனால் ஹீரோயின்களை மாற்றி மாற்றி வாடகைக்கு எடுத்து வருகின்றனர் இந்திய சினிமாவின் இயக்குநர்கள்.

இப்போது கண்டண்ட் ரீதியாக செளத் சினிமா கலக்கி வருகிறது. உலகில் உள்ள சினிமா ரசிகர்கள் எல்லாரும் மொழி கடந்து பொழுதுபோக்கிற்காக  படங்களை பார்க்க ஆரம்பித்துவிட்டனர் என்ற கருத்தை மறுக்க முடியாது.

தலைப்பு செய்திகள்

‘ஸ்பிரிட்’ படத்திலிருந்து தீபிகா படுகோன் விலகியது ஏன்? தயாரிப்பாளர் பிரணய் ரெட்டி வங்கா கூறிய காரணங்கள்
‘ஸ்பிரிட்’ படத்திலிருந்து தீபிகா படுகோன் விலகியது ஏன்? தயாரிப்பாளர் பிரணய் ரெட்டி வங்கா கூறிய காரணங்கள்
கிணத்துக்கடவு தொகுதியில் சீட் கேட்டேனா? லோகேஷ் கனகராஜ் விளக்கம்
கிணத்துக்கடவு தொகுதியில் சீட் கேட்டேனா? லோகேஷ் கனகராஜ் விளக்கம்
நெல்சன் மேஜிக் எங்கே? ‘ஜெயிலர் 2’ ப்ரோமோவில் ரசிகர்களுக்கு ஏமாற்றம்!
நெல்சன் மேஜிக் எங்கே? ‘ஜெயிலர் 2’ ப்ரோமோவில் ரசிகர்களுக்கு ஏமாற்றம்!
Vijay Sethupathy: விக்ரம் வேதா படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி... அப்புறம் எப்படி ஓகே சொன்னார்?
Vijay Sethupathy: விக்ரம் வேதா படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி... அப்புறம் எப்படி ஓகே சொன்னார்?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK TVK: களேபரமான விவாதம் - அராஜகத்தில் ஈடுபட்ட திமுகவினர்? நாஞ்சில் சம்பத் மீது சேர் தூக்கியடிப்பு
களேபரமான விவாதம் - அராஜகத்தில் ஈடுபட்ட திமுகவினர்? நாஞ்சில் சம்பத் மீது சேர் தூக்கியடிப்பு
TN Weather News: சென்னை உட்பட இன்று எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு? தமிழக வானிலை அறிக்கை
சென்னை உட்பட இன்று எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு? தமிழக வானிலை அறிக்கை
ரேசன் கடையில் கைரேகை, கருவிழி பதிவாகலயா? கவலை வேண்டாம்.. புதிய முறை விரைவில் அறிமுகம்!
ரேசன் கடையில் கைரேகை, கருவிழி பதிவாகலயா? கவலை வேண்டாம்.. புதிய முறை விரைவில் அறிமுகம்!
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்! நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 899 ஆக உயர்த்தப்படும் - அமைச்சர் வெங்கட்ரமணன் அறிவிப்பு
விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்! நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 899 ஆக உயர்த்தப்படும் - அமைச்சர் வெங்கட்ரமணன் அறிவிப்பு
Vijay Sethupathy: விக்ரம் வேதா படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி... அப்புறம் எப்படி ஓகே சொன்னார்?
Vijay Sethupathy: விக்ரம் வேதா படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி... அப்புறம் எப்படி ஓகே சொன்னார்?
நேற்று சொன்ன சிஎம்.. இன்று தலைமைச் செயலகம் வந்த கார்கள் - என்னென்ன வண்டி? என்னென்ன ஸ்பெஷல்?
நேற்று சொன்ன சிஎம்.. இன்று தலைமைச் செயலகம் வந்த கார்கள் - என்னென்ன வண்டி? என்னென்ன ஸ்பெஷல்?
காவிரி நீர்: கர்நாடக சதி வலையில் தமிழகம் சிக்கக்கூடாது; என்னென்ன பிரச்சினைகள்? பட்டியலிட்ட அன்புமணி!
காவிரி நீர்: கர்நாடக சதி வலையில் தமிழகம் சிக்கக்கூடாது; என்னென்ன பிரச்சினைகள்? பட்டியலிட்ட அன்புமணி!
Embed widget