Blue Sattai Maran Tease: வெளியான டான்! தூங்கி வழிகிறதா தியேட்டர்? விமர்சித்த புளூ சட்டை மாறனை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்.. !
சிவகார்த்திகேயனின் ‘டான்’ படத்தை விமர்சனம் செய்யும் வகையில் புளூ சட்டை மாறன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருக்கும் புகைப்படம் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சிவகார்த்திகேயனின் ‘டான்’ படத்தை விமர்சனம் செய்யும் வகையில் புளூ சட்டை மாறன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருக்கும் புகைப்படம் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
— Blue Sattai Maran (@tamiltalkies) May 13, 2022
இந்தப்புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், புளூ சட்டை மாறனிடம் அவரது ‘ஆண்டி இந்தியன்’ படம் பெரும் தோல்வியை அடைந்ததை சுட்டிக்காட்டி கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
View this post on Instagram
சிவகார்த்திகேயனின் சமீபத்திய ஹிட் டாக்டர். இந்த திரைப்படத்திற்கு அடுத்தப்படியாக, அறிமுக இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் இவர் நடித்த ‘டான்’ படம் இன்று வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது. லைகாவுடன் சிவகார்த்திகேயன் இணைந்து தயாரித்திருக்கும் இப்படத்தில், டாக்டரில் சிவாவுடன் ஜோடி சேர்ந்த பிரியங்கா அருள் மோகன் கதாநாயகியாக நடித்துள்ளார்.
View this post on Instagram
இவர்களுடன் ‘குக் வித் கோமாளி’சிவாங்கி, இயக்குநரும் நடிகருமான எஸ்.ஜே. சூர்யா உள்ளிட்டோர் நடித்துருக்கிறார்கள். அனிருத் இசையமைப்பளாராக பணியாற்றி இருக்கிறார். முன்னதாக படம் மார்ச் 25ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்த நிலையில், படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டது. தொடர்ந்து RRR படம் கடந்த மார்ச் 25ம் தேதி வெளியானதால் ‘டான்’ படம் மே மாதம் 13ம் தேதி வெளியிட படக்குழு முடிவு செய்தது குறிப்பிடத்தக்கது.
டான் திரைப்பட விமர்சனம்
DON Review: ‘டான்’.. ரியல் டானா.. இல்ல டன் டன் டனாக்கானா டானா..? - டான் படம் எப்படி இருக்கு- விமர்சனம் இதோ..!